''இதைவிட பெரிய விருது வேண்டும்!''

நவம்பர் 21\ம் தேதி, சென்னை துறைமுகத் தமிழ்ச் சங்கத்தின் 48\ம் ஆண்டு நிறைவு விழா, துறைமுக நிர்வாக அலுவலக அரங்கத்தில் நடந்தது. மானுட சமூகத்துக்கு சிறந்த சேவையாற்றியதற்காக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வாருக்கு விழாவில் விருது வழங்கப்பட்டது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்ட நம்மாழ்வார், ''இந்த விருது போதாது. இதைவிட பெரிய விருதை நீங்கள் எல்லாம் எனக்கு வழங்க வேண்டும்'' என்று சொல்ல, அனைவரும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். சிறிது இடைவெளிக்குப் பிறகு பேச்சைத் தொடர்ந்தவர்,

''படிப்பு, வேலைவாய்ப்பு என கிராம மக்கள், பெருநகரங்களில் குவிந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி வந்த அனைவரும், பணி ஓய்வுபெற்ற பின், சொந்த கிராமங்களுக்கே திரும்பிச் செல்லுங்கள். அப்போதுதான் இங்கு ஏற்படும் இடநெரிசலைத் தவிர்க்க முடியும். இனி, எந்த நச்சுத் தொழிற்சாலையும் வரக்கூடாது. காலி நிலங்கள் எல்லாம் காடுகளாகவும், நீர்நிலைகளாகவும் மாற்றப்பட வேண்டும். இதையெல்லாம் நீங்கள் நிறைவேற்றினால், அதுதான் எனக்குத் தரக்கூடிய மாபெரும் விருது'' என்று சொல்லி, அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளினார்!

- சூ. அருண்குமார்

உற்சாகம் கொடுக்கும் விருது!

நோபல் பரிசு பெற்ற டாக்டர். நார்மன் போர்லாக் நினைவாக, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் துறையில் சிறந்த சேவை செய்பவர்களுக்கு 'போர்லாக்’ விருதினை, சென்னை 'முருகப்பா குழும' அங்கமான கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனம், ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. நவம்பர் 22-ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் இந்த ஆண்டுக்கான 'போர்லாக்’ விருதுக்குத் தேர்வு பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்ட 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன்,

''டாக்டர். கே.வி. பிரபு, பூசா பாஸ்மதி-6 மற்றும் பாஸ்மதி-1121 ஆகிய பாஸ்மதி ரக அரிசியில் புதிய ஆய்வுகளை மேற்கொண்டதற்காகவும், டாக்டர். அசோக்குமார் சிங் அரிசியில் மரபணு சம்பந்தமான ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காகவும் நவம்பர் 27 அன்று டெல்லியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த இருவரும் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவன (IARI- Indian Agriculture Research Institute) விஞ்ஞானிகள். விவசாயத் துறையில் சாதனை படைக்க விரும்புபவர்களுக்கு, இந்த விருதுகள் உற்சாகத்தைக் கொடுக்கும்'' என்று குறிப்பிட்டார்!

- த. ஜெயகுமார், படம்: க.கோ ஆனந்த்