Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

இலவசப் பயிற்சிகள்

புறக்கடைக் கோழி !

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 11-ம் தேதி காளான் வளர்ப்பு; 13-ம் தேதி மதிப்பூட்டிய மீன் பொருட்கள்; 18-ம் தேதி மதிப்பூட்டிய பால் பொருட்கள்; 25-ம் தேதி புறக்கடைக் கோழி வளர்ப்பு; 27-ம் தேதி அறுவடைக்குப் பின் கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்பாடுகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்), காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

அடர் நடவு மா !

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில், செப்டம்பர் 12-ம் தேதி விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு; 13-ம் தேதி நெல் சாகுபடியில் பூச்சி நோய் மேலாண்மை; 14-ம் தேதி  கலப்பினக் கெண்டை மீன் வளர்ப்பு; 27-ம் தேதி முருங்கையில் மதிப்பூட்டிய பொருட்கள் தயாரிப்பு; 28-ம் தேதி  அடர் நடவு முறையில் மா சாகுபடி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206.

தொலைபேசி: 04577-264288.

இயற்கை வேளாண்மை !

தண்டோரா

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், செப்டம்பர் 29-ம் தேதி இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இடம்: செந்தில்குமரன் திருமண மண்டம். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், சிறப்புரை ஆற்றுகிறார். மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச மரக்கன்றுகள்  வழங்கப்படும்.

ஏற்பாடு: பட்டுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம்.

தொடர்புக்கு: செல்போன்: 94435-49056.

சிப்பிக் காளான் !

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் 15-ம் தேதி இ.எம் மற்றும் பஞ்சகவ்யா பயன்பாடு; 17-ம் தேதி கூடுதல் வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணை; 20-ம் தேதி புறக்கடையில் கோழி வளர்ப்பு; 22-ம் தேதி நவீன நடவு முறையில் துவரை சாகுபடி மற்றும் சிப்பிக் காளான் வளர்ப்பு; 27-ம் தேதி பிஞ்சு மக்காச்சோளம் சாகுபடியும், மதிப்பூட்டியப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.  முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: செல்போன்: 99429-78526.

வான்கோழி !

திண்டுக்கல், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர்-17-ம் தேதி கறவை மாடு வளர்ப்பு;  18-ம் தேதி வெள்ளாடு மற்றும் வான்கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.

தொலைபேசி: 0451-2460141.

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism