Published:Updated:

செலவு இல்லை... வரவு மட்டுமே...

சிறப்பான லாபம் தரும் சிறுதானியங்கள்! காசி. வேம்பையன் படங்கள்: பா. காளிமுத்து எஸ். தேவராஜன்

##~##

வானம் பார்த்த மானாவாரி பூமிகளைப் பொறுத்தவரை விதைக்கும் பட்டம்... ஆடிப் பட்டம் மட்டுமே! ஏனெனில், அதுதான் (ஜூன்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க அளவில் மழை கிடைக்கும் காலம். இந்த மழைநீரைப் பயன்படுத்தி, செய்யப்படும் சாகுபடிகளில் சிறப்பான மகசூல் தருவது... 'சிறுதானியங்கள்' என்று பொதுவாக அழைக்கப்படும் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்ற தானியங்களே!

இதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள பி.எஸ். பாளையம் (புராணசிங்குப் பாளையம்) பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரவிச்சந்திரன் (இவர், 10.11.2011-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான 'தில்’லான தினை’ செய்தி மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செலவு இல்லை... வரவு மட்டுமே...

''எனக்குச் சொந்தமா 25 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, ஏறத்தாழ 10 ஏக்கர் நிலத்துல கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலினு சிறுதானியங்களைத்தான் சாகுபடி செய்றேன். ஓரளவுக்கு தண்ணி வசதி இருந்தாலும், ஆள் பற்றாக்குறை, மின்சாரத் தட்டுப்பாடுகளைச் சமாளிக்கறதுக்காக எப்பவுமே ஆடிப் பட்டத்துல சிறுதானியங்களை சாகுபடி செஞ்சுடுவேன். சிறுதானியங்களுக்குப் பெரிசா கவனிப்பு தேவை இருக்காது.

சாகுபடிச் செலவு போக, ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய்ல

செலவு இல்லை... வரவு மட்டுமே...

இருந்து, 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானமும் கிடைச்சுடும். அதுக்காகவேதான் விடாம, சிறுதானியங்களை சாகுபடி செஞ்சுட்டுருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த ரவிச்சந்திரன், சாகுபடி பற்றி விளக்கினார்.

ஏக்கருக்கு 4 கிலோ விதை!

'தினை மற்றும் கம்பு இரண்டுமே 90 நாள் வயதுப் பயிர்கள். வரகு, குதிரைவாலி மற்றும் சாமை ஆகிய பயிர்கள் 100 முதல் 110 நாட்கள் வயது கொண்டவை. ஆனால், அனைத்துப் பயிர்களுக்கும் சாகுபடி முறை ஒன்றுதான்.

ஆனி மாதத்தில் (ஜூன் மாதம்)... முதல் மழை பெய்தவுடன், நிலத்தில் களைகள் இல்லாத அளவுக்கு, இரண்டு சால் குறுக்கு-நெடுக்காக உழவு செய்ய வேண்டும். பிறகு, தேவையான சிறுதானியத்தில், 4 கிலோ தரமான விதையை 2 லிட்டர் பீஜாமிர்தத்தில் முக்கி எடுத்து, நிழலில் உலர்த்தி விதைநேர்த்தி செய்ய வேண்டும். பிறகு, விதையை 5 கிலோ மணலுடன் கலந்து விதைத்து, கொக்கிக் கலப்பை மூலம் ஒரு உழவு செய்ய வேண்டும்.

பூச்சி, நோய்களுக்கு இடமில்லை!

சாகுபடி செய்யும் காலம்... மழைக் காலம் என்பதால், மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே முளைப்பு எடுத்து விடும். கம்பு... 3 முதல் 5 நாட்களிலும்; தினை... 7 நாட்களிலும்; சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவை 7 முதல் 10 நாட்களிலும் முளைப்பு எடுத்து விடும்.

அவ்வப்போது கிடைக்கும் மழையிலேயே வளர்ந்துவிடும். பாசன வசதி இருந்தால், 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டலாம். கூடவே, மாதம் ஒரு முறை வீதம் இரண்டு முறை மட்டும் ஜீவாமிர்தக்

செலவு இல்லை... வரவு மட்டுமே...

கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விடலாம். பாசனம் செய்யாவிடில், மாதம் ஒரு முறை 1:10 என்ற விகிதத்தில் ஜீவாமிர்தத்தைத் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

20 முதல் 25-ம் நாட்களுக்குள் ஒருமுறை மட்டும் களை எடுத்து, அதிகமாக இருக்கும் பயிர்களைக் களைத்துவிட வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து மூடிக்கொள்வதால் களை எடுக்க வேண்டியிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் ஆகியவையும் இருக்காது. கம்பு மற்றும் தினை 70-ம் நாளில் கதிர் பிடித்து, 90-ம் நாளில் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும். வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவை 80-ம் நாளில் கதிர் பிடித்து, 110-ம் நாளில் முற்றி அறுவடைக்கு வந்துவிடும்.'

செலவு இல்லை... வரவு மட்டுமே...

ஏக்கருக்கு 1,000 கிலோ கம்பு!

சாகுபடி பாடம் முடித்த ரவிச்சந்திரன், மகசூல் மற்றும் வருமானம் ஆகிவற்றின் மீது தன் கவனத்தைத் திருப்பினார் இப்படி-

''கதிர்களை அறுவடை செஞ்சு, களத்துல காய வெச்சு, டிராக்டர் மூலம் கதிரடிச்சா... தூசும், மணியுமா பிரிஞ்சுடும். அதை சுத்தப்படுத்தி விற்பனை செய்யலாம். வரகு, கம்பு... ஏக்கருக்கு 1,000 கிலோ; சாமை, தினை, குதிரைவாலி... ஏக்கருக்கு 700 கிலோனு மகசூல் கிடைக்கும். கம்பு ஒரு கிலோ 28- 30 ரூபாய்; வரகு ஒரு கிலோ 20 ரூபாய், சாமை ஒரு கிலோ 25 ரூபாய்; தினை ஒரு கிலோ

25 ரூபாய்; குதிரைவாலி ஒரு கிலோ 25 ரூபாய்ங்கற விலையில விற்பனை ஆகும். எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும்... ஏக்கருக்கு சராசரியா 7 ஆயிரம் ரூபாய் செலவாகும். எப்படியும் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைச்சுடும்'' என்றார், உற்சாகமாக.! 

செலவு இல்லை... வரவு மட்டுமே...

தொடர்புக்கு,

ரவிச்சந்திரன், செல்போன்: 94432-36983.
சிறுதானியங்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பலக்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-2450507.