Published:Updated:

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

Published:Updated:

மாத்தி யோசி

##~##

'மூர்த்தி சிறுசானலும், கீர்த்தி பெருசு’னு சொல்றது மண்புழுவுக்குத்தான் சரியா பொருந்தும். குரங்குதான், நம்மளோட, முப்பாட்டன்னு சொன்ன... சார்லஸ் டார்வின், 'எளிமையான அமைப்பைக் கொண்ட உயிரினங்களான மண்புழுக்கள் ஆற்றியது போன்றதொரு முக்கியப் பங்கினை, உலக வரலாற்றில் பிற உயிரினங்கள் ஆற்றினவா என்பது சந்தேகத்திற்குரியதே...'னு 1881-ம் வருஷம் மண்புழுவை மகிமைப்படுத்திஇருக்காரு. ஆனா, நாம அந்த மகத்தான உயிரினத்தை, ரசாயன உரத்தைக் கொட்டி வாட்டி, வதைச்சி எடுக்கிறோம். உழவு ஓட்டும்போது, மூணு அடி, ஆழத்துக்கு மேலே ஓட்டுனா, நிலத்துல இருக்கிற மொத்த மண்புழுவும், மடிஞ்சுடும். அதனால, மூணு அடிக்குக் கீழ, மண்ணைக் கிளறாதீங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோட்டத்துல மா, பலா, வாழைனு பல பழ மரங்கள் நிறைய இருந்தாலும்... குருவி, கிளி, அணில் மாதிரியான உயிரினங்கள் சாப்பிடணும்கிறதுக்காகவே... ஒரு மரத்தை நட்டு வெச்சாங்க முன்னோருங்க. இதன் மூலமா சின்னச் சின்ன உயிரினங்களுக்கும்... உணவு கொடுக்கற வழக்கத்தை அந்தக் காலத்துல ஏற்படுத்தினாங்க. அது என்ன மரம்னு கேக்கறீங்களா... அதுதாங்க கொய்யா மரம். அந்தப் பழத்த நாம பறிச்சு சாப்பிடக் கூடாதுனுதான் 'கொய்யா’னு (பறிக்கக் கூடாத) அதுக்கு பேரு வெச்சாதாகூட சொல்றாங்க. 'வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்...'னு சொன்ன வள்ளலார் வாழ்ந்த பூமி இது. அதனால... ஒவ்வொரு தோட்டத்துலயும், கொய்யாம இருக்கறதுக்காகவே ஒரு கொய்யா மரத்தை இனி வளருங்க. நமக்கு பல வழிகள்லயும் உதவற பிற உயிரினங்களுக்கு நாம செய்யுற மரியாதை இது!

வளைஞ்சி, நெளிஞ்சி... வளர்ந்த மரத்தைக் கண்டா... 'இது மரச்சாமான் செய்றதுக்கு உதவாது’னு வீணா வெட்டித் தள்ளுவோம்... இல்லனா விறகுக்குத் தள்ளி விட்டுடுவோம். வெளிநாடுகள்ல... இப்படி வளைஞ்சி, நெளிஞ்சி இருக்கிற மரங்களையும்கூட மரச்சாமான்கள் செய்றதுக்குப் பயன்படுத்தறாங்க. அதோட வடிவத்தை மாத்தாம... அப்படி அப்படியே மேசை, நாற்காலினு அழகழகா செய்றாங்க. சதுரம், செவ்வகம்னு அளவெடுத்து தயாரிக்கப்படுற மரச்சாமான்களைவிட, இப்படி வளைவு, நெளிவா இருக்கற மரச்சாமான்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகுதுங்கிறதுதான் விசேஷமான சேதியே!

மண்புழு மன்னாரு!

ராஜாவோட அரண்மனையா இருந்தாலும்.... குடிசை வீடா இருந்தாலும்... சமையல் செய்றதுக்கு மண்பானை, கல் பாத்திரம் இதையெல்லாம்தான் அந்தக் காலத்துல பயன்படுத்தினாங்க. ஆயிரம்தான் வசதி இருந்தாலும்... தங்கம், வெள்ளினு பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைக்க மாட்டாங்க. ஏன்னா.. மண்பானையில சமைக்கற சாப்பாட்டுக்கும்... குழம்புக்கும் தனி ருசி உண்டு. குழிப் பணியாரத்தை கல்சட்டியில செஞ்சி சாப்பிட்டா, மதுரமா இருக்கும். இப்படி சமையல் செய்து சாப்பிடறதுதான் உடம்புக்கும் நல்லதுனு வெளிநாட்டுக்காரங்களே இப்போ சொல்லிட்டு இருக்காங்க. அதனாலதான் நம்ம ஊருல பெரிய பெரிய ஓட்டலுங்கள்ல... 'மண்பானை சமையல்'னு பதுவுசா போர்டு மாட்டி கல்லா கட்டற கலாசாரம் இப்ப பெருகிக்கிட்டிருக்கு. இந்த நான்- ஸ்டிக் சமாச்சாரத்தையெல்லாம் ஓரம் கட்டிப்புட்டு, ஒரு சில விஷயங்களுக்காவது இந்த பழைய விஷயங்கள பயன்படுத்தறதுதான்... நம்ம உடம்புக்கும் பணத்துக்கும் பாதுகாப்பு!

'கணக்கதிகாரம்’ங்கறது சங்க கால நூல். அதுல என்ன பிரமாதம்னு கேட்கிறீங்களா? பலா பழத்தை வெட்டிப் பார்க்காமலே... அதுல எத்தனை சுளை இருக்குனு கண்டுப்புடிக்கற சூத்திரத்தை அதுல சொல்லி வெச்சுருக்காங்க.

'பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.'

மண்புழு மன்னாரு!

இதோட விளக்கம்... பலா பழத்தோட காம்பைச் சுத்தி முதல் வரிசையில இருக்கற சிறுசிறு முள்ளுங்களை எண்ணி, ஆறால பெருக்கி, அஞ்சால வகுத்தா... பழத்துல உள்ள சுளையோட எண்ணிக்கையைத் தெரிஞ்சுக்கலாம்ங்கிறதுதான் (உதாரணமாக 60 சிறுமுள்கள் என்றால், 60ஙீ6=360. 360/5=72 சுளைகள்). பழத்தைப் பார்க்கறப்ப குண்டு, குண்டா இருக்கும். ஆசையா வாங்கிப் பார்த்தா, சுளைகள் ரொம்ப கம்மியா இருக்கும். சமயத்துல சுளைகளே இல்லாமலும், இருக்கும். இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி சுளை நிறையா, இருக்கிற பழத்தை சுலபமா கண்டுபிடிக்கலாம்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism