வரலாறு

சகிப்புத் தன்மை இல்லாமைதான், போருக்குக் காரணம் என்பதை உணர்ந்த டொமினிக் பியர் (Dominique Pire)'என்னைப் போல் மற்றவர் இல்லை’ என்ற உணர்வுதான் சகிப்புத் தன்மை இல்லாமைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால், ஒவ்வொன்றும் வேறுபடுவதுதானே இயற்கை.

அப்படியானால், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எப்படி?

வேறுபடும் இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள் அல்லது இரண்டு நாடுகள் மனந்திறந்து உரையாட வேண்டும். இரண்டு பேருமே பேசுவோராகவும், கேட்போராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவரைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். மனந்திறந்த உரையாடல் மட்டும்தான் போரைத் தடுக்க முடியும். இந்த சிந்தனையில் விளைந்ததுதான் 'அமைதியைக் கட்டி எழுப்புவோம்’ (Building Peace) என்கிற புத்தகம். 'யாரையும் மாற்றலாகாது. உரையாடலை உருவாக்கு’ என்கிற இரண்டு சித்தாந்தங்களை உள்ளடக்கியதுதான் அந்தப் புத்தகம்.

டொமினிக் பியர், அமைதிக்கான பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவினார். இப்பல்கலைக்கழகம் உலகெங்கிலும் உள்ளவர்கள் அவ்வப்போது கூடி உலக நடப்புகளை ஆய்வு செய்ய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, அவர் நிறுவியதுதான் அமைதித் தீவு.

1962-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்க தேசம்) வீசிய புயலால் வெள்ளம் பெருக்கெடுத்து... பல பகுதிகள் நீருக்குள் மூழ்கிப் போயின. 'உதவிக் கரம் நீட்டுங்கள்’ என டொமினிக்கை அழைத்தார்கள். அங்கு சென்ற பிறகு, 'மக்கள் அமைதியை இழப்பதற்கு போர் ஒன்று மட்டுமே காரணமாக இல்லை’ என்ற புரிதல் டொமினிக்குக்கு வந்தது. 'இவர்களுக்கு நிவாரணம் மட்டும் போதாது. வளர்ச்சித் திட்டங்கள் தேவை’ என்பதையும் உணர்ந்தார். அப்படிப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான் அமைதியான சூழல் நிலவும் என்றும் நம்பினார். அதுதான் 'அமைதித் தீவு’க்கான பெயர்க் காரணம்.

வணிகத்துக்காக பல நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள், அந்தந்த நாடுகளை அடிமைப்படுத்தியதையும், அதனால் போராட்டங்கள் வெடித்ததையும் நினைவில் நிறுத்திய டொமினிக், 'நாம் எந்த நாட்டிலும் தங்கிவிடக் கூடாது. ஒரு நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கும்போதே எப்பொழுது திரும்பப் போகிறோம் என முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, நாடு திரும்ப வேண்டும்’ என்ற கருத்தை அவருடன் இருந்தவர்களுக்கு போதித்தார். அதன்படி கிழக்கு பாகிஸ்தானில் திட்டம் முடிவுக்கு வந்தவுடன், இரண்டாவது அமைதித் தீவை அமைக்க அவர் தேர்ந்தெடுத்த நாடு, இந்தியா.

இந்தியாவுக்கு வந்த அமைதித் தீவுத் திட்டத்தை, தமிழகத்துக்குக் கொண்டு வருவதில் சர்வோதயத் தலைவர் ஜெகநாதன் முனைப்பாக இருந்தார். நாங்குநேரி பகுதியில் இருந்த நிலக்கிழார்கள், வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தானம் கொடுத்திருந்தார்கள்.

'அப்படி தானமாகக் கிடைத்த நிலங்களில் பொதுக் கிணறுகளை அமைத்து தண்ணீரைப் பகிர்ந்தளித்து, நிலமற்ற மக்களை அங்கே குடியேற்றலாம்’ என்ற எண்ணத்தில் நாங்குநேரியை அடுத்திருந்த களக்காட்டுக்கு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்து, அதையே அலுவலகமாகவும் பயன்படுத்திக் கொண்ட வேன் கம்ஃபர்ட்-ஜெட் ரூட் தம்பதியுடன் நானும் இணைந்து கொண்டேன்.

நான் முன்பே குறிப்பிட்டது போல விடுமுறைக்காக வேன் கம்ஃபர்ட் தம்பதி பெல்ஜியம் புறப்பட்டார்கள். சாலை அமைப்பது, மரங்கள் நடுவது, உழவர் நிலங்களில் மாதிரி வயல்கள் அமைப்பது போன்ற பணிகளில் நான் ஈடுபட்டிருந்தேன். கட்டடங்களை எழுப்புகிற பணி, பொறியாளர் ஆதம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதமின் சகோதரர்கள் எனக்குச் சிறந்த நண்பர்கள் ஆனார்கள். அவர்களது துணிக்கடை (அக்பர் ஸ்டோர்ஸ்) அந்த வட்டாரத்திலேயே பெயர் பெற்ற ஒன்றாக விளங்கியது.

ஆதமின் அப்பா, ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்த 'நல்லாசிரியர்’ சம்பந்தம், விவசாய சங்கத் தலைவர் 'சிதம்பராபுரம்’ நடராஜன், அவருடைய மருமகன் கருணாகரன், தையல்காரர்கள்... என என்னுடைய நட்பு வட்டாரம் விரிந்து கொண்டே போனது. மருத்துவர் கோவிந்தராஜன், வேளாண்துறை அலுவலர் வி.எஸ். அருணாச்சலம், கால்நடை மருத்துவர் டாக்டர். சங்கரலிங்கம் எல்லோரும் என்னுடைய குடும்ப நண்பர்களாகிப் போனார்கள்.

கால்நடை மருத்துவர் சங்கரலிங்கத்தின் வீட்டில், மாலை நேரத்தில் நாங்கள் கூடுவது வழக்கம். விடுமுறைக்குப் பிறகு திரும்பிய வேன் கம்ஃபர்ட் தம்பதி, அமைதித் தீவு வளாகத்துக்குள் கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, தட்டுப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தினார்கள். இதனால் ஏராளமான பேர் உள்ளே வரத் தொடங்கியதால்... நட்பு வட்டம் இன்னும் விரிந்தது. அதனால், என்னுடைய விரிவாக்கப் பணி வேலைகள் மிகவும் சுலபமாகின.

அமைதித் தீவுக்கு, பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த பெண் மருத்துவர் கேசோங், திருமணமாகாதவர். கண்டிப்பானவர். ஏழைகளுக்கு உதவுவதில் அக்கறை கொண்டவர். ஒரு ஜீப்பில் மருந்துகளோடும் உதவியாளர்களோடும் கிராமங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஒரு வாரத்துக்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துவிட்டு திரும்புவார். ஞாயிற்றுக்கிழமை தலைமை நிலையத்தில் தங்கி மருத்துவம் பார்ப்பார். நெடுநாள் மருத்துவம் தேவைப்படும் நோயாளிகளை தலைமை நிலையம் வரச்சொல்லி அவர்களைத் தங்க வைத்து தீவிர சிகிச்சையளிப்பார். பேறு காலத்துக்காக வருபவர்களும் உண்டு.

அங்கிருந்த இன்னொருவர் பொறியாளர் பட்டன். நிலத்தைத் துளைக்கும் கருவிகள் இவர் பொறுப்பில் இருந்தது. பூமிதானமாகக் கிடைத்த மலையடிவார நிலங்களில் துளை போட்டுக் கொண்டிருந்தார். இவருடைய அப்பா களக்காட்டில் தங்க நகை தயாரிப்பவர். கூச்ச சுபாவம் உடைய பட்டன், உடன் பணியாற்றுபவருடனோ வெளியிலிருந்து வரும் நண்பர்களுடனோ அதிகம் பழக மாட்டார். விளையாட்டுத் திடலுக்கும் வர மாட்டார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால்... நான், அரசுப் பணியைத் துறந்து அமைதித் தீவுக்கு வந்து சேர்ந்தது, என் மனைவி சாவித்திரிக்கு அப்போது தெரியாது. வெளியூர் சென்று அவள், திரும்பிய பிறகுதான் இதைச் சொன்னேன். அப்போது, அவளிடம் லேசாகக் கலக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால், கொஞ்ச நாட்களிலேயே சரியாகி விட்டது.

உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நண்பர்களுடைய குடும்ப உறவுகளால் அவள் கொஞ்சம் திருப்தியடைந்தாலும்... ஒருநாள், 'நீங்கள் அரசு அதிகாரியாக இருந்ததால்தானே உங்களைக் கைப் பிடித்தேன். அரசுப் பணியில் சேருபவர்கள் மேலே மேலே போகிறார்கள். நீங்கள் ஏன் அரசுப் பணியைத் துறந்து கீழ் நோக்கிப் பயணிக்கிறீர்கள்..?’ என்று என்னிடம் கேட்டாள்.

'ஞானம் வந்தது விலகி வந்து விட்டேன்’ என்று நான் பதில் சொன்னேன். 'இந்த ஞானம் திருமணத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டும்’ என்றாள் அவள்.

இதிலும் நியாயம் இருக்கிறதுதானே?!

-இன்னும் பேசுவேன்...