Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

இலவசப் பயிற்சிகள்

தீவன உற்பத்தி!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 28-ம் தேதி பால் மாடுகளுக்குத் தீவன உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது.

முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78526.

விஞ்ஞான ஆடு!

சிவகங்கை மாவட்டம்,  குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 26-ம் தேதி கரீப் பருவப் பயிர்களுக்கு ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு; 27-ம் தேதி விஞ்ஞான முறையில் ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206. தொலைபேசி: 04577-264288.

காடை வளர்ப்பு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 27-ம் தேதி காடை வளர்ப்பும், விற்பனை வாய்ப்பும் பயிற்சி நடைபெற உள்ளது.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004. தொலைபேசி: 0427-2440408.

ஒருங்கிணைந்தப் பண்ணை!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில்  ஜூலை 10-ம் தேதி காளான் வளர்ப்பு; 11-12 தேதிகளில் ஒருங்கிணைந்தப் பண்ணை முறைகள்; 12-ம் தேதி பட்டுப் புழு உற்பத்தி; 18-19 தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஏற்ற மக்காச்சோள சாகுபடி; 20-ம் தேதி மூலிகை மற்றும் வாசனைப் பயிர்கள் சாகுபடி; 25-26 தேதிகளில் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பம்; 26-27 தேதிகளில் மீன் குஞ்சு உற்பத்தி; 30-31 தேதிகளில் ஊறுகாய் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம(எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அருகில்) காஞ்சிபுரம்-603203.

தொலைபேசி: 044-27452371.

பாரம்பரிய விதை திருவிழா!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பாலையூர் கிராமத்தில் ஜூலை 13-ம் தேதி 'பாரம்பரிய விதை திருவிழா’  நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், மாவட்ட ஆட்சியர், முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். மதியம் பாரம்பரிய உணவுகள் வழங்கப்படும். பாரம்பரிய விதைகளும் விநியோகிக்கபட உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக  'பசுமை விகடன், தி ஹிந்து’ பத்திரிகைகளுக்கு விருது வழங்கப்பட உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஏற்பாடு: டி.இ.டி.இ டிரஸ்ட், குடும்பம் மற்றும் கிரியேட். தொடர்புக்கு, செல்போன்: 94433-46369.

இஸ்ரேல் அனுபவம்!

இஸ்ரேல் விவசாயக் கண்காட்சி 2012-ல் பங்கேற்ற தமிழக விவசாயிகளின் அனுபவப் பகிர்வுக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி நடைபெற உள்ளது. இடம்: மகாராஜா பசுமைப் பண்ணை, குதிரையாறு அணை அருகில், பழனி. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பிற விவசாயிகளும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94887 -93322, 94880-55623.