Published:Updated:

ஆயிரம் அடி ஆழத்திலிருந்தும் அழகாக தண்ணீர் இறைக்கலாம் !

ஜி. பழனிச்சாமி படங்கள்: த. சித்தார்த்

விளக்கம்

##~##

எங்கு திரும்பினாலும், சூரியசக்தி மின்சாரம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அதேசமயம், 'இந்த சோலார் பவரைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல இருக்கற கிணத்துல இருந்தெல்லாம் தண்ணியை இறைக்க முடியறதில்லை. இதுக்கு ஏதாவது தீர்வு இருக்கா?' என்பதுதான் விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

இதைப்பற்றி, 25 ஆண்டுகளாக சூரிய ஆற்றல் மின் உற்பத்தி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்திருப்பவரும், பொறியாளருமான உதயகுமாரிடம் பேசியபோது, ''அதிக ஆழத்திலிருக்கும் தண்ணீரை, சோலார் பவர் மோட்டார் முலம் இறைக்க முடியாது என்பது தவறான கருத்து. தண்ணீர், எத்தனை அடி ஆழத்திலிருந்தாலும், அதற்கு தகுந்த சக்தியுடைய மோட்டார் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்தித்தான் தண்ணீரை இறைக்க முடியும்... தற்போது இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூரியசக்தி மின்சாரம் என்று வரும்போதும், இதுவேதான் தேவைப்படும். ஆனால், போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சோலார் பேனல்களைப் பொருத்தாமல், அதிக ஆழத்திலிருந்து இறைக்கவில்லை என்று குறை சொல்வதை எப்படி ஏற்க முடியும்.

ஆயிரம் அடி ஆழத்திலிருந்தும் அழகாக தண்ணீர் இறைக்கலாம் !

உதாரணமாக 5 ஹெச்.பி. கொண்ட மோட்டார், 60 மீட்டர் ஆழம் உள்ள கிணறில் இருந்து நிமிடத்துக்கு

ஆயிரம் அடி ஆழத்திலிருந்தும் அழகாக தண்ணீர் இறைக்கலாம் !

200 லிட்டர் தண்ணீரை இறைத்துக் கொட்டும். இந்த மோட்டாரை இயக்க, 5 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தேவை. இந்தளவு மின்உற்பத்தி செய்யக்கூடிய சோலார் பவர் யூனிட்டை நிறுவ, 5 லட்ச ரூபாய் செலவாகும். ஆழம் கூடக்கூட... மோட்டாரின் பவர் மற்றும் சோலார் பேனல்களின் எண்ணிக்கை இரண்டையும் கூடுதலாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வகையில், 34 விவசாயிகளுக்கு திருப்திகரமாக இப்படி சோலார் மின் மோட்டார் அமைத்துக் கொடுத்துள்ளேன். ஆயிரம் அடி ஆழத்துல இருந்து தண்ணியை எடுக்கறதுக்கு, குறைந்தபட்சம் 7 ஹெச்.பி மோட்டாரும், அதுக்குத் தகுந்த பேனலும் தேவைப்படும்'' என்று சொன்னார் உதயகுமார்.

திருப்பூர் மாவட்டம், தராபுரம் அருகே வேலப்பன்பாளையத்தில் 75 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வரும் 'பூமெக்ஸ்’ ரங்கசாமி, மின்வாரிய மின் இணைப்புக்குக் காத்திருக்காமல், இரண்டு கிணறுகளுக்கு சோலார் பம்ப்செட் அமைத்துள்ளார். அவருடைய அனுபவத்தைக் கேட்டபோது, '

ஆயிரம் அடி ஆழத்திலிருந்தும் அழகாக தண்ணீர் இறைக்கலாம் !

'என்னுடைய திறந்தவெளி கிணத்துல, 45 அடியிலேயே தண்ணி கிடைக்குது. இருந்தாலும், ஒரு கிணத்துல ஏழரை ஹெச்.பி. மோட்டாரும், இன்னொண்ணுல 10 ஹெச்.பி. மோட்டாரும் அமைச்சுருக்கேன். ஒரு ஹெச்.பி. மோட்டாருக்கு, ஒரு லட்சம் வீதம் செலவாகும்கிறதுதான் சோலார் பம்ப் செட்டுக்கான செலவு கணக்கு. சொல்லப்போனா... இதை செலவுனே சொல்லக் கூடாது. முதலீடுனுதான் சொல்லணும். இலவச மின்சார இணைப்பு வர்றதுக்கு எப்படியும், 15 வருஷம் ஆகும். அதுக்குள்ள... நாம முதலீடு போட்டதைவிட பல லட்சம் லாபம் பார்த்துட முடியுமே! அப்படியே இலவச மின்சாரமே கிடைச்சாலும், போதுமான அளவுக்கு கரன்ட் கொடுப்பாங்களாங்கறதுக்கும் இனி உத்தரவாதம் கிடையாது. அதை நம்பிக்கிட்டிருந்தா... பயிர்தான் பட்டுப்போகும்'' என்று சொன்னார் ரங்கசாமி.

தொடர்புக்கு, ரங்கசாமி,
செல்போன்: 94437-45884.

அடுத்த கட்டுரைக்கு