மாநாடு

இயற்கை விவசாயம் என்பது விளைச்சலின் உச்சத்தை அடைய உதவும் முழுமையான விவசாய முறையாகும். இந்த மாநாடும், கூடியுள்ள கூட்டமும் இந்தியாவில் இயற்கை விவசாயம் வேகமாகப் பரவி வருவதற்கான அடையாளம்''

-இப்படி பெருமையோடு குறிப்பிட்டவர், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 'இந்திய இயற்கை உழவர்கள் மாநாடு', ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில், 'லிவிங் ஃபார்ம்ஸ்’ சார்பில் சமீபத்தில் நடைபெற்றபோதுதான் இப்படி பேசினார், நவீன் பட்நாயக்.

தொடர்ந்தவர், ''இந்திய அளவில் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் ஒடிசா குறைவாகவே பயன்படுத்துகிறது. பாரம்பரியமாகவே ஒடிசா விவசாயிகள் நெல் ரகங்களின் பாதுகாவலர்களாக உள்ளனர். தற்போது ஒடிசாவிலிருந்து பருத்தி, மஞ்சள், பயறு வகைகள், மிளகு, சீரகச்சம்பா... போன்ற விளைபொருட்கள் ஏற்றுமதியாகின்றன. 'கண்டமால்’ ரக மஞ்சள், உலககெங்கும் பெயர் பெற்று தனி 'பிராண்ட்’ ஆக மாறியுள்ளது. இயற்கை வழி விவசாய விளைபொருட்களுக்கு, சான்று வழங்கிட தனித்துறை செயல்படுகிறது. விதைவங்கிகள், இயற்கை விவசாய சங்கங்கள் உருவாக்கவும், அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதோடு, ஒடிசாவில் பள்ளிப் பாடத்திட்டத்திலும், விவசாயப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிலும், பட்ட மேற்படிப்பிலும் இயற்கை வழி விவசாயம் கட்டாயப் பாடமாக்கப்படும்'' என்று உறுதி கொடுத்ததோடு, 'மரபணு மாற்றுப்பயிர்கள்... உண்மை விவரங்கள்'என்கிற ஆங்கில நூலையும் வெளியிட்டார்.

இந்திய இயற்கை உழவர்கள் சங்கத்தின் தலைவர் சர்வதாமன் படேல் பேசும்போது, ''இயற்கை விவசாயம் என்பது ரசாயனங்களுக்குப் பதிலாக, இயற்கையான இடுபொருட்களை இடுவதோ, சான்றுகள் பெற்று விற்பதற்கேற்ற வகையில் விளைவிப்பதோ இல்லை. இயற்கையுடன் இணைந்து, புரிந்துகொண்டு விவசாயம் செய்வதாகும். பலரும் நினைப்பதுபோல அதிக செலவு பிடிக்கும் விவசாயமும் அல்ல. வெளி இடுபொருட்களை வாங்கிப் பயன்படுத்தாமல், மண்ணுக்கேற்ற இடுபொருட்களை நாமே தயாரித்தால்... செலவே இருக்காது'' என்பதை வலியுறுத்தினார்.

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி மையத்தின் இயக்குநர் உமேந்திரா தத், ''நாட்டின் விவசாய நிலப்பரப்பில் இரண்டரை சதவிகிதப் பரப்பே கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், இந்தியாவில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியில் 18% அளவு தெளிக்கப்பட்டு, விவசாய உயிர்ச்சூழல் சிதைந்துள்ளது. இதுதான் பசுமைப் புரட்சி பஞ்சாப்புக்கு வழங்கிய கொடை'. பசுமைப் புரட்சியின் தலைமைச் செயலகம் போல் காட்டப்பட்ட பஞ்சாப் மாநிலம், இன்றைக்கு புற்றுநோயாளிகளின் பூமியாக மாறிவிட்டது'' என்று வேதனையோடு சொன்னவர், அதை படக்காட்சிகள் மூலமாகவும் விளக்கியது... மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் கலங்கடித்தது!