திட்டம்

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'புவி வெப்பமயமாதல்’ பிரச்னைக்கான ஒரே தீர்வு... மரங்களை நடுவதும், மரங்களைக் காப்பதும், சுற்றுச்சூழலைக் காப்பதும்தான். இதற்காக, 'கிரீன் இந்தியா மிஷன்’ என்ற பெயரில் நாடு தழுவிய திட்டத்தைத் தயாரித்திருக்கிறது... மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நடக்கும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே... வனங்களைக் காப்பது, வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான்!

தமிழகத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை மற்றும் எருமைப்பட்டி ஆகிய இரு ஒன்றியங்களில் உள்ள 56 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான துவக்க விழா, கொல்லிமலை அடுத்துள்ள வீரகனூர்பட்டி மலைக்கிராமத்தில் டிசம்பர் 1 அன்று நடைபெற்றது.

15 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன், மலைகிராம மக்களும் திரளாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சேலம் மண்டல வன அலுவலர் ஏ. வெங்கடேஷ், ''2012 முதல் 2022 வரை பத்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் வனத்துறை மற்றும் மலைக்கிராம மக்கள் அடங்கிய வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுதான் திட்டத்தைச் செயல்படுத்தும். விவசாயிகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராம வளர்ச்சி நிறுவனம்' இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. வனத்தைக் காப்பது, மக்களின் வாழ்வாதரங்களைப் பெருக்குவது, கிராம சுகாதாரத்தைப் பேணுவது, நீராதாரங்களை உருவாக்குவது, கேழ்வரகு, தினை, கம்பு, குதிரைவாலி, சாமை... உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானிய விவசாயத்தை அழியாமல் பாதுகாப்பது என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்'' என்றார்.

வீரகனூர்பட்டி கிராம வனக்குழுத்தலைவி ராஜலட்சுமி, ''மலைச்சரிவுகள்ல இருக்கற நிலத்தை சமன்படுத்தி, கிடைக்கிற மழைய வெச்சு மானாவாரியாத்தான் வெள்ளாமை செஞ்சு காலகாலமா ஜீவனம் செய்துகிட்டிருக்கோம். ஆனா, காடும் அழிஞ்சு, மழையும் குறைஞ்சு போகவே... விவசாயத்தை விட்டுப்புட்டு டவுன் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க இளசுக. இப்ப அறிவிச்சுருக்கற திட்டம் சரிவர நடந்தா... வேலை தேடி போகவேண்டிய அவசியமே எங்களுக்கு இருக்காது'' என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.

'ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராம வளர்ச்சி நிறுவன' செயலாளர் தில்லை சிவக்குமார், ''முதல் கட்டமாக மின்வசதி அதிகம் கிடைக்காத மலைக்கிராமங்களுக்கு சோலார் மின் விளக்குகளைப் பொருத்தத் துவங்கியிருக்கிறோம். சாணக்கழிவுகளில் இருந்து ஒட்டுமொத்த கிராமத்துக்குத் தேவையான சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்வது; அனைத்து வீடுகளுக்கும் சோலார் மின்சார வசதியை ஏற்படுத்தி தருவது; சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீர் நிலைகளில் இருந்து பாசன நீரை எடுத்து கூட்டு விவசாயம் செய்வது... என மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் திட்டங்களும் உள்ளன'' என்று சொன்னவர்,

''இன்னும் 10 ஆண்டுகளில் கொல்லிமலை கிராமங்கள் பசுமை வனமாக மாறி, வெப்பமயமாதலில் இருந்து பூமியைக் காப்பதில் பெரும் பங்களிப்பைத் தரப்போகின்றன... பொறுத்திருந்து பாருங்கள்'' என்று சொன்னார்.

கோடிகளைக் கொட்டி செயல்படுத்தும் இந்தத் திட்டம்... துளியும் பங்கமில்லாமல் மக்களைச் சென்றடையும் என்று நம்புவோம்!