அப்பாடா... ஒரு வழியாக, தென்மண்டலத்துக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தற்போது சென்னையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட புகார்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்காகவே 2010, அக்டோபர் 18-ம் தேதி புதுடெல்லியில் 'தேசிய பசுமைத் தீர்ப்பாயம்’ அமைக்கப்பட்டது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் இவ்வளவு தூரம் பயணித்து வந்து, தங்கியிருந்து, வழக்குகளை முடித்துச் செல்வதற்கு பலரும், பல்வேறு சிரமங்களை சந்திப்பதைக் கருத்தில் கொண்டு... சென்னை, கொல்கத்தா, புனே, போபால் ஆகிய இடங்களிலும் தீர்ப்பாயங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வரிசையில், முதல்கட்டமாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு... தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், தற்போது உருவாக்கப்பட்டுள்ளது! தென் மண்டலங்கள் சார்ந்து... உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் உள்ள சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வழக்குகளும் இந்த தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும். இங்கே வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். சொக்கலிங்கம், அண்ணா பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் மையத்தின் முன்னாள் தலைவர் ஆர். நாகேந்திரன் (எக்ஸ்பர்ட் மெம்பர்) ஆகியோர், இந்தத் தீர்ப்பாய நீதிபதிகளாக செயல்படுகின்றனர். இருவரும் டெல்லியில் உள்ள முதன்மைத் தீர்ப்பாயத்தில் பணிபுரிந்தவர்கள்.

அனல்மின் நிலையம், நீர்மின் நிலையம், கனிம வளம் சார்ந்த புகார்கள்; காற்று, நீர் மாசுபடுதல், வசிப்பிடங்களில் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள், கடற்கரை ஆக்கிரமிப்புகள், சாயப்பட்டறைக் கழிவுகளால் நீர்நிலை, நிலங்கள் பாதிப்பது, வனப்பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு... என சூழல் சார்ந்த பிரச்னைகளுக்காக இந்தத் தீர்ப்பாயத்தில் புகார் செய்யலாம். புகாரைப் பதிவு செய்வதற்கான கட்டணமாக 1,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகவரி: 'தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 950/1, டி.என்.பி.சி.பி. பில்டிங், பூந்தமல்லி சாலை, அரும்பாக்கம், சென்னை. 600106. தொலைபேசி: 044-26264024/25

இணையதளம்: www.greentribunal.in