பிரீமியம் ஸ்டோரி

பாரம்பரிய உணவு!

##~##

அக்டோபர் 26-ம் தேதி பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விதை கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது. இடம்: பாஞ்சாலி அம்மன் திருமண மண்டபம், கொசப்பாளையம், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கால்நடை மருத்துவர் காசி.பிச்சை... போன்றவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

ஏற்பாடு: அமுத களஞ்சியம் அறக்கட்டளை, ஆரணி.

தொடர்புக்கு, செல்போன்: 88076-61161, 99445-76343.

சோயா சாகுபடி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 25-ம் தேதி சோயா சாகுபடி; 30-ம் தேதி மானாவாரி நெல் சாகுபடி முறைகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-6. தொலைபேசி: 04577-264288.

மழைக்கால ஆட்டுக்குட்டி!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 25-ம் தேதி மழைக் காலங்களில் ஆட்டுக் குட்டிகள் பராமரிப்பு; 30-ம் தேதி பொது நீர்நிலைகளில் கெண்டை மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள்  நடைபெற உள்ளன.  முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266650, 266345.

பால் பொருட்கள்!

சென்னை, கொடுவள்ளியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்குள்ள மாநில உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பப் பயிற்சி மையத்தில் மாதம்தோறும், பால் பொருட்கள் தயாரிப்பு, மீன், இறைச்சி பதப்படுத்தப்படுத்துதல், கையாளுதல், தரக்கட்டுப்பாடு.... போன்ற பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தண்டோரா

தொழில் முனைவோர்கள், விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள், சுயஉதவிக் குழுப் பெண்கள்... கலந்து கொள்ளலாம். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம்... என்று பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியின் போது, மதிய உணவு, தங்குமிடம் வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, அலமாதி அஞ்சல், சென்னை-600052

தொலைபேசி: 044-27680218/27680214.

பண்ணைக் கருவிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 1-ம் தேதி காளான் வளர்ப்பு; 7-ம் தேதி காடை வளர்ப்பு; 9-ம் தேதி தேனீ வளர்ப்பு; 14-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு; 19-ம் தேதி ஊறுகாய் தயாரிப்பு; 21-ம் தேதி முயல் வளர்ப்பு; 22-ம் தேதி தோட்டக்கலைப் பயிர்களுக்கான  கருவிகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு:  தொலைபேசி: 044-27452371.

தண்டோரா

இயற்கை-கால்நடை முகாம்!

நவம்பர் 7-ம் தேதி இயற்கை வேளாண்மை மற்றும் கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இடம்: சீதா கல்யாண மண்டபம், கோபிச்செட்டிப்பாளையம். மசால் உருண்டை, குடற்புழு நீக்க மருந்து தயாரிப்பு... போன்றவற்றை அனுபவம் வாய்ந்த மூலிகை மருத்துவர்கள் பயிற்சி கொடுக்க உள்ளனர். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், டாக்டர்.புண்ணியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்குகிறார்கள்.

ஏற்பாடு: ஜெயம் பிராணி நல அறக்கட்டளை தொடர்புக்கு, செல்போன்: 98427-04504

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு