இனி, 'இயற்கை வழி விவசாயம் ஒன்றுதான் மனிதகுலத்தை நோய், நொடிகளின்றி வாழ வைக்கும்' என்கிற உண்மையை, இந்த உலகமே தற்போது நன்கு உணரத் தொடங்கியிருக்கிறது! 'ஆனால், இங்கே மில்லியன் கணக்கில் இருக்கும் மக்கள் தொகைக்கு உணவிட வேண்டுமென்றால்... அது இயற்கை விவசாயத்தால் முடியாது. அந்த அளவுக்கு இயற்கை விவசாயத்தில் மகசூல் கிடைக்காது' என்கிற கருத்துக்களை முன் வைத்து, விஷயத்தை திசை திருப்புவதையே சிலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்! குறிப்பாக, அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள்!

வீட்டுத்தோட்டம் தொடங்கி... 300 ஏக்கர், 400 ஏக்கர் என பல நூறு ஏக்கர்கள் வரை இயற்கை விவசாயம் செய்பவர்களும்... அதன் மூலமாக ரசாயன விவசாயத்தைக் காட்டிலும் மிக அதிக மகசூலை எடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். அத்தகையோரின் தோட்டங்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து பார்க்காமல்... அரசாங்கப் பதவிகளில் உட்கார்ந்து கொண்டு 'வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ' பாணியில்... இயற்கை விவசாயத்தை விமர்சிப்பது எந்த அளவுக்கு சரியானதாக இருக்கமுடியும்!

இதோ... பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுமந்குமார் இயற்கை விவசாய முறையில் ஒரு ஹெக்டேரில் 72.9 டன் உருளைக்கிழங்கு மகசூல் எடுத்து உலக சாதனை செய்து உள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இது பதிவாகியுள்ளது. நெதர்லாந்து நாட்டில், ரசாயன விவசாயத்தில் ஹெக்டேருக்கு 45 டன் விளைவிக்கப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

பீகார் விவசாயியின் சாதனைக்குப் பின் நிற்பவர்... அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார். ஆம், தான் முதல்வரானதுமே புற்றீசல்களாக தொழிற்சாலைகளைத் திறந்து வைக்காமல், 'விளைநிலங்களைக் காப்பேன்... முழுமையான இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவேன்... இதன் மூலமாகவே, பொருளாதார ரீதியில் இந்தியாவில் பீகார் மாநிலத்தை முதலிடம் பிடிக்க வைப்பேன்' என்கிற சபதங்களைப் போட்டு, அதை நோக்கியே அனைவரையும் உசுப்பிவிட்டார். அதுதான் 'உருளைக்கிழங்கு சாதனை' ரூபத்தில் அறுவடை ஆகியிருக்கிறது!

அரசாங்கம் மனது வைத்தால்... எதையும் மாற்றமுடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. மற்ற மாநில முதல்வர்களும் மனது வைக்கட்டும்-குறிப்பாக, தமிழக முதல்வர்!

நேசத்துடன், ஆசிரியர்