மரம் நடலாம் வாங்க!

''ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அழிவதற்கு, 700 முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆகும். நொடிக்கு 1,500 பிளாஸ்டிக் பாட்டில்கள் நிலத்திலும், நீரிலும் விழுந்து கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான பறவைகள், மீன்கள், கால்நடைகள், விலங்குகள் எல்லாம் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிட்டு, கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால், டன் கணக்கில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியாகிறது. இதனால், ஓசோன் படலம் ஓட்டையாகி, பூமி சூடாகிக் கொண்டே செல்கிறது. வருங்கால சந்ததிகளுக்கு மாசு இல்லாத பூமியைக் கொடுக்க... மரம் நடுவோம் வாருங்கள். அதற்காகத்தான் இந்தப் பணியை 'பசுமை கலாம்' என்ற பெயரில் இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறோம்''

-இது, நடிகர் விவேக் பேசியது. இடம், சென்னை, புதுக்கல்லூரியில் 'பயோ-டெக் 2012’ என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, புவி வெப்பமயமாதலை உருவாக்கும் காரணிகள், மரபணு ஊட்டப்பட்ட உணவுப் பொருட்களின் தீங்குகள், பல்லுயிர் இனப்பெருக்கம், மரங்களை வளர்த்தல், தகவல் தொழில்நுட்பத்தில் உயிர் தொழில்நுட்பம் ஆகியவற்றை பற்றி விவாதித்த இந்த 'பயோ-டெக் 2012' கருத்தரங்கு, டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கல்லூரியின் உயிர் தொழில்நுட்ப துறைத் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

த. ஜெயகுமார் படம்: ரா. மூகாம்பிகை

உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு மானியம்!

'தேசிய உணவுப் பதப்படுத்தும் இயக்ககம்’ சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த, தர்மபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கடந்த நவம்பர் 22-ம் தேதி கருத்தரங்கு ஒன்றை தர்மபுரியில் ஏற்பாடு செய்திருந்தது. உணவுப் பதப்படுத்தும் இயக்ககம் வழங்கும் கடனுதவிகள், மானியங்கள் பற்றி விளக்கப்பட்டது.

இதுபற்றி பேசிய வேளாண் வணிகப் பிரிவு துணை இயக்குநர் செல்வம், ''மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகம், புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு மானியங்கள் வழங்கி ஊக்கப்படுத்துகிறது. இந்த மானியங்களை வாங்குவதற்காக, பயனாளிகளே நேரடியாக விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர். இதில் சிறு குறைபாடுகள் இருந்த காரணத்தால், வின்ணப்பங்களைப் பரிசீலித்து அனுப்பும் பொறுப்பு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகப் பிரிவு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்திலேயே முதன்முதலாக தர்மபுரியில் இந்தக் கருத்தரங்கை நடத்தியுள்ளோம். எளிமைப் படுத்தப்பட்ட இந்தத் திட்டங்கள் மூலம் நிறைய தொழில் முனைவோர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

-எஸ். ராஜாசெல்லம்.