Published:Updated:

எரிவாயுக் குழாய் விவகாரம்...

குளிர்வித்த அதிகாரிகள்... கொந்தளித்த விவசாயிகள்! த.ஜெயக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

##~##

கேரளாவின் கொச்சியில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருவுக்கு எரிவாயுவைக் குழாய் மூலமாக கொண்டு செல்கிறது மத்திய அரசு நிறுவனமான 'கெயில்'. இதற்காக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி.... உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் விளைநிலங்களை வளைக்கிறது அந்த நிறுவனம். விவசாயிகளின் ஒப்புதலையோ... அனுமதியையோ துளியும் கேட்காமல்... எதேச்சதிகாரமாக விளைநிலங்கள் வளைக்கப்படவே... பிரச்னை பெரிதாக வெடித்துள்ளது. இதைப்பற்றி கடந்த இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மார்ச் 6, 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில், விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளில் விவசாயிகளை அழைத்து வந்திருந்தனர் அதிகாரிகள். கூட்ட அரங்கமும்கூட குளிர்சாதன வசதி கொண்டதுதான்! ஆனால், விவசாயிகளின் ஆவேசம்... அந்தச் சூழலை மொத்தமாக மாற்றி, கடும்சூட்டைக் கிளப்பிவிட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை!

இதைப் பற்றி நம்மிடம் பேசிய பல்லடம் பகுதி விவசாயி கோவிந்தராஜன், ''இக்கூட்டத்தை விவசாயிகள் இருக்கும் பகுதிகளிலேயே நடத்தினால், எங்களின் குரல் ஓங்கி ஓலிக்கும் என்று பயந்து, சென்னைக்கு வரவழைத்தனர். ஆனால், எங்களின் போர்க்குரல், துளிகூட மாறாமல்தான் இங்கேயும் ஒலித்திருக்கிறது!

எரிவாயுக் குழாய் விவகாரம்...

'விவசாயிகளைத் தூண்டிவிடுவதே விவசாய சங்கத் தலைவர்கள்தான். அவர்களையெல்லாம் உள்ளே அனுமதித்தால், சட்டம், நீதி, தர்மம் எல்லாம் பேசி, பிரச்னையைக் கிளப்புவார்கள்' என்று கணக்குப் போட்டு, பாதிக்கப்படும் விவசாயிகளை மட்டுமே உள்ளே அனுமதித்தார்கள். ஆனால், நேரடியாக பாதிக்கப்படும் எங்களின் ஆவேசம்.... சங்க பிரதிநிதிகளைக் காட்டிலும் அதிகம் என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொண்டுவிட்டனர்'' என்று தெம்பாகச் சொன்ன கோவிந்தராஜன்,

''நாங்கள் இப்படியரு திட்டமே கூடாது என்று சொல்லவில்லை. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவது போலவே இங்கேயும் செயல்படுத்துங்கள் என்றுதான் கேட்கிறோம். அங்கெல்லாம் 10 சதவிகித அளவே விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மீதியெல்லாமே தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என்று பொதுவான இடங்களில்தான் குழாய்களை பதித்துள்ளனர். அப்படியிருக்க, இங்கே மட்டும் எதற்காக விவசாய நிலங்களை வளைக்க வேண்டும். தமிழ்நாட்டு விவசாயிகள் என்றால் இளக்காரமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். முதல்வருடன் பேசி முடிவு சொல்வதாக கூறியிருக்கிறார்கள்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு