Published:Updated:

''கால்நடை வளர்ப்புக்கு கைகொடுங்கள்''

த. ஜெயகுமார்

பிரீமியம் ஸ்டோரி

திட்டம்

##~##

மாநில அளவில் விவசாயத்துக்கு கடன் வழங்கும் திட்டம் பற்றிய கருத்தரங்கு, பிப்ரவரி 6-ம் தேதி, நபார்டு வங்கியின் சார்பில், சென்னையில் நடைபெற்றது. தமிழக நிதித்துறை செயலர் கே. சண்முகம், நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் லலிதா வெங்கடேசன், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ். விஸ்வநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.கே. பன்சால், பாரத வங்கியின் பொது மேலாளர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

நிதித்துறை செயலர் சண்முகம் தன் பேச்சில், ''மாநில தொலைநோக்கு ஆவணம்-2023 என்கிற திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை குறைந்து வருவதால், பணப் பயிர்களுக்கும், தோட்டக்கலைப் பயிர்களுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்தைக் கொடுக்கும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பால் பண்ணை போன்றவற்றுக்கு தடங்கல் இல்லாமல் வங்கிகள் கைகொடுக்க முன்வர வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.

நபார்டு வங்கி தலைமைப் பொதுமேலாளர் லலிதா வெங்கடேசன், ''அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் அடிப்படை வளர்ச்சி கட்டமைப்பு தேவை என்பதால்... உற்பத்தி, விவசாயம் மற்றும் கிராம மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது.

''கால்நடை வளர்ப்புக்கு கைகொடுங்கள்''

தமிழ்நாடு வேகமாக நகரமயமாகிக் கொண்டிருக்கிறது. என்றாலும், 40% பேர் இன்னமும் விவசாயத்தை நம்பித்தான் உள்ளனர். ஆள் பற்றாக்குறை, விளைநிலங்கள் குறைந்து வருதல் போன்ற சவால்களுக்கு இடையிலும் 108 லட்சம் டன் அளவுக்கு காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிதியாண்டில் (2013-14) 1 லட்சத்து 6 ஆயிரத்து 409 கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்க வாய்ப்புள்ளது. இது கடந்த நிதியாண்டில் (2012-13) ஒதுக்கிய தொகையைவிட 37% அதிகம். இக்கடன்கள், அங்கீகரிக்கப்பட்ட மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்'' என்று சொன்னார் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு