Published:Updated:

பந்தல் இல்லாமலே பளபளக்கும் திராட்சை !

தூரன் நம்பி

பயணம்

##~##

இன்றைக்கும் இந்திய நாட்டின் பொருளாதாரச் சுக்கான், இயற்கையை நம்பித்தான் இருக்கிறது. பருவமழை தப்பிப் போனால்... பதறித் துடிக்கிறோம். ஆனால், 'நீரின்றி அமையாது உலகு’ என்கிற பதத்தையே தூக்கி எறிந்துவிட்டார்கள் இஸ்ரேலிய விவசாயிகள். நீரில்லாமல், நிலமில்லாமல் அவர்கள் செய்யும் விவசாயத்தைப் பார்த்து அதிசயித்து, நின்ற நமது விவசாயிகளிடம் பேசத் தொடங்கினார்... இஸ்ரேலிய நாட்டின் 75 வயது திராட்சை விவசாயி ஈட்டன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கு முன்பாக ஒரு குறிப்பைச் சொல்லிவிடுகிறேன். இஸ்ரேல் முழுக்கவே பெரும்பாலும், ரசாயன விவசாயம்தான். இயற்கை விவசாயம் என்பது ஓரிரு இடங்களில் மட்டும் நடந்து வருகிறது. இங்கே, நாம் ரசாயனம் மற்றும் இயற்கைக்கு மிஞ்சியத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயத்தின் மீது அவர்கள் காட்டி வரும் ஆர்வம், அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், விவசாயிகளுக்கு அரசாங்கம் எந்த அளவுக்குப் பக்கபலமாக நிற்கிறது... என்பது போன்ற விஷயங்களின் மீது நம்முடைய கவனத்தைப் பதிப்போம்!

இனி ஈட்டன் பேசுகிறார்...

''உங்கள் நாட்டில், நீர் உபரியாகக் கிடைக்கிறது. அதனால், நீரின் மகத்துவம் உங்களுக்குப் புரியவில்லை. நீரைக் கெடுத்து, நிலத்தைக் கெடுத்து, உணவைக் கெடுத்து, உயிரினங்களின் உடலையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், எங்கள் நிலை அப்படியா? கிடைக்கிற சிறிது நீரைக் கொண்டுதானே வாழ்ந்தாக வேண்டும். அதனால், இடைவிடாத ஆராய்ச்சிக்குப் பிறகு, நீர் மேலாண்மையில் இன்று உலகில் முதலிடம் வகிக்கிறோம். நடவு, வளர்ச்சி, விளைச்சல், அறுவடை எல்லாவற்றையும் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்.

பந்தல் இல்லாமலே பளபளக்கும் திராட்சை !

வெள்ளச் சேதம், வறட்சியின் தாக்கம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் எங்கள் பயிர்களை அண்ட விடுவதில்லை. அதனால், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான, நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் (ழிறிரி) மற்றும் நுண்ணூட்டங்கள் அனைத்தையும் நீரில் கலந்து... ஊசி மூலமாக, பயிர்களுக்கு அதன் வேருக்கடியில் கொடுத்து விடுகிறோம். பிறகு, எதற்குக் கூடுதலாக மழை நீர்?'' என்று வினா எழுப்புகிறார் ஈட்டன்.

ஆம், அவர்கள் பாசன முறையை 'இன்ஜெக்ட்' அதாவது உட்செலுத்துதல் (மிஸீழீமீநீtவீஸீரீ tலீமீ ஷ்ணீtமீக்ஷீ) என்றுதான் அழைக்கிறார்கள்.

தொடர்ந்த ஈட்டன், ''எங்கள் பூமியில் கார அமில நிலை 7.5 க்கு மேல் இருக்கிறது. மழைநீருடன், மண்ணில் இருக்கும் சுண்ணாம்புச் சத்தும் சேர்ந்து பூமிக்குள் இறங்கி, ஒருவேளை திராட்சையின் வேர்களைத் தீண்டிவிட்டால்... அவ்வளவுதான். முதலுக்கே மோசம் வந்துவிடும். அதனால், எந்த அந்நிய சக்திகளையும் எங்கள் தோட்டத்துக்குள் அனுமதிப்பது இல்லை. விதை முதல் விளைச்சல் வரை எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால்... நஷ்டம் இல்லை, கடன் இல்லை, தற்கொலை இல்லை. நடவு முதல், முதல் அறுவடை வரை உள்ள அனைத்துச் சாகுபடி செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.

பந்தல் இல்லாமலே பளபளக்கும் திராட்சை !

விளைச்சலின் சூத்ரதாரியே சூரியஒளிதான். அளவுக்கு மிகுதியானால் அமிர்தமும் நஞ்சுதானே. பகலில் 55 டிகிரி சென்டி கிரேட் வெப்பமும், இரவில் 16, 17 டிகிரி குளிரும் இருந்தால், விவசாயம் விளங்குமா? எனவே பருவநிலையைக் கட்டுப்படுத்த நிழல் வலைக்குள் (ஷிலீணீபீமீ ஸீமீt) பயிர் வளர்க்கிறோம். அதனால்தான் சந்தையில் விலை சரியும் காலங்களில் அறுவடையைக்கூட இரண்டு மாதங்கள் வரை தள்ளி போட முடிகிறது.

குறைமாத குழந்தையை இங்குபேட்டர் சாதனத்தில் பாதுகாப்பது போல, பயிர்களைப் பாதுகாக்கிறோம். சும்மாதானே கிடைக்கிறது என்பதற்காக தண்ணீர் உட்பட எதையும் தேவைக்கு அதிகமாக கொடுப்பதில்லை. அளவுக்கு அதிகமான வளர்ச்சியும் ஒரு நோய்தான். வலியச் சென்று பயிர்களுக்கு நோயைத் திணித்துவிட்டு, பிறகு செலவு செய்து வைத்தியம் பார்ப்பது வீண் வேலைதானே?'' என்று நியாயமானக் கேள்வியை முன் வைத்தார்.

தொடர்ந்த ஈட்டன், ''நீங்கள் வயலுக்கு நீர் பாய்ச்சுகிறீர்கள். நாங்கள் பயிருக்கு மட்டும் நீர் செலுத்துகிறோம். அதாவது மருத்துவமனையில் படுக்கையிலிருக்கும் நோயாளிக்கு, எப்படி குளுக்கோஸ் பாட்டிலில் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி டிரிப் வழியாக செலுத்துகிறார்களோ, அப்படி ஒவ்வொரு திராட்சைச் செடிக்கும் ஊசி மூலம் அனைத்து உரங்களையும் தண்ணீரோடு சேர்த்து செலுத்தி விடுகிறோம். நான் பல முறை இந்தியா வந்து உங்கள் விவசாய முறையை பார்த்து இருக்கிறேன். கூடுதல் நீர், கூடுதல் உரம் விவசாயத்துக்கு வீண் செலவுதான். சமயங்களில் பயிர்கள் கூடுதலாக அதை கிரகித்து கொண்டு கொழுத்துவிட வாய்ப்பு இருக்கிறது. பிறகு குண்டு மனிதர்களைப் போல... சோம்பேறி ஆகி, உற்பத்தித் திறன் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

எந்தத் தாவரத்தின் வேர்களும், இரைக்காகவும் நீருக்காகவும் முதலையைப் போல் பூமிக்கடியில் வாய் பிளந்து காத்திருப்பது இல்லை. ரோமக் கால்களை போன்று மெல்லிய நுண்ணிய வேர்கள்தான் நீரை உறிஞ்சி எடுத்து தண்டுகள் வழியாக இலைகளுக்கு அனுப்புகின்றன. சூரியஒளி, காற்றின் துணையோடு இலைகள் உணவு தயாரிக்கின்றன. பிறகு... எதற்கு கூடுதல் நீர்... களையை வளர்க்கவா?'' என்று மேலும் ஒரு கேள்வியை நம்மை நோக்கி வீசினார்.

வரிசைக்கு வரிசை 12 அடி, செடிக்குச் செடி 6 அடி இடைவெளியென விரிந்து கிடக்கிறது ஈட்டனின் 50 ஏக்கர் திராட்சைத் தோட்டம். பயிர்களை வளர்க்க, பாதுகாக்க அவர் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் பிரமிக்க வைக்கின்றன. அதைப் பற்றி பேசியவர், ''30 வருடங்கள் வரை இத்து போகாமல் தாக்குப் பிடிக்கும் உயிரிபொருளால் (ஙிவீஷீபீமீரீக்ஷீணீபீணீதீறீமீ) செய்யப்பட்ட பையில், திராட்சை நாற்றுகளை நடவு செய்கிறோம்.

12 அடி இடைவெளி விட்டு 2 அடி அகலத்தில் பூமி மீது ஒரு அடி முதல் ஒன்றரை அடி ஆழம் வரை பள்ளம் தோண்டுவோம். அந்த பள்ளத்தில் 30 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும் உயிரி இயற்கைப் பொருளால் நெய்யப்பட்ட ஒரு பாய் படுக்கையை விரித்து விடுவோம். அதில் நிறைய எரு கலந்த மண்ணை நிரப்பி, பாய் படுக்கையை இழுத்து மூடி விடுவோம். வெளியிலிருந்து எதுவும் வேர்மண்டலத்தைத் தாக்க அனுமதிப்பது இல்லை. திராட்சைச் செடிகளில் 12 அடி இடைவெளியில் இருப்பதால், சூரிய ஒளியை முழுமையாக அறுவடை செய்ய முடிகிறது'' என்றார்.

நமது ஊரில் இருப்பது போல, திராட்சைச் கொடிகளுக்கு, பந்தல் அமைக்கவில்லை. ஆங்கில எழுத்து 'க்ஷி’ வடிவில், இரும்புப் பட்டைகளை நட்டு, அதனை துருப் பிடிக்காத இரும்புக் கம்பிகளால் இழுத்துக் கட்டி இருக்கிறார்கள். அந்த 'க்ஷி’ வடிவ  கொடி தாங்கியில் கொத்துக் கொத்தாக திராட்சை காய்த்துத் தொங்குகிறது. இந்த ரக திராட்சையை உருவாக்கிய விஞ்ஞானி, 'ஏக்கருக்கு அதிகபட்சம் 8 டன் விளைச்சல் எடுக்கலாம்’ என்றுதான் சொன்னாராம். ஆனால், இவர்களோ... 17 டன் வரை மகசூல் எடுத்து அசத்திக் கொண்டுள்ளனர்.

'இது எப்படி சாத்தியமானது?'
இதற்கான பதில்...
அடுத்த இதழில்.