காவிரி நதி நீர் பிரச்னையில், 'உரிமையை நிலை நாட்டியே தீருவோம்’ என தமிழக அரசும், 'ஒரு சொட்டுக் கூட தர மாட்டோம்’ என கர்நாடக அரசும் தொடர்ந்து மோதிக் கொண்டுள்ளன. பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு கை கட்டி, வாய் மூடி, மௌன சாட்சியாக நிற்கிறது. பாடுபட்டு பயிர் செய்த டெல்டா விவசாயிகளோ, கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளனர்.

இதோ, இப்போதுகூட... 'தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, 'எங்களுக்கே தண்ணீர் இல்லை. எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது' என்று அந்த உத்தரவையே காலில் போட்டு மிதிக்கப் பார்த்த கர்நாடகா, பிறகு, தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு, தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறது.

என்றாலும், ''இந்த 10 ஆயிரம் கன அடி தண்ணீர், காய்ந்து கிடக்கும் ஆறு மற்றும் வாய்க்கால்கள் குடிப்பதற்கே போதாது... இதை வைத்துக் கொண்டு, பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது. இந்த விஷயத்தில் அரசுகளும் சரி, நீதிமன்றங்களும் சரி... மொத்தத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கின்றன'' என்று கொதிக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்!

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மட்டுமே சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா பருவ விதைப்பு நடந்துள்ளது. ஆனால், காவிரியில் தண்ணீர் இல்லாததால், பயிர்கள் கருக... விவசாயிகள் வாடிக் கொண்டுள்ளனர். இத்தகைய இக்கட்டானச் சூழலில், உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி நவம்பர் 29 அன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டரை நேரில் சந்தித்தார். ஆனால், 'ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர மாட்டோம்’ என அவர் கைவிரித்துவிட்டதால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் கொதிப்பு உச்சத்துக்கு எகிறியது.

திருச்சி, தஞ்சாவூரில் கர்நாடக முதல்வரின் கொடும்பாவியைக் கொளுத்தி, தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தைப் புறக்கணித்து... சாலை மறியலும் நடத்தினர். டிசம்பர் 3 அன்று திருவாரூர் மாவட்டம், கமலாபுரத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை முற்றுகையிட்ட நான்காயிரம் விவசாயிகள்.. 'கர்நாடகாவிடமிருந்து, தண்ணீரைப் பெற்று தராத மத்திய அரசு, தமிழ்நாட்டிலிருந்து பெட்ரோல் எடுக்கக் கூடாது’ எனக் கொதிப்புக் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில்தான், 'இரு மாநில தண்ணீர் தேவை குறித்து முடிவெடுப்பதற்காக டிசம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் காவிரிக் கண்காணிப்புக்குழுவைக் கூட்டி, தற்போதையச் சூழலில் இருமாநிலங்களின் தற்போதைய தண்ணீர் தேவை குறித்து ஆலோசித்து, வரும் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். கூடவே, 'காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, இதுவரையிலும் மத்திய அரசு, அரசிதழில் வெளியிடாதது ஆச்சரியம் அளிக்கிறது. அது எப்போது வெளியாகும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவில் போராட்டங்கள் ஒருபுறம் நடக்க... டிசம்பர் 6 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ''எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது'' என்று கறாராகக் கூறினார். ஆனால், அதன்பிறகு என்ன நடந்தோ... டிசம்பர் 6 அன்று இரவு 11 மணிக்கு மேல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீரைத்

திறந்துவிட்டிருக்கிறது கர்நாடகா.

ஆனால், 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்கிறார்கள். ஆனாலும், தற்போதையச் சூழலில், அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை’ எனப் பொங்குகிறார்கள் டெல்டா விவசாயிகள். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய 'பாரதிய கிஷான் சங்க' மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு, ''ஏற்கெனவே தண்ணியில்லாம நிலமெல்லாம் வறண்டு போயிருக்கு. இந்த நிலையில இவங்க திறந்துவிடற 10 ஆயிரம் கன அடி எந்த மூலைக்கு? அந்தத் தண்ணி, நிலம் குடிக்கறதுக்குத்தான் சரியா இருக்கும். சொல்லப் போனா, காய்ஞ்சு கிடக்கற ஆறு, வாய்க்கால் இதையெல்லாம் தாண்டி அந்தத் தண்ணி நிலத்துக்கு வந்து சேர்றதே கஷ்டம். குறைஞ்சபட்சம் 30 டி.எம்.சி-யாவது கொடுத்தாத்தான்... ஓரளவுக்கு சமாளிக்க முடியும். மொத்தத்துல பயிர்களைக் காப்பாத்த... இன்னும் 80 நாளைக்கு தண்ணி தேவைப்படுது. இதுல நாலு நாளைக்கு மட்டும் தண்ணி கொடுக்கறதால பெருசா எதுவும் நடந்துடப் போறதில்லை'' என்றார் ஆதங்கத்துடன்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, டிசம்பர் 7 அன்று டெல்டா மாவட்டங்களில் பொதுவேலை நிறுத்தம், ரயில் மறியல், பஸ் மறியல் என்று நடத்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள், தனியார் பள்ளிக்கூடங்கள் என்று பல தரப்பும் இணைந்து, இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

பழையப் போராட்டம்... புதிய வழக்கு... பின்னணியில் பழைய ரயில்வே அமைச்சர்?!

காவிரிப் பிரச்னைக்காக அக்டோபர் 4-ம் தேதியன்று டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர் விவசாயிகள். அதற்காக தற்போது, மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையினர், வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். ''இதன் பின்னணியில் கர்நாடக மாநில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்'' என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழக விவசாயிகள்.

இதைப் பற்றிப் பேசும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், ''மறியல் செய்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்து, அன்று மாலை விடுவித்திருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக, வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்புகிறது, ரயில்வே பாதுகாப்புப் படை. இது சட்டவிதி மீறல். மறியலில் கைதானவர்களின் பெயர், முகவரியை தமிழக காவல்துறைதான் ரயில் பாதுகாப்புப் படைக்கு கொடுத்திருக்கிறது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல... இனத்துரோகமும்கூட. இந்த அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவைச் சேர்ந்த முனியப்பாதான், நவம்பர் 5-ம் தேதி வரை ரயில்வே இணையமைச்சராக இருந்தார். அவரது தூண்டுதலின் பேரில்தான் இந்தப் பழிவாங்கல் நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்களும், மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் என்ன பணியாற்றுகிறார்கள் என்றே தெரியவில்லை'' என்றார், ஆத்திரத்துடன்.

'அப்படி என்னதான் பணியாற்றுகிறார்கள்?' என்பதைத் தெரிந்துகொள்ள டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், பெரும்நிலக்கிழாருமான மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனிடம் கேட்டோம். நம்மிடம் பேசவே மறுத்து விட்டார் அவர்.

தமிழக கதர்ச்சட்டைகளுக்கு இலங்கைத் தமிழர்கள்தான் எதிரிகள். நாமுமா?!

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மோகன வடிவேலுவிடம் கேட்டபோது, ''பொதுவாக, ரயில் மறியல் என்றால் தண்டவாளத்தில் நின்று முழக்கமிடுவார்கள். அதோடு முடிந்து விடும். இவர்களோ, தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு நீண்ட நேரம் பிடிவாதம் செய்தனர். ரயிலுக்குள் அமர்ந்துகொண்டு, செயினை இழுத்து, வண்டியை இடையிடையே நிறுத்தினார்கள். இப்படி பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றதால், டெல்லி ரயில்வே போர்டு உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று சொன்னார்.

-படங்கள்: கே. குணசீலன்

69 கோடி ரூபாய் திட்டம்... யாருக்கு லாபம்?

'சம்பா பயிரைக் காப்பாற்ற... டெல்டா பகுதிக்கு 69.88 கோடி ரூபாய் மதிப்பில் 10 அம்ச திட்டம்'' என்று அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த அறிவிப்புகள், விவசாயிகளிடம் வரவேற்பைப் பெறும் என்றுதான் முதல்வர் எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால், இது பரவலாக வெறுப்பை உண்டாக்கிஇருக்கிறது என்பதுதான் உண்மை.

இதுகுறித்து பேசிய தஞ்சாவூர் மாவட்டம், நரசிம்மபுரம் சரபோஜி, ''இது மொத்தமும் கண்துடைப்பு வேலைதான். விவசாயத்துக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தரப்படும்னு சொல்லியிருக்காங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னயும் இதேபோலத்தான் சொன்னாங்க. ஆனா, தினமும் 18 மணி நேரம்... 20 மணி நேரம் மின்வெட்டைத்தான் அமல்படுத்தினாங்க. பிறகு எப்படி, 12 மணி நேரம் மின்சாரத்தைக் கொடுத்திருப்பாங்க? இப்பவும் இதே கதைதான் நடக்கும்.

ஏக்கருக்கு 600 ரூபாய் டீசல் மானியம்னு அறிவிச்சிருக்காங்க.... இன்னும் 80 நாளைக்கு தண்ணீர் பாய்ச்சணும்கிற நிலையில...

6 ஆயிரம் ரூபாய்க்கு மேல டீசல் வாங்கியாக வேண்டியிருக்கும். அப்படியிருக்கறப்ப,

600 ரூபாயை வெச்செல்லாம் சமாளிக்கவே முடியாது. இந்த 600 ரூபாயும்கூட, விவசாயிகளுக்கு ஒழுங்கா கிடைக்காது. போன வருஷமும் இப்படித்தான் அறிவிச்சாங்க. விவசாயிகளுக்கு அது ஒழுங்கா கிடைக்கவே இல்லை.

பிரதான வாய்க்கால்கள்ல இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும்போது... நீர் இழப்பு ஏற்படுதுனு சொல்லி, அதைத் தடுக்க, 12 கோடி ரூபாயில பைப் வழங்கப் போறாங்களாம். இதுவும் கவைக்கு உதவாத திட்டம்தான். ஆகக்கூடி, இதெல்லாமே ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு, அதிகாரிகளுக்கு, கம்பெனிக்காரர்களுக்குதான் பயன்படபோகுது'' என்று வருத்தத்துடன் சொன்னார்.