Published:Updated:

விளைச்சல் என் கையில்... விற்பனை என் பையில்...

இயற்கைப் பாடம் சொல்லும் முன்னாள் தலைமையாசிரியர்..! த. ஜெயகுமார், படங்கள்: எஸ். நாகராஜ்

விளைச்சல் என் கையில்... விற்பனை என் பையில்...

இயற்கைப் பாடம் சொல்லும் முன்னாள் தலைமையாசிரியர்..! த. ஜெயகுமார், படங்கள்: எஸ். நாகராஜ்

Published:Updated:

ஆர்வம்

##~##

'விவசாயம் செய்ய ஆர்வமும், உழைப்பும் மட்டுமிருந்தால் போதும்... வயதும், தூரமும் தடையில்லை’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், சுப்பையா. இயற்கை முறையில் விளைவிப்பதோடு, இயற்கைப் பொருட்கள் விற்பனை அங்காடியையும் நடத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார், இந்த சுப்பையா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் பதிமூன்றாவது கிலோ மீட்டரில் உள்ள புதூர் அருகில் இருக்கிறது, சுப்பையாவின் நிலம். நெல், வேர்க்கடலை, கொள்ளு, எள், காராமணி, உளுந்து, சாமை... என கலந்து கட்டி விளைந்து கிடந்த நிலத்தில் சுப்பையாவைச் சந்தித்தோம்.

'விவசாயத்து மேல எனக்கு ஆர்வம் அதிகம். நிலம் வாங்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுக்கப்பறம், ரெண்டு வருஷத்துக்கு முன்னதான் இந்த 10 ஏக்கர் செம்மண் பூமியை வாங்கினேன். இந்தப் பகுதியில தண்ணிக்கு பஞ்சமே கிடையாது. போர்வெல் போட்டுத்தான் பாசனம் பண்றேன். ரெண்டு பேரை வேலைக்கு வெச்சுருக்கேன்.

விளைச்சல் என் கையில்... விற்பனை என் பையில்...

முதல் தடவை வேர்க்கடலை, காராமணி, உளுந்து, காய்கறிகளை சாகுபடி செஞ்சேன். சுமாரான விளைச்சல்தான் கிடைச்சுது. காய்கறிகளை தினமும் மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப் போறதுலயும் சிரமம் இருந்துச்சு. அதனால, காய்கறிகளை விட்டுட்டேன். இப்போ, 3 ஏக்கர்ல நெல், 3 ஏக்கர்ல வேர்க்கடலை, 1 ஏக்கர்ல கொள்ளு, 1 ஏக்கர்ல எள், அரை ஏக்கர்ல காராமணி, அரை ஏக்கர்ல உளுந்து, கால் ஏக்கர்ல சாமை, 3/4 ஏக்கர்ல பாசிப்பயறுனு சாகுபடி செஞ்சுருக்கேன். நெல் மட்டும் அறுவடை ஆயிடுச்சு. மத்ததெல்லாம் நல்லா விளைஞ்சு நிக்குது.

இந்த ஏரியாவுல எரு கம்மியான விலைக்குக் கிடைக்கறதால, அதிகளவுல அதை நிலத்துல கொட்டியிருக்கேன். மூலிகைப் பூச்சிவிரட்டியை நானே தயார் செஞ்சுக்குறேன். டிராக்டர் மூலமா இயங்குற 'டிரம் சீடர்’ல வேர்க்கடலையை விதைக்கறதால செலவு குறைஞ்சுடுது. இந்தக் கருவியைப் பத்தி 'பசுமை விகடன்’லதான் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்ற சுப்பையா நிறைவாக,

'இயற்கை அங்காடியையும் சொந்தமாவே வெச்சுருக்கேன். பசுமை சந்தைப் பகுதியில இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்யணும்னு சொல்ற விவசாயிகள்கிட்ட உடனே போன் போட்டுடுவேன். அது எனக்கும் வியாபாரத்துக்கும் உதவியா இருக்கு. மொத்தத்துல என்னோட ஓய்வு காலத்தைப் பயனுள்ளதா மாத்தினது, 'பசுமை விகடன்’தான். அதுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல'' என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, சுப்பையா, செல்போன்: 94453-72276 .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism