அடுத்தக் கட்டம்

தரிசு நிலத்தில் விளையும் தங்கம், மானாவாரியிலும் மகத்தான லாபம்' என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களால், விவசாயிகளை மூளைச்சலவை செய்து, 'ஜெட்ரோபா’ எனப்படும் காட்டாமணக்கு சாகுபடியை 2005\ம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொடங்கினார்கள் வேளாண் அறிஞர்களும், அதிகாரிகளும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாமல்... முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும்கூட... ஆதரவு கொடுத்து, பெரிதாக பேசியதால்... விவசாயிகளும் நம்பி களத்தில் குதித்தனர்!

சத்தான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலவும், 'மானிய விலையில் செடிகள், அறுவடையான விதையை நாங்களே வாங்கிக் கொள்கிறோம். ஒரு ஏக்கருக்கு 18 ஆயிரம் ரூபாய் வங்கிக் கடன் வாங்கித் தருகிறோம். தரிசு நிலத்தில்கூட விளையும். தண்ணீரே பாய்ச்சத் தேவையில்லை' என்றெல்லாம் விதம்விதமாக ஆசை காட்டினார்கள். ஆனால், இறவைப் பாசன நிலங்களில் செடிகள் வளர்ந்து நின்றாலும்... மகசூல் கொடுக்கவில்லை. மானாவாரியில் சுத்தமாக செடிகள் வளரவே இல்லை! கடைசியில் விவசாயிகள்

பெயரில் வாங்கியக் கடன் தொகைக்கு... செடி, உரம் என கணக்கிட்டு அந்த நிறுவனங்கள் நாமம் சாத்திவிட, விவசாயிகள் கடன்காரர்களானதுதான் மிச்சம்!

இதுதொடர்பாக 25.12.2007 தேதியிட்ட பசுமை விகடனில் 'காலை வாரிய காட்டாமணக்கு... பல் இளிக்கும் பயோ டீசல்' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து நமக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகம், 'காட்டாமணக்கு நிச்சயம் லாபமான பயிர்தான். ஆனால், மானாவாரியில் வரும் என நாங்கள் சொல்லவே இல்லை. இறவையில் செய்யும் விவசாயிகள் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்' என்று சொல்லி, கூடவே விவசாயிகள் சிலரின் முகவரியையும் குறிப்பிட்டிருந்தது.

கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விவசாயிகளை நேரடியாக சந்தித்தபோது... இறவையிலும் காட்டாமணக்கு பல் இளிப்பது உறுதியானது. இதுகுறித்து, 10.07.2008 மற்றும் 25.07.08 தேதியிட்ட இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு, விவசாயிகளிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தினோம்.

இந்நிலையில், 'காட்டாமணக்கு சாகுபடி விஷயத்துக்காக அரசாங்கம் செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாயில் பெரும்தொகையை அதிகாரிகள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போர்வையில் சிலர் அபகரித்துள்ளனர்' என்கிற குற்றச்சாட்டுக்கள் தற்போது கிளம்பி வர ஆரம்பித்துள்ளன. இந்த 'பகீர்' சுருட்டல் பற்றி, அடுத்த இதழில் பார்ப்போம்..!