Published:Updated:

''காலடியில் கிடக்குது, கண்கண்ட மருந்து!''

ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

கூட்டம்

##~##

'மருத்துவமனைக்குப் படையெடுக்க வைக்கும் நவீன உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்கு ஆணிவேரான பாரம்பரிய உணவுகளை உண்ணத் தொடங்க வேண்டும்’ என்கிற கருத்தை மையப்படுத்தி... திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தாசரிப்பட்டி கிராமத்தில், ஜூன் 21-ம் தேதி 'இயற்கை உணவுத் திருவிழா’வுக்கு ஏற்பாடு செய்திருந்தது... 'அமைதி அறக்கட்டளை'.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விழாவில், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, அறக்கட்டளை தலைவர் ஜே. பால்பாஸ்கர், 'செரு’ நிறுவன தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் இயற்கை உணவின் முக்கியத்துவம் பற்றி பேசினார்கள்.

நம்மாழ்வார் தன்னுடைய பேச்சில், ''சாதாரண வாந்தியோ அல்லது வயிற்றுப் போக்கோ வந்தால்... உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். கொஞ்சம் பின்னோக்கி யோசியுங்கள். நாம் குழந்தையாக இருந்தபோது அம்மா என்ன செய்தார்கள். ஓம வாட்டர் கொடுப்பார்கள்... உடனே சரியாகி விடும்.

''காலடியில் கிடக்குது,  கண்கண்ட மருந்து!''

உடம்புக்குள் புகுந்த வேண்டாதப் பொருளை வெளியேற்றும் முயற்சிதான் வயிற்றுப் போக்கு... வாந்தி. மருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமலே... இரண்டு நாட்களில் தானாகவே சரியாகி விடும். இதைச் சொன்னால் இப்போது நம்புவதற்கு ஆளே இல்லை. மருத்துவர், ஊசி போட்டு மருந்து கொடுத்தால்தான் இப்பிரச்னைக்குத் தீர்வு என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால், அவர் கொடுக்கும் மருந்து, நம் உடலில் புகுந்துவிட்ட வேண்டாத பொருளை உள்ளேயே தங்க வைப்பதோடு... கழிவுகளையும் வெளியேற்றாமல் அடைத்து வைத்துவிடுகிறது. பிறகு, வேறொரு ரூபத்தில் அது பிரச்னையைக் கிளப்புவது தனிக்கதை!

யாரும் விதைக்காமல், தானாகவே பூமியில் வளர்ந்து பூத்து நிற்கிறது, ஆவாரம் பூ. இப்பூவைப் பறித்து, சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, அதில் கொஞ்சம் தேன் அல்லது கருப்பட்டியைப் போட்டு, குடித்தால்... அருமையான தேநீர் கிடைக்கும். இது நீரிழிவுக்கும், ரத்தக்கொதிப்புக்கும் அருமையான மருந்து. இதை விடுத்து, கடைகளில் கலப்பட டீ தூளால் போடப்பட்ட தேநீரை வாங்கிக் குடித்து... மருத்துவமனைக்கு அலைகிறோம்.

இப்படி நமது காலடியில் கிடக்கின்றன, ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள். நாகரீகம் என்கிற பெயரில் கண்டதையும் சாப்பிடாமல்... ஆரோக்கியத்துக்கு அச்சாணியாக இருக்கும் பாரம்பரிய உணவை உண்ணுங்கள். வளமோடு வாழுங்கள்'' என்று அனைவரின் மனதிலும் இயற்கைப் பதியம்போட்டார்!