Published:Updated:

கடைசி மீனும் பிடிபட்ட பிறகு...

கடைசி மீனும் பிடிபட்ட பிறகு...

##~##
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
கடைசி மீனும் பிடிபட்ட பிறகு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'பசுமைப் பொருளாதாரம்' என்கிற வார்த்தை, இப்போது அடிக்கடி உலக அளவில் உச்சரிக்கப்படுகிறது. இப்போதுகூட, பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் இதே வார்த்தையை உச்சரித்தபடி, 'எர்த் சம்மிட்-2012' என்கிற பெயரில், உலக நாடுகளின் மாநாடு நடந்திருக்கிறது.

'ரியோ ப்ளஸ்-20' என்றும் இந்த மாநாட்டுக்கு அழகாக ஒரு பெயரையும் சூட்டியுள்ளனர். 1992-ம் ஆண்டில் முதன்முதலாக ஐ.நா. சார்பில் 'சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி' மாநாடு நடத்தப்பட்டு, 20 ஆண்டுகள் ஆவதன் நினைவாகத்தான் இப்படியரு பெயர்!

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், 'இந்த 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற எதையெல்லாம் சாதித்திருக்கின்றன இந்த நாடுகள்?' என்று கேட்டால்... 'ஒரு சதவிகித முன்னேற்றம்கூட இல்லை' என்பதுதான் பதிலாக இருக்கும்! அதேசமயம், 'சுற்றுச்சூழல் கேடுகள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளன?' என்று கணக்குப் போட்டால்... '1,000 மடங்குக்கு மேல்' என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம்.

ஆம், அந்த அளவுக்கு இந்த 20 ஆண்டுகளில் நுகர்வுக் கலாச்சாரம் பெருகி... திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைமேடுகள் தென்படுகின்றன. சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டது!

இது அத்தனையும் தெரிந்திருந்துமே 'தொழிற்புரட்சி' என்ற ஒன்றை மட்டுமே தூக்கிப் பிடிக்கின்றன அனைத்து நாடுகளும். இதற்கு தடையேதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக... இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புத்தம் புதிய வார்த்தைதான் 'பசுமைப் பொருளாதாரம்'! சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் முன்னேற்றம் காணப் போகிறார்களாம்!

'சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி, பயமுறுத்தி எங்கள் வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்திவிடக் கூடாது' என்று இம்மாநாட்டில் நமது சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதிலிருந்தே... சுற்றுச்சூழல் மீதான இவர்களின் அக்கறையை நாம் புரிந்து கொள்ளலாம்!

ம்... கடைசி மரமும் வெட்டப்பட்டு, கடைசி மீனும் பிடிபட்ட... பிறகுதான் திருந்துவார்களோ?!

நேசத்துடன்,
ஆசிரியர்