Published:Updated:

செய்வன, திருந்தச் செய்!

செய்வன, திருந்தச் செய்!

செய்வன, திருந்தச் செய்!

செய்வன, திருந்தச் செய்!

Published:Updated:
##~##

'தமிழக அரசு இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்'

-கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் குரல் கொடுத்தபடி இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே தங்களுடைய தேர்தல் அறிக்கையில் 'இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம்' என்று வாக்குறுதி கொடுத்திருந்தன. ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், அதைக் கையில் எடுத்துள்ளது அ.தி.மு.க. அரசு.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிக் கொள்கையை உருவாக்குவதற்காக குழு ஒன்றை சமீபத்தில் உருவாக்கி, அதன் முதல் கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது - சத்தமில்லாமல்! ஆம், இந்த விஷயத்தை ஏனோ கமுக்கமாகவேதான் கையாண்டு வருகிறது அரசு. இதுவரையில் வெளிப்படையான அறிவிப்புகளோ... அறிக்கைகளோ தரப்படவில்லை.

இந்த விஷயம்தான்... 'பின்னணியில் அரசியல் ஏதும் இருக்குமோ?' என்கிற சந்தேகத்தைக் கிளப்புகின்றது. அதற்கு தோதாகவே இருக்கிறது குழுவில் இடம்பிடித்திருக்கும் சிலரைப் பார்க்கும்போது!

தமிழகத்தைப் பொறுத்தவரை... 'இயற்கை வேளாண்மை' என்றாலே, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'

கோ. நம்மாழ்வார் என்கிற வெண்தாடிக்காரர்தான் எல்லோர் கண் முன்பாகவும் முதலில் வந்து நிற்பவர். வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காகவே செலவிட்டபடி, தமிழகம் மட்டுமல்லாது... உலகம் முழுக்க முழங்கி வரும் அந்த மனிதருக்கு இக்குழுவில் இடம் இல்லை!

அதேசமயம், ரசாயன வழி விவசாயத்தில் தீவிரமாக இருப்பவர்களுக்கு இடமளித்திருக்கிறார்கள். இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்யும் வெளிமாநில தனியார் நிறுவன முதலாளிக்கும்கூட இடம் தரப்பட்டுள்ளது.

தமிழக மண்ணின் தன்மையை அறிந்த... இயற்கை வழி விவசாயத்தை முழுமையாக ஆதரிக்கக்கூடிய நிபுணர்கள், பட்டங்கள் பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். ஆனால்... கர்நாடகா, காஷ்மீர் என்று வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை, குழுவில் இடம் பெறச் செய்துள்ளனர்.

'செய்வன, திருந்தச் செய்!' என்பதைத் தவிர, வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை நமக்கு!

நேசத்துடன்
ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism