Published:Updated:

முன்னறிவிப்பு !

முன்னறிவிப்பு !

முன்னறிவிப்பு !

முன்னறிவிப்பு !

Published:Updated:
முன்னறிவிப்பு !

முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டும் பகுதி

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்பொழுது, நிலவக்கூடிய தட்ப வெட்பநிலையில், செப்டம்பர் மாதத்தில் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள்; அவற்றுக்கான தடுப்பு முறைகள் குறித்து, சில தகவல்களை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும், பயிர் பாதுகாப்பு மையம்.

பூச்சி, நோய்கள் உஷார்... உஷார்...!

நெல்லுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்!

மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, தண்டுத்துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதலும்; திருவள்ளூர் மாவட்டத்தில் இலைப்பேன் தாக்குதலும் காணப்படுகிறது. வயலில் விளக்குப்பொறி வைப்பதன் மூலமும்,

5% வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

காய்ப்புழுவுக்குக் கவர்ச்சிப்பொறி !

முன்னறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகளில் காய்ப்புழுவின் தாக்குதல்கள் காணப்படுகின்றன. இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தும், தாவரப் பூச்சிக்கொல்லி தெளித்தும் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இலைச்சுருட்டுப் புழுவுக்கு விளக்குப்பொறி !

திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில், இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம் வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை அழித்துக் கட்டுப்படுத்தலாம்.

மாவுப்பூச்சி ஜாக்கிரதை !

பப்பாளி, மரவள்ளி மற்றும் மல்பெரி பயிர்களில் பரவலாக மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அணுகி, 'அசிரோபாகஸ் பப்பாயே (acerophagus papayea) என்கிற ஒட்டுண்ணியை இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism