Published:Updated:

பதுக்கப்பட்ட காவிரி... பரிதவிக்கும் டெல்டா...!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: மு. ராமசாமி

பதுக்கப்பட்ட காவிரி... பரிதவிக்கும் டெல்டா...!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: மு. ராமசாமி

Published:Updated:

பிரச்னை

##~##

ஜூன் மாதம் பிறந்து விட்டாலே... 12-ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்துவிடுவார்கள்... டெல்டா (தஞ்சாவூர்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவாரூர், நாகப்பட்டினம்) மாவட்ட விவசாயிகள்! அந்தத் தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால்தான், குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமையும் என்பதே இதற்குக் காரணம்!

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் அணையில் சுமார் 100 அடிக்கும் மேலாக தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்ததால், வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதை ஒரு  சாதனையாகவே சொல்லிக் கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, இந்த ஆண்டு வாய்மூடி மௌனியாகவே இருக்கிறது. காரணம்... தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 79 அடி மட்டுமே!

இதுகுறித்து நம்மிடம் கவலை பொங்க பேசிய தமிழக உழவர் முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளர் காசிநாதன், ''மூணு மாவட்டங்கள்ல ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர்ல குறுவை சாகுபடி நடக்கறது வழக்கம். இதுல கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஏக்கர்ல மோட்டார் பம்ப்செட் மூலமா சாகுபடி நடக்கும். ஆனா, விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம்... தினமும் மூணு மணி நேரம் மட்டுமே கிடைக்கறதால, பம்ப்செட் விவசாயிகளும் இந்த வருஷம் காவிரி தண்ணியைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாங்க. ஆனா... இப்போதைக்கு காவிரியில தண்ணி வர்றதுக்கு வாய்ப்பில்லாத சூழல்ல... ஒட்டுமொத்தமா எல்லா விவசாயிகளும் குறுவை சாகுபடியை கைவிடற நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க.

பதுக்கப்பட்ட காவிரி... பரிதவிக்கும் டெல்டா...!

மேட்டூர் அணையோட நீர்மட்டம் 90 அடிக்கு மேல இருந்தாதான் திறக்க முடியும். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்புப்படி, தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தரவேண்டிய காவிரித் தண்ணி சரிவர வர்றதில்ல. இங்க ஆட்சிக்கு வர்ற அரசுகளும் உரிய முறையில அதைக் கேட்டு வாங்கறதுக்குண்டான முயற்சிகள முழுமையா செய்றதில்ல.

கர்நாடகாவுல இருக்கற கிருஷ்ணராஜ சாகர் அணையில... திட்டமிட்டே தண்ணீர் மட்டத்தைக் குறைச்சுக் காட்டிக்கிட்டிருக்கு அந்த மாநில அரசு. 5 ஆயிரம் கோடி ரூபாய்ல புதுசா குளம், ஏரி, வாய்க்கால்னு உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதுல காவிரி தண்ணியைப் பதுக்கி வெச்சுருக்கு அந்த அரசு'' என்று கொதிப்பு காட்டிய காசிநாதன்,

''காவிரியில நமக்கான உரிமையை மீட்டெடுக்கற வகையில தமிழக ஆட்சியாளர்கள் அக்கறையோடவும், ஆக்கப்பூர்வமாவும் செயல்பட்டாத்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்'' என்று சொன்னார்!

விவசாயிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா தமிழக அரசு?...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism