பாரம்பரியம்

நவீனக் கண்டுபிடிப்புகள் எத்தனை வீரியமாக இருந்தாலும்... அவை, இயற்கையை ஒருபோதும் வெல்ல முடிவதில்லை. இது, பற்பல முறைகள், பற்பல ரூபங்களில், சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டாலும், 'அறிவியல் அறிவுதான் உசத்தி' என்கிற இறுமாப்போடு இருப்பவர்கள்... அதைப் புரிந்து கொள்வதில்லை என்பதுதான் உண்மை. இதோ... இங்கே மீண்டும் ஒரு முறை இயற்கை, தனது வலிமையை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. கடந்த மாதம் வரை மழை இல்லாமல், வறட்சியில் வாடியது, தமிழ்நாடு. அந்தக் கடுமையான வறட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீரிய நெல் ரகங்கள் வாடிக்கிடந்த போதும், பசுமைக் காட்டி செழித்து நிற்கின்றன, பாரம்பரிய நெல் ரகங்கள்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள முப்பையூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழக்கமாக மானாவாரியாகத்தான் நெல் சாகுபடி நடக்கிறது. இந்தப் பகுதி விவசாயிகள் பெரும்பாலும் ஜே.ஜி.எல். என்கிற வீரிய ரகத்தைத்தான் விதைக்கிறார்கள். புதுச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், இந்த ஊரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் நிலத்தில், மானாவாரியாக நெல் சாகுபடி செய்து வருகிறார். இவர், 11 ஏக்கரில் பாரம்பரிய ரகங்கள், 6 ஏக்கரில் ஜே.ஜி.எல். ரகம் என்று விதைத்திருக்கிறார். ஆனால், எதிர்பார்த்தபடி மழை இல்லாத நிலையில், பயிர்கள் வாட ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஊர் முழுக்க வீரிய ரக நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதேசமயம்... பாரம்பரிய ரகங்கள் மட்டும் பசுமைக் கட்டி நின்றிருக்கின்றன. சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தச் செய்தி, நம் காதுகளையும் அடைய... லட்சுமி நாராயணனை, அவருடைய வயலில் சந்தித்தோம்.

வரப்பில் நடந்தபடியே நம்மிடம் பேசியவர், ''எங்களுக்குச் சொந்தமா 60 ஏக்கருக்கு மேல நிலம் இருந்தது. நான் பேங்க் வேலைக்குப் போயிட்டதால, விவசாயம் பாக்க ஆளில்லாம, நிலங்களைஎல்லாம் அப்பா வித்துட்டாரு.

பேங்க்ல அக்ரி மேனேஜராக நான் இருந்தப்போ... பல தோட்டங்களைப் பாக்கறதுக்காகப் போவேன். அப்போ, எனக்கு திரும்பவும் விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு. அதனால, ரிட்டையர்டு ஆனதுக்குப் பிறகு இங்க 30 ஏக்கர் நிலம் வாங்கினேன்.

நான் வாங்குறப்போ இந்த இடம் முழுக்க சீமைக்கருவேல் புதர் மண்டிக் கிடந்தது. இப்போதைக்கு 17 ஏக்கரை மட்டும்தான் சரி பண்ணி விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இங்க, கிணறோ, போர்வெல்லோ கிடையாது. வருஷத்துக்கு ஒரு தடவை மானாவாரியா நெல் சாகுபடி மட்டும்தான் செய்ய முடியும்'' என்று முன்னுரை கொடுத்த லட்சுமி நாராயணன் தொடர்ந்தார்.

இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன் !

'போன வருஷம் 12 ஏக்கர்ல ஜே.ஜி.எல். ரக நெல்லை ரசாயன முறையில சாகுபடி செஞ்சேன். சராசரியா ஒரு ஏக்கருக்கு 22 மூட்டை (66 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சது. செலவெல்லாம் போக ஏக்கருக்கு 7 ஆயிரம் ரூபாய் லாபமா நின்னுது. அதுக்குப் பிறகுதான் 'பசுமை விகடன்’ படிக்கற வாய்ப்பு கிடைச்சுது. அப்பறம் 'வானகம்’ பண்ணைக்குப் போய் நம்மாழ்வார் ஐயாவைப் பாத்து, இயற்கை விவசாயம் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். தொடர்ந்து, 'கிரியேட்’ அமைப்பு நடத்தின நெல் திருவிழாவுலயும் கலந்துக்கிட்டேன். அது மூலமா, ரசாயன விவசாயத்தால ஏற்படுற தீமைகளையும், இயற்கை விவசாயத்துல கிடைக்குற நன்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டு... 'இனி பாரம்பரிய ரகங்களைத்தான் சாகுபடி செய்யணும்’னு முடிவு பண்ணிட்டு, 'கிரியேட்’ ஜெயராமன்கிட்ட பாரம்பரிய ரக விதைநெல்லை வாங்கிட்டு வந்துட்டேன்.

ஆச்சரியம் கொடுத்த பாரம்பரியம் !

ஆறரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, மூணு ஏக்கர்ல கருடன் சம்பா, ஒன்றரை ஏக்கர்ல சீரகச் சம்பானு போட்டிருக்கேன். மீதி 6 ஏக்கர்ல வழக்கமா விதைக்குற ஜே.ஜி.எல். ரகத்தை விதைச்சிருக்கேன். இந்த முறை

17 ஏக்கர்லயும் இயற்கை விவசாயம்தான். இந்தப்பகுதி விவசாயிங்கள்ல சிலர், 'உரம் போடாம விளையாது’னு பயமுறுத்தினாங்க. ஆனாலும், நான் துணிஞ்சு இறங்கிட்டேன். ஆகஸ்ட் 30-ம் தேதி விதைச்சேன். செப்டம்பர் 12, 13-ம் தேதிகள்ல ஒரு மழை கிடைச்சதால பயிர் எழுந்திரிக்க ஆரம்பிச்சுது. ஆனா, அதுக்குப் பிறகு மழையே காணலை. பயிர்கள்லாம் வாட ஆரம்பிச்சுது.

என்னோட ஆறு ஏக்கர் உட்பட, சுத்து வட்டாரம் முழுசும் ஜே.ஜி.எல். ரக பயிர் மொத்தமும் சுணங்கிப் போயிடுச்சு. ஆனாலும், பாரம்பரிய ரகங்கள் கொஞ்சம்கூட வாடாம 'பச்சை பசேல்’னு வளந்து நின்னுச்சு.

பரம்பரைப் பரம்பரையா இந்தப் பகுதியில விவசாயம் செய்றவங்களே இதை ஆச்சர்யமா வந்து பாத்தாங்க. அவங்க, 'மகசூல் எவ்வளவு கிடைக்கும்’னு தெரிஞ்சுக்க ஆவலோட இருக்காங்க.

மாப்பிள்ளைச் சம்பாவுல இப்பவே 14 தூருக்கு மேல வெடிச்சிருக்கு. பயிரும் செழுமையா இருக்கறதைப் பாத்தா... இந்த முறை ஏக்கருக்கு 30 மூட்டை கிடைக்கும்னு எல்லாரும் சொல்றாங்க'' என்று மகிழ்ச்சியாகச் சொன்ன லட்சுமி நாராயணன் நிறைவாக,

பாதியாகக் குறைந்த செலவு!

''போன முறை ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு வந்துச்சு. இந்த முறை 6 ஆயிரம் ரூபாய்கூட செலவாகல. செலவு பாதியா குறைஞ்சது மட்டுமல்லாம பயிர்களும் நல்லா செழிப்பா இருக்குது.

அதனால, நிச்சயம் அதிக மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். அதெல்லாத்தையும்விட, நஞ்சில்லாத உணவை நான் உற்பத்தி செய்றேன்கிற மனநிம்மதி இருக்கு பாருங்க... அதை வார்த்தையில சொல்ல முடியாது... அதுக்கு விலையும் கிடையாது'' என பூரித்தபடி விடைகொடுத்தார்.

பாரெல்லாம் பரவட்டும் பாரம்பரிய ரகங்கள்!

தொடர்புக்கு,
லட்சுமி நாராயணன்,
செல்போன்: 94424-85252.
ஜெயராமன்,
செல்போன்: 94433-20954.

இப்படித்தான் செய்யணும் சாகுபடி!

லட்சுமி நாராயணன், ஒரு ஏக்கர் நிலத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி செய்யும் விதம் இப்படித்தான்-

'நிலத்தைக் கோடை உழவு செய்து, ஆட்டுக்கிடை அடைக்க வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் நிலத்தை உழ வேண்டும். அடுத்து, டிராக்டர் மூலமாக நிலத்தில் உள்ள கட்டிகள் உடையுமாறு, இரண்டு முறை உழ வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் விதைநெல்லை நேரடியாக விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு மாப்பிள்ளைச் சம்பா ரகம் என்றால், 24 கிலோ விதை தேவை. கருடன் சம்பா ரகம் என்றால் 20 கிலோ தேவைப்படும். சீரகச் சம்பா ரகம் என்றால், 19 கிலோ தேவைப்படும். ஜே.ஜி.எல். ரகம் என்றால், 30 கிலோ விதை தேவைப்படும். விதைகளை கைகளால் தெளித்து விட வேண்டும். விதைத்த பிறகு பெய்யும் மழையை வைத்து பயிர் முளைக்கத் தொடங்கும். பயிர் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, களை எடுத்து, 25 கிலோ மண்புழு உரத்தைத் தூவ வேண்டும்.

களை எடுத்த 20-ம் நாள் பயிர் வளர்ச்சி ஊக்கியாக... 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 8 டேங்க் (10 லிட்டர் டேங்க்) தேவைப்படும். அதற்குப் பிறகு களை எடுக்கத் தேவையிருக்காது. கதிர் பிடிக்கும் சமயத்தில், பஞ்சகவ்யாவில் ஊற வைக்கப்பட்ட 15 கிலோ மண்புழு உரத்தைத் தூவி விட வேண்டும். மானாவாரி விவசாயத்தில் பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அப்படியே ஏதாவது பூச்சிகள் தாக்கினாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மாப்பிள்ளைச் சம்பா 150 நாட்களிலும், சீரகச் சம்பா 135 நாட்களிலும், கருடன் சம்பா 150 நாட்களிலும், ஜே.ஜி.எல். 150 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.’

உரம் போடாமல் உயர் விளைச்சல்!

முப்பையூர் பகுதியில் பல வருடங்களாகத் தொடர்ந்து, மானாவாரி முறையில் நெல் சாகுபடி செய்து வரும் அருள்சாமி... ''எங்க ஏரியாவுல மழை இருந்தாத்தான் விவசாயம். ஆவணி 10 தேதிக்கு மேல விதைச்சு, தை கடைசியில அறுப்போம். எல்லாருமே ஜே.ஜி.எல். ரகத்தைத்தான் விதைப்பாங்க. களை எடுக்குறப்போ பணவசதியைப் பொறுத்து உரம் போட்டுக்குவோம். சிலர், ஒரு மூட்டை டி.ஏ.பி. போடுவாங்க. சிலர், அரை மூட்டை காம்ப்ளக்ஸ், அரை மூட்டை யூரியா ரெண்டையும் கலந்து போடுவாங்க. மறுபடியும் பயிர் பொதி கட்டின பிறகு, ஒரு மூட்டை உரம் கொடுப்போம். அப்பறம் அறுவடைதான். பூச்சி, நோய் எதுவும் தாக்கறதில்லை. அதனால மருந்தடிக்குற வேலையெல்லாம் இல்லை. ஓரளவு மழை கிடைச்சு 'இந்தா...அந்தா’னு விளைஞ்சாலும் ஏக்கருக்கு 20 மூட்டை (66 கிலோ) கிடைச்சுடும். இந்த முறை இவருதான் (லட்சுமி நாராயணன்) நாட்டு விதையை விதைச்சிருக்காரு. உரம் போடாமலே பயிர் நல்ல செழும்பாத்தான் இருக்கு. வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைக்கும்னுதான் தோணுது. இவருக்கு கிடைக்குற மகசூலைப் பாத்துட்டு... அடுத்தத் தடவை, இவர் விதைச்சுருக்கற ரகங்களையே நாங்களும் விதைக்கலாம்னு இருக்கோம்'' என்று எதிர்காலத் திட்டதையும் சேர்த்தே சொன்னார்

இயற்கையில் உருவாகும் வீரிய விதை!

'கிரியேட்’ ஜெயராமன், ''இதுவரைக்கும் பாசனப் பகுதி நிலங்கள்லதான் பாரம்பரிய ரகங்களோட விளைச்சலைப் பாத்துருக்கேன். லட்சுமிநாராயணன் வயல்லதான் முதல்தடவையா மானாவாரியில இவ்வளவு அருமையா விளைஞ்சு நிக்கிறதைப் பாக்கிறேன். வயலைப் பாக்க பாக்க சந்தோஷமா இருக்கு. விதைச்சு 28 நாள்யே மாப்பிள்ளைச் சம்பாவுல 14 தூரும், சீரகச் சம்பாவுல 9 தூரும் வெடிச்சுருக்கு. இனிதான் தூர் அதிகமா வெடிக்கும். இதோட வளர்ச்சியைப் பார்த்தா... 60 தூர் முதல் 65 தூர் வரைக்கும் வெடிக்கும்னு நினைக்கிறேன். மானாவாரியா விளையறதால இந்த விதை அதிக வீரியத்தோட இருக்கும். இது, இயற்கையிலயே உருவாகற வீரீய விதை. இது, வறட்சியைத் தாக்குப்பிடிச்சு வளரும். அதனால, இவர் அறுவடை செஞ்சதும் இந்த நெல்லை வாங்கி மற்ற பகுதிகள்ல சோதனை முயற்சியா சாகுபடி செய்ய முடிவு செஞ்சுருக்கோம்'' என்று ஒரு திட்டத்தோடு பேசினார்.