பிரீமியம் ஸ்டோரி

இலவசப் பயிற்சிகள்

கலப்பின கோழி !

நாமக்கல்,  வேளாண் அறிவியல் நிலையத்தில், பிப்ரவரி 26-ம் தேதி கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு; 28-ம் தேதி ஜப்பானிய காடை வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தண்டோரா

தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002.

தொலைபேசி: 04286-266345.

வான்கோழி !

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 26ம் தேதி வான்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தண்டோரா

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.

தொலைபேசி: 0451-2460141.

சூரியசக்தி !

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் மார்ச் 8ம் தேதி சூரியசக்தி உபகரண பயன்பாடு பயிற்சி நடைபெற உள்ளது. மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: முனைவர். சி. காண்டீபன்,

செல்போன்: 91501-60955.

கோட்டை கட்டும் முறை புதுச்சேரியை அடுத்த பாகூர், இருளன்சந்தை கிராமத்தில், மார்ச் 1 -ம் தேதி நெல் சேமிப்புக்கு உதவும், 'கோட்டை கட்டும் நுட்பம்’ கற்றுத்தரப்படும். பாரம்பரிய நெல் விதைகளின் பயன்பாடு, அதிக விளைச்சல் எடுக்கும் நுட்பங்கள் பற்றி அனுபவ விவசாயிகள் செயல் விளக்கம் அளிக்க உள்ளார்கள். பயிற்சி முகாமை, 'கிரியேட்' ஜெயராமன் வழிநடத்துகிறார். முன்பதிவு முக்கியம்.

ஏற்பாடு: ஈகோவென்சர் தொண்டு நிறுவனம் மற்றும் புதுச்சேரி இயற்கை விவசாயிகள் சங்கம்

தொடர்புக்கு, செல்போன்: 80987-14580/ 99432-49900

கால்நடைகளுக்கு மூலிகை!

மார்ச் 14-ம் தேதி, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவக் கருத்தரங்கு நடைபெறும். இடம்: சாது சாமிகள் திருமடம், பழனி, திண்டுக்கல் மாவட்டம். சித்த மருத்துவர்கள், பாரம்பரிய கால்நடை மருத்துவர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98435-92039.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு