Published:Updated:

காற்றில் கலந்த இயற்கைக் காதலன்!

காற்றில் கலந்த இயற்கைக் காதலன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அஞ்சலி

##~##

''நீங்கள் ஆத்திகவாதியாகவோ, நாத்திகவாதியாகவோ இருங்கள்.. ஆனால், ஓர் உண்மையைச் சொல்கிறேன். இயற்கைதான் கடவுள், அம்மா, குரு, நண்பன் எல்லாமும். தாவரங்கள்தான் இயற்கை நமக்கு தந்த வரம். இன்றைக்கு உலகச் சிக்கல்கள் அனைத்துக்குமான தீர்வு... இயற்கையிடம் மட்டுமே இருக்கிறது. ஓர் ஆசாமியை... சாமி ஆக்கியது மரம்தானே..! மரத்தோடு உறவாடுங்கள். வாழ்க்கை நிச்சயம் வளம் பெறும்!''

- மூன்று மாதங்களுக்கு முன்பு, பெங்களூருவில் பேராசிரியர் ராமசாமியைச் சந்தித்து விடைபெற்றபோது, இறுதியாக அவர் சொன்ன இந்த வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

சமூக விடுதலைக்காகப் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர்

17 அன்று, இயற்கைக்காக போராடிய பேரா. ராமசாமி தனது 87-வது வயதில் இயற்கை எய்திவிட்டார்.

சுற்றுசூழல் மேம்பாடு, விலங்குகளின் நலன், இயற்கையைப் பற்றிய ஆய்வு, விழிப்பு உணர்வுப் போராட்டம் என வாழ்ந்த 'பத்மபூஷன்' ராமசாமியின் சாதனைகள் ஏராளம். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் நிறுவனர், கார்ட்மேன், இந்தியப் பண்பாடு மற்றும் புராதன நிலையத்தின் இயக்குநர், இந்திய விலங்குகள் நல அமைப்பு உள்ளிட்ட 27 அமைப்புகளின் அமைப்பாளர், இயக்குநர், ஆலோசகர் என இவரால் பல பதவிகள் பெருமை அடைந்திருக்கின்றன.

காற்றில் கலந்த இயற்கைக் காதலன்!

கடந்த 30 ஆண்டுகளாக இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குச் சுற்றுசூழல், வனம், இயற்கை விவசாயம், விலங்குகளின் நலன் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கிய ராமசாமி, 1926\ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர். சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.

சென்னையில் டன் கணக்கில் சுமை இழுக்கும் மாடுகளின் வேலையை சுலபமாக்குவதற்காக இவர் கண்டுபிடித்ததுதான் டயர் வண்டி. அதனால் 'புல்லக்' ராமசாமி என்றே இவர் அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், இயற்கையின் ஆற்றலையும், மனித ஆற்றலையும் முறையாக நிர்வகிக்கும் வகையில் 'நிர்வாக இயலில்’ புதுமையைப் புகுத்தியதால்... 'இந்திய நிர்வாக இயலின் தந்தை' எனவும் இவர் புகழப்படுகிறார். இவரால் உருவாக்கப்பட்டதுதான் 'இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்'. இதுமட்டுமல்லாமல் ஆக்கப்பூர்வமான மாற்றுக் கல்வியை போதிக்க இவர் நிறுவிய கல்வி நிலையங்கள் ஏராளம்.

பெங்களூரின் மையப் பகுதியான கோரமங்களாவில் 5,000 அடி பரப்பளவில் உலகில் உள்ள அத்தனை அரிய தாவர வகைகளையும் கொண்ட 'பூங்காவை’ உருவாக்கினார். நகர மனிதர்கள் இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் நெல், கம்பு, சோளம், திணையில் ஆரம்பித்து... குட்டை, குகை, குன்றுகள், பாறைகள், ஆலமரம், வாகை மரம் வரை அனைத்தையும் ஒரு கண்காட்சியாகவே பராமரித்து வந்தார்.

அவருடைய இழப்பு இந்தியச் சுற்றுச்சூழலியலுக்கே ஒரு பேரிழப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு