Published:Updated:

அணையின் பாதுகாப்பை நாங்களே கையில் எடுப்போம் !

முல்லை - பெரியாறு விஷயத்தில் முஷ்டி உயர்த்தும் விவசாயிகள்ஆர்.குமரேசன்

அணையின் பாதுகாப்பை நாங்களே கையில் எடுப்போம் !

முல்லை - பெரியாறு விஷயத்தில் முஷ்டி உயர்த்தும் விவசாயிகள்ஆர்.குமரேசன்

Published:Updated:

பிரச்னை

##~##

முல்லை- பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவின் குடைச்சல் வேலைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. அணையைப் பரிசோதிப்பதற்காக போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல், தடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர் கேரள அதிகாரிகள். இதன் காரணமாக, முல்லை-பெரியாறு பாசன விவசாயிகளிடையே தற்போது மீண்டும் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அணையின் உறுதித் தன்மையைச் சோதித்து, அறிக்கை தருவதற்காக ஐவர் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். அணையில் எட்டு இடங்களில் துளைகள் இட்டு சோதனை நடத்திய அக்குழு, 'அணை பலமாகவே இருக்கிறது' என்று அறிக்கை அளித்துவிட்டது!

இந்த அறிக்கை தமிழகத்துக்குச் சாதகமாக அமைந்திருக்கும் சூழலில்... சோதனைக்காக இடப்பட்ட துளைகளை அடைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது, அணையின் பராமரிப்பை தன்வசம் வைத்திருக்கும் தமிழக அரசு. ஆனால், அதைச் செய்யமுடியாதபடி தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது கேரளா.

'இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும். அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்தவேண்டும். இல்லையேல், தமிழக காவல்துறை உதவியோடு துளைகளை அடைக்கும் பணியை மேற்கொள்வோம்’ என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

அணையின் பாதுகாப்பை நாங்களே கையில் எடுப்போம் !

இதையடுத்து, தன் வாலை லேசாக சுருட்டிக் கொண்ட கேரளா... 6 துளைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 'சிமென்ட் கொண்டு போகக்கூடாது... லாரி போகக்கூடாது' என ஏதாவதொரு காரணத்தை எடுத்துவிட்டு, மீண்டும் மீண்டும் இடைஞ்சல் தந்து கொண்டிருக்கிறது!

இதைப்பற்றி நம்மிடம் பேசிய தேனி மாவட்ட 'விவசாயிகள் விடுதலை முன்னணி' அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன், ''அணையோட கட்டுமானம் பாதுகாப்பானதா இல்லை. அதை இடிக்கணும்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்துச்சு கேரளா. அது முழுக்க பொய்யான கருத்துங்கறத ஐவர் குழு அம்பலப்படுத்திடுச்சு. அதனால நொந்து போயிருக்கற கேரளா, அணையில ஆய்வுக்காக போட்ட துளையில தண்ணி இறங்கி, அணை பலவீனமாகிடும்னு ஓநாய் கணக்கா காத்துக்கிட்டிருந்துச்சு. அதை நாம அடைக்கப்போறோம்னதும்... இப்ப அழிச்சாட்டியம் செய்றாங்க.

இந்தச்சூழல்ல... அணையோட பாதுகாப்புக்கு தமிழக போலீஸை நிறுத்தறத தவிர வேற வழியில்லை. இதை தமிழக அரசு செய்யலனா... விவசாயிகளே திரண்டுபோய் அணையோட பாதுகாப்பை கையில எடுக்கத் தயங்கமாட்டோம்'' என்றார், ஆவேசமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism