Published:Updated:

திருப்பணிகள் தொடரும் !

திருப்பணிகள் தொடரும் !

திருப்பணிகள் தொடரும் !

திருப்பணிகள் தொடரும் !

Published:Updated:

அனைவருக்கும் வணக்கம்!

##~##

உங்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் துணையோடு... ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 'பசுமை விகடன்'. இந்த ஏழாண்டு காலத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காக பசுமை விகடன் ஆற்றியிருக்கும் பணிகள், செறிவு மிக்கவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை விவசாயத்தை ஒடுக்க வந்த 'வேளாண் மன்றச் சட்டம்' தடுக்கப்பட்டது; பி.டி. எனப்படும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு, தமிழ்நாட்டில் தடை விதிக்க வைத்தது; இயற்கை விவசாயத்தின் மீது அரசாங்கத்தின் கவனத்தை முழுமையாகத் திருப்பியது; உர மானியம், விவசாயிகளின் கையிலேயே நேரடியாகக் கிடைக்கவிருப்பது... என உங்களின் ஒத்துழைப்போடு நடந்திருக்கும் அந்தத் திருப்பணிகளின் பட்டியல் நீளும்!

விவசாயத்தை விட்டு பலரும் விலகிக் கொண்டிருக்கும் சூழலில்... ஆசிரியர், பேராசிரியர், போலீஸ், வழக்கறிஞர், எம்.எல்.ஏ... என்று பலரையும் நம்பிக்கையோடு விவசாயத்தில் ஆழமாக கால் பதிக்க வைத்திருப்பதிலும்... பசுமை விகடனின் பணி மகத்தானது. குறிப்பாக, மென்பொருள் துறை இளைஞர்கள் பசுமை விகடனின் தீவிர வாசகர்களாக உள்ளனர். தங்கள் இல்ல விழாக்களின் போது 'பசுமை விகடன்’ இதழை பரிசாக கொடுத்து, பசுமைக்கு வலு சேர்க்கிறார்கள். மேலும், கரூர், பள்ளிக்கூடமொன்றில் பாடப் புத்தகமாகவே, 'பசுமை விகடன்' இடம் பிடித்திருப்பதிலிருந்தே... இதை நன்கு உணரமுடிகிறது!

திருப்பணிகள் தொடரும் !

அதேசமயம்... பயணிக்க வேண்டிய தூரமும், சாதிக்க வேண்டிய விஷயங்களும் இன்னும்... இன்னும்... இருக்கின்றன என்பதும் உண்மை. இன்றுபோல் என்றென்றும் உங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருக்கும்போது... இந்தப் பயணம் மிக எளிமையாகவே இருக்கும் என்பதும் உண்மையே!

மறந்துவிடாமல், இதழ் பற்றிய விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதி அனுப்புங்கள்.

நேசத்துடன்,
ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism