Published:Updated:

மழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை !

ஆடியில் சிலிர்க்கும் சின்ன வெங்காயம்...ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

##~##

அதிக லாபம் தரக்கூடிய, குறுகியகால தோட்டக்கலைப் பயிர்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமானது. அதிக வெயிலும் அதிக மழையும் இல்லாத தட்பவெப்ப நிலை இதற்கு ஏற்றச் சூழலாகும். அதனால், தென் மேற்குப் பருவக்காற்று வீசுகிற கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் ஆடிப் பட்ட விவசாயமாக சின்ன வெங்காயம் அதிக அளவு நடவு செய்யப்படுகிறது. இந்தக் காலத்தில் பொழியும் சிலுசிலு தூறல் மழையும், ஈரக் காற்றும் சின்ன வெங்காயத்துக்குத் தோதாக அமைந்திருப்பதால், இப்பட்டத்தில் மகசூலும் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது!

ஆடிப் பட்டத்தின் சிறப்புகளைப் பயன்படுத்தி, வெங்காய சாகுபடியில் லாபம் பார்த்து வரும் எண்ணற்ற விவசாயிகளில் ஒருவராக இருக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை வட்டாரம், பெரிய கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம். செல்வராஜ். தன்னுடைய தோட்டத்தில், வெங்காய நடவுக்கான ஆயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... கடகடவென பேச ஆரம்பித்துவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆடிப் பட்டத்தில் அதிக மகசூல்!

மழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை !

''எனக்கு இதுதான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்துல நாலு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்றேன். வெங்காயம், மிளகாய், கத்திரி, தக்காளினு பட்டத்துக்குத் தகுந்த மாதிரி காய்கறி விவசாயம் செய்வேன். இந்தப் பகுதியில காய்கறி வெள்ளாமை நல்லாருக்குது. குறிப்பா, சின்ன வெங்காயம் நல்லா வருது. அதனால, இருபது வருஷமா சின்ன வெங்காயத்தை சாகுபடி செஞ்சுட்டு வர்றேன். போன வருஷம் வரைக்கும் தென்னையில ஊடுபயிரா பயிர் செஞ்சேன். இந்த வருஷம் ரெண்டு ஏக்கர்ல தனிப்பயிரா நடவு செய்யப் போறேன். வெங்காயத்தைப் பொறுத்தவரை மாசிப் பட்டத்தைவிட, ஆடிப் பட்டத்தில் மகசூல் கூடுதலா கிடைக்கும்'' என்ற செல்வராஜ், சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.

மூன்றடி பார்... அரையடி இடைவெளி!

'தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், சித்திரை மாதம் கோடை உழவு செய்து ஆற விட வேண்டும். ஆடிப் பட்டம் தொடங்கும்போது, நிலத்தை மூன்று முறை உழவு செய்து, கட்டிகள் இல்லாமல்

மழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை !

மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். பிறகு 20 டன் தொழுவுரத்துடன், 30 கிலோ தழைச்சத்து; 60 கிலோ மணிச்சத்து; 30 கிலோ சாம்பல் சத்து அடங்கிய இயற்கை உரங்களைக் கலந்து, நிலத்தில் இறைத்து இன்னொரு உழவு செய்ய வேண்டும். ஒன்றரை அடி உயரத்துக்கு வரப்புக் கட்டி மூன்றடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, விதை வெங்காயத்தை அரை அடிக்கு ஒன்றாக வரப்பின் இருபுறமும் நடவு செய்ய வேண்டும்.

நாற்று நடவில் கூடுதல் மகசூல்!

கடந்த போகத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தையே விதைக்கப் பயன்படுத்தலாம். இதற்குப் பதில் வெங்காய நாற்றையும் நடவு செய்யலாம். பெரும்பாலும் விதை வெங்காயத்தைத்தான் நடவு செய்வார்கள். விதை வெங்காயம் நடவு செய்தால்... 65 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம். நாற்று நடவெனில், 120 நாட்களில் அறுவடை செய்யலாம். நடவு முறையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். அதேசமயம், பராமரிப்பும் அதிகம் தேவைப்படும்.

மழையைப் பொறுத்து பாசனம்!

விதை வெங்காயம் நடவு செய்தவுடன் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பாத்தி நன்றாக நனையுமாறு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மழை கிடைப்பதைப் பொறுத்து பாசனம் செய்யும் நாட்களின் இடைவெளியைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

விதைத்த 15-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் பயிர் வளர்ந்து பச்சை கட்டியிருக்கும். அந்த சமயத்தில் ஒரு முறை களை எடுத்து, 30 கிலோ தழைச்சத்து அடங்கிய இயற்கை உரத்தைக் கொடுத்து பாசனம் செய்ய வேண்டும். 45-ம் நாளில் ஒரு முறை களை எடுத்து 30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய இயற்கை உரத்தைக் கொடுத்து, பாசனம் செய்ய வேண்டும்.

மழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை !

புள்ளி நோய்க்கு பஞ்சகவ்யா!

15, 30, 45 ஆகிய நாட்களில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை வேளையில் பனிப்புகை போல விசைத் தெளிப்பான் மூலம் தெளித்து வந்தால், புள்ளிநோய் தாக்குவதில்லை. பயிரும் செழிப்பாக வளரும். வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் இயற்கைப் பூச்சிவிரட்டிகளை, பரிந்துரைக்கும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். ஆடிப் பட்ட சாகுபடியில் பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. 65-ம் நாளுக்கு மேல், பச்சைத்தாள் வடிந்து வெளிறி சரியும். இந்த சமயத்தில வரப்பில் உள்ள சில செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால், அவை பல் பிரிந்து ஊக்கமுடன் இருக்கும். அப்போது அறுவடையைத் தொடங்கலாம்.'  

விலையைப் பொறுத்து விற்பனை!

சாகுபடிப் பாடத்தை முடித்த செல்வராஜ் நிறைவாக, ''ஒரு ஏக்கர்ல சராசரியா 7 டன்லஇருந்து 8 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். அறுவடை செய்யுறப்போ கட்டுபடியான விலை கிடைச்சா விக்கலாம். இல்லேனா, பட்டறை போட்டு வெச்சு, நல்ல விலை கிடைக்குற சமயத்துல விற்பனை பண்ணிக்கலாம்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.