சென்ற இதழ் தொடர்ச்சி

பல கோடி ரூபாய் மூலதனத்தில் ஆடம்பரமாகத் தொடங்கப்பட்ட, பயோ-டீசலுக்கான காட்டாமணக்கு (ஜெட்ரோபா) சாகுபடித் திட்டம் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்ததைப் பற்றியும்... விவசாயிகளுக்கு பலன் தராத அத்திட்டத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை 'பசுமை விகடன்' தொடர்ந்து ஏற்படுத்தி வருவது பற்றியும்... கடந்த இதழில் குறிப்பிட்டு இருந்தோம். கூடவே, 'காட்டாமணக்கு சாகுபடி விஷயத்துக்காக அரசாங்கம் செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாயில் பெரும்தொகையை அதிகாரிகள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போர்வையில் சிலர் அபகரித்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டுக்கள் தற்போது கிளம்பி வர ஆரம்பித்துள்ளன. இந்த பகீர் சுருட்டல் பற்றி, அடுத்த இதழில் பார்ப்போம்!' என்றும் குறிப்பிட்டிருந்தோம்!

தமிழகத்தில் காட்டாமணக்கு அறிமுகமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆன நிலையில், 'தற்போது இந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது’ என்பதைப் பற்றிய விசாரணையில் இறங்கியபோதுதான்... இத்தகைய பகீர்கள் நம்மைத் தாக்கி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தின. விவசாயிகளின் பெயரால்... மெத்தப் படித்த மேதாவிகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகள் என ஒரு பெரும் கூட்டமே தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பது கொடுமையிலும் கொடுமை !

எம்.ஜி.ஆர். பயோ-டீசல் நிறுவனத்தின் உரிமையாளர் அழகர்சாமி. ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காட்டாமணக்கை சாகுபடி செய்தவர் இவர். தற்போது, இவருடைய தோட்டத்தில் 10 செடிகள் மட்டுமே இருக்கின்றன. சிவகாசி அருகே அமைந்துள்ள தன்னுடைய தோட்டத்தில் இருந்த அழகர்சாமியைச் சந்தித்தபோது, ''நான் மத்திய அரசின் பொதுத் தணிக்கைத் துறையில் டெல்லி அலுவலகத்தில் பணியாற்றியவன். தற்போது 72 வயதாகிறது. காட்டாமணக்கு மற்றும் பயோ-டீசல் துறையில இருந்த ஆர்வம் காரணமாக, இதில் இறங்கினேன். பயோ-டீசல் அற்புதமான வருவாய் தரக்கூடிய ஒரு துறை. அதை எப்படிஎல்லாம் செய்யக் கூடாதோ அப்படிஎல்லாம் செய்துமுடித்து, தமிழ்நாட்டில் அதன் பெயரையே கெடுத்து வைத்துள்ளார்கள். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

விவசாயிகளை ஏமாற்றிய பொய் பிரச்சாரம் !

தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள், காட்டாமணக்கைப் பற்றிய உண்மையை மறைத்து விட்டார்கள். 'மானாவாரியிலும் மகசூல் கொடுக்கும்’ என்று பொய் பிரசாரம் செய்தார்கள். அத்துடன் மானிய விலையில் செடிகள், வங்கிக் கடன் என ஆசை வார்த்தைகள் காட்டவும்... விவசாயிகளும் ஆசைப்பட்டு வாங்கி, நட்டு நஷ்டமடைந்ததுதான் மிச்சம். உண்மையில் இறவையில்தான் காட்டாமணக்கு நல்ல மகசூல் கொடுக்கும். அதுவும் பொருளாதார ரீதியாகப் பார்த்தால்... கட்டுப்படியானதாக இருக்காது. அதனால் இறவையில் காட்டாமணக்கைப் பயிரிட்டு, ஊடுபயிராக ஆமணக்கு, புங்கன், இலுப்பை, புன்னை என பல எண்ணெய் வித்துப் பயிர்களை இணைத்து சாகுபடி செய்தால் மட்டுமே, நல்ல வருமானம் ஈட்ட முடியும். தங்கள் சுயலாபத்துக்காக இந்த உண்மைகளை மறைத்து விட்டார்கள். கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாயை இழந்த பிறகுதான், இந்த உண்மைகள் எனக்குத் தெரிய வந்தன. இதே நிலைதான் பலருக்கும்'' என்று வருத்தம் பொங்க சொன்ன அழகர்சாமி தொடர்ந்தார்.

பல்கலைக்கழகமும்... பரமாத்மாவும்தான் காரணம் !

''ஒரு புதிய பயிரை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, வணிகரீதியாக வெற்றியடைய சாத்தியம் இருக்கிறதா..? என ஆராய்ந்து அறிந்து அதற்கு பின்புதானே விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அதை செய்யத் தவறி விட்டது. தமிழகத்தில் காட்டாமணக்கு தோல்வியடையக் காரணம், பல்கலைக்கழகத்தில் உள்ள 'உயிர் ஆற்றல் திரவ எரிசக்தி மைய’த்தின் தலைவராக இருந்த பரமாத்மா என்பவர்தான். காட்டாமணக்கு சாகுபடி மேம்பாட்டுக்காக பல கோடிகளை அரசிடம் பெற்றுக் கொண்டவர், அதை வைத்து எந்த உபயோகமான வேலையையும் செய்யவில்லை. அவ்வளவு பணத்தையும் பயன்படுத்தி அதிக மகசூல் கொடுக்கும் வீரிய விதைகள், ஒரு மாதிரிப் பண்ணை, ஒரு மாதிரி எண்ணெய் ஆலை என எதையும் அவர் செய்யவில்லை.

நம்பி நடவு செய்தவர்கள் முட்டாள்களா..?

கூட்டங்கள், பயிற்சிகள், நிர்வாக வசதிக்காக கட்டடம், பணியாளர்களுக்கு லேப்டாப் என தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைச் செய்து, அவ்வளவு பணத்தையும் அழித்து விட்டார். ஆறு பாஸ்போர்ட் தீரும் அளவுக்கு பல நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். இவரிடம் அரசு கொடுத்த தொகை எவ்வளவு? அதை இவர் எது எதற்காக பயன்படுத்தினார்? என்பதையெல்லாம் ஆழமாக விசாரித்தால், பல ஊழல்கள் வெளியே வரலாம். அவ்வளவு பணத்தையும் வாங்கி, பயன்படுத்திக் கொண்ட பிறகு, 'தமிழகத்தில் காட்டாமணக்கு சாகுபடி தோல்விஅடைந்து விட்டது’ என மத்திய அரசுக்கு இவரே அறிக்கை எழுதியிருக்கிறார். ஆக, இவரது பேச்சை நம்பி, காட்டாமணக்கை நட்டவர்களெல்லாம் முட்டாள்களா.? இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு உண்மையை வெளிக்கொண்டு வந்து, தவறு செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்'' என்று காட்டமாகச் சொன்னார்.

இடம் மாறிய உயிர் ஆற்றல் திரவ எரிசக்தித் துறை !

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக பேராசிரியர். பரமாத்மாவை நெடிய முயற்சிக்குப் பிறகு அலைபேசி மூலமாக பிடித்தோம். குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டபோது, ''அரசாங்கம் எனக்கு இட்டப் பணியைத்தான் செய்தேன். என் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, எப்போதும் நான் செயல்படுவது இல்லை. நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களும் அரசாங்கம் அறிவுறுத்திய பிறகே மேற்கொண்டேன். இதற்கு மேல் இதைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை'' என்று மட்டும் சொன்னார்.

இந்தக் கட்டுரைக்காக, 'காட்டாமணக்கு பெயரில் சுருட்டிய கோடிகள்’ என்ற தலைப்பில், கடந்த இதழில் முன்னோட்ட செய்தி வெளியானது. இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் பரமாத்மாவைத் தலைவராக கொண்டு இயங்கி வந்த 'உயிர் ஆற்றல் திரவ எரிசக்தி துறை’ என்ற துறை, மேட்டுப்பாளையத்தில் உள்ள வனவியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம், பல்கலைக்கழகம் மற்றும் பரமாத்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் துணைவேந்தர் ராமசாமியிடம் கேட்டபோது, ''இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது'' என்று ஒதுங்கிக் கொண்டார்.