Published:Updated:

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

Published:Updated:
##~##

இப்போ கொத்தவரைக்கு இருக்கிற மவுசு... வேற எதுக்கும் இல்லை. கொத்தவரையை நல்லா முத்தவிட்டு, காயவெச்சு அதோட விதைகளை மட்டும் எடுத்துக் கொடுத்தா... குவிண்டால் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைஆகுதுங்கோ. மூணு மாசத்துக்கு முன்ன 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூட விலை போயிருக்கு. நம்ம ஊர்ல, ஊடுபயிராகூட கொத்தவரையை சாகுபடி செய்யறவங்க குறைவு. ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்கள்ல நிறைய சாகுபடி நடக்குது. அதுவும் விலையேறின பிறகு... திரும்பின பக்கமெல்லாம் கொத்தவரைதான். கொத்தவரை விதைக்கு எப்படி இந்த வாழ்வுனு நினைக்கிறீங்களா? கனடா, பிரேசில்... நாடுகள்ல கொத்தவரை விதையில இருந்து எடுக்கிற ஒருவித பசையை... துணிகள் தயாரிப்பு, காகித தயாரிப்பு, ஐஸ்க்ரீம் தயாரிப்புனு பலதுக்கும் பயன்படுத்தறாங்க. எரிவாயு, சுரங்கம்னு பூமியைத் துளைக்கறதுக்காக பயன்படுத்தற துரப்பான் கருவிகளுக்கு வழுவழுப்பு கொடுக்கறதுக்கும் இதைப் பயன்படுத்தறாங்க. அதனால, இந்தியவுல இருந்து, கொத்தவரை விதைகளை அதிகமா இறக்குமதியும் செய்யறாங்களாம். அதான் இம்புட்டு விலை!

வெத்தலை போடற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா மலையேறிக்கிட்டிருக்கு. அதெல்லாம் தப்பான பழக்கம்னு பலரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா... நம்ம ஆளுங்க ஒரு கணக்கோடத்தான் அதைப் பயன்படுத்திட்டு வந்திருக்காங்க. மனுஷனுக்கு, வயசு கூடகூட... உடம்புல உள்ள பல், எலும்பு எல்லாம் ஆட்டம் கொடுக்க ஆரம்பிக்கும். அதாவது, கால்சியம்னு சொல்ற, சுண்ணாம்புச் சத்து பத்தாக்குறை உருவாகும். இதை, வெத்தலை போடற பழக்கம் சரி செஞ்சுடுமாம். சுண்ணாம்பு, பாக்கு இதையெல்லாம் சேர்த்துத்தான் வெத்தலை போடணும்ங்கிற அவசியம் இல்லை. வெத்தலையிலயே... போதுமான கால்சியம் இருக்குதுங்கோ. அதனாலதான், '50 வயசுக்கு மேல இருக்கறவங்க வெத்தலை போடறது உடம்புக்கு நல்லது'னு ஆராய்ச்சியாளருங்க சொல்லிக்கிட்டிருக்காங்க. குறிப்பா, பெண்கள் வெத்தலை போட்டா, மூட்டுவலி வராதாம். வெத்தலையோட பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடறதனால பெருசா பிரச்னை ஏதும் இல்ல... ஆனா, இந்தப் புகையிலையை சேர்த்துட்டீங்கனா... மொத்தமும் கெட்டுப்போயிடும்... ஜாக்கிரதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரும்பு வெட்டினதும், தோட்டத்துல கரும்புத் தோகையை மலையாட்டம் குவிச்சு தீ வைக்கிறதுதான் பெரும்பாலான விவசாயிகளோட வழக்கம். ஆனா, இந்தத் தோகை... மாடுகளுக்கு அருமையானத் தீவனம். ஆடுகளுக்கும்கூட கொடுக்கலாம். ஆனா, விஷயம் தெரியாம... தீ வெச்சு கொளுத்திட்டு... பிறகு, பணம் போட்டு தீவனத்தை வாங்கிட்டு வர்றதுதான் பலருக்கும் வழக்கமா இருக்கு. அதுக்காக... மலையாட்டம் குவிஞ்சு கிடக்கேனு அதிகமா கொடுத்துடாதீங்க. வழக்கமா கொடுக்கிற பசுந்தீவனத்தோட கலந்து, கால் பங்கு கரும்புத் தோகையைக் கொடுத்தா பிரச்னை இருக்காது!.

மண்புழு மன்னாரு !

நாட்டுக் கோழி அடைக்கு வைக்கறதுக்கு, இன்குபேட்டர் வெச்சா, செலவும் அதிகம்... குஞ்சுகளும் அத்தனை ஆரோக்கியமா இருக்காது. அதனால, நாமே அடை வைக்கறதுதான் நல்லது. அடை வைக்கற கூடையை, நல்லா பசுஞ்சாணம் போட்டு மெழுகிடணும். காய்ஞ்ச பிறகு, கூடைக்குள்ள செம்மண், மணல் இது ரெண்டையும் கலந்து வெச்சு, அதுல முட்டைகளை வெச்சு, கோழிகளை அடைகாக்க விடணும். செம்மண், வெப்பத்தை உள்வாங்கி அப்படியே வெச்சுருக்கும். கூடைக்குள்ள சீரான வெப்பம் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. செம்மண்ணுதான்னு இல்ல தவிடு கொட்டியும், அடை வைக்கலாம்.

மாடு, கன்னு போட்ட ரெண்டாவது மாசமே... சினைக்கு வந்துடும். ஆனா, சினைக்குப் போட்டா... பால் குறைஞ்சுடும்னு நம்மாளுங்க பயங்கரமா யோசிப்பாங்க. ரெண்டாவது மாசமே சினைப் பிடிச்சுட்டா, பால் குறையாது. அதேசமயம்... கன்னு போட ரெண்டு மாசம் இருக்குறப்ப பால் கறக்கிறதை நிறுத்துடணும்கிறதையும் மறந்துடாதீங்க. இப்படிச் செய்யறாதல... வருஷம் ஒரு கன்னு கிடைக்கும்.

பால் கறக்குற மாட்டை, கண்ட நேரத்துலயும் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. குறிப்பா, பகல் 12 மணியிலேர்ந்து 2 மணி வரை கடுமையான வெப்பம் இருக்கற நேரத்துல அனுப்பவே கூடாது. இதனால, சத்து இழப்பு ஏற்பட்டு... பால் கறக்குற அளவும்கூட குறையும். காலையில... 8-10 மணி, சாயங்காலம் 4-6 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பறது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism