Published:Updated:

சந்தைக்குப் போகலாம் வாங்க !

உங்கள் பையை பலமாக்கும் தொடர்...த. ஜெயகுமார் படங்கள்: வீ. நாகமணி, ஜெ. வேங்கடராஜ், எஸ். நாகராஜ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஆசியாவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்று, சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை. பிராட்வே அருகில் உள்ள கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த இந்தச் சந்தை... சுகாதாரம், இடநெருக்கடி, போக்குவரத்து... உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 1996-ம் ஆண்டு கோயம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, பிரமாண்டமான கட்டடத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தச் சந்தையில் காய்கறிகள், மலர்கள் மற்றும் பழங்கள் என்று அனைத்துக்குமாக சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 194 கடைகள் உள்ளன. இந்தச் சந்தைக்கு தினமும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.

சந்தை பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் மற்றும் கோயம்பேடு மொத்த உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க செயலாளர் வி.ஆர். சவுந்தரராஜனிடம் பேசியபோது... 'இங்கு, விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய முடியாது. இங்குள்ள வியாபாரிகளிடம்தான் தங்களுடைய பொருட்களை விற்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 28 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் அளவு வரை காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வந்து சேர்கின்றன. இங்கிருந்து வில்லிவாக்கம், தாம்பரம், பெரம்பூர், தி.நகர், திருவான்மியூர்... என சென்னை முழுவதும் உள்ள 92 துணைச் சந்தைகளுக்கும்... சிறுகடைகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. அதன் மூலம் 30 லட்சம் குடும்பங்கள், ஹோட்டல்கள் மற்றும் விழாக்கள் என அனைத்துக்கும் காய்கறிகள் போய்ச் சேர்கின்றன. கோயம்பேடு சந்தையைச் சார்ந்து மட்டுமே சுமார் 3 ஆயிரம் வியாபாரிகளும், சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்'' என்று சொன்னார்.

சந்தைக்குப் போகலாம் வாங்க !
சந்தைக்குப் போகலாம் வாங்க !

கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்கச் செயலாளர் மூக்கையா பேசும்போது, ''வரத்து மற்றும் தேவையைப் பொருத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. சீசனில்லாத நேரத்தில் வரும் பூவுக்கு நல்ல கிராக்கி இருக்கும். இங்கிருக்கும் அனைத்துக் கடைகளிலும் 10 சதவிகித கமிஷன் அடிப்படையில் விற்றுக் கொடுக்கிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு 50 டன் பூக்கள் வருகின்றன. தற்போது சாமந்திப் பூ அதிகமாக வருகிறது. என்னைத் தொடர்பு கொண்டால், பூவின் விலை, எந்தக் கடையில் வாங்குவார்கள்? என்பது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்'' என்று சொன்னவர், தன்னுடைய அலைபேசி எண்ணையும் தந்தார்.

சந்தைக்குப் போகலாம் வாங்க !
சந்தைக்குப் போகலாம் வாங்க !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு