''தற்போதைய கரும்பு பருவத்தில் (2012-13), ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 350 ரூபாய் என்ற விலையை அரசு அறிவித்திருக்கிறது. இது எங்களுக்குக் கட்டுபடியாகாது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்ற கோரிக்கையை வலியுறுத்தி... டிசம்பர் 6-ம் தேதி விழுப்புரத்தில் 'இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை ஒரு கலந்துரையாடலை நடத்தின. விவசாய சங்க பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் இதில் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பேசும்போது, ''தேர்தலின்போது, ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என்று அறிவித்தார், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதை, வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்குத்தான் கொடுப்பார் என நினைக்கிறேன். உரிய விலையை அறிவிக்காவிட்டால்... தலைமைச் செயலகத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்றார் ஆவேசமாக.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த ரேவதிராஜன், ''ஒரு டன் கரும்புக்கு, வெட்டுக்கூலி 600 ரூபாய்; கரும்பை நிலத்துல இருந்து ரோட்டுக்குக் கொண்டு வர 530 ரூபாய்; வண்டி மாமூல் 200 ரூபாய்னு வாங்குறாங்க. அடுத்தடுத்த மாசங்கள்ல எவ்வளவு விலை ஏத்துவாங்கனு தெரியாது. இதுக்கு மேலயும் எங்களால தாங்கிக்க முடியாது. வெட்டுக்கூலியை ஆலையே ஏத்துக்கணும்'' என்று வேண்டுக்கோள் வைத்தார்.

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, ''வரும் பொங்கல் பண்டிகைக்குள் கரும்புக்கான விலையை, டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி அறிவிப்பு செய்யாவிட்டால், பொங்கல் பண்டிகையன்று அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்துவோம்'' என்று ஆக்ரோஷமாகச் சொன்னார்.

கூட்டத்தின் முடிவாக தீர்மானங்களை வாசித்த, இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் விருதகிரி,

''ஒரு டன் கரும்புக்கு 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்க வேண்டும். வெட்டுக்கூலியை ஆலைகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில அரசு, தன்னுடைய விலையை மறுபரிசீலனை செய்யாவிட்டால், முதல் கட்டமாக... டிசம்பர் மாத இறுதியில், தமிழகம் முழுவதும் இருக்கும் கரும்பு விவசாயிகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருப்போம்'' என்று அறிவித்தார்.