Published:Updated:

முத்துமல்லா...

இயற்கையுடன் ஐக்கியமான 'பச்ச மனுஷன்'! காசி. வேம்பையன்

பிரீமியம் ஸ்டோரி

அஞ்சலி

##~##

தமிழக விவசாயிகளில் பெரும்பாலானவர்களும் அறிந்திருக்கக் கூடிய விவசாயப் போராளி... முத்துமல்லா ரெட்டியார்!

'வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலாரின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்த அவர், தன்னுடைய 103 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தை மார்ச் 3-ம் தேதியோடு முடித்துக் கொண்டு, இயற்கையோடு ஐக்கியமாகிவிட்டார்!

முத்துமல்லா...

காஞ்சிபுரம் மாவட்டம், பொலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இவர், வானம் பார்த்த பூமியை வளம் கொழிக்கும் பசுஞ்சோலையாக்கி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி! 'இந்தியாவின் குட்டி இஸ்ரேல்’ என்று 'கிஸான் வேர்ல்ட்’ பத்திரிகை அதைப் பாராட்டியிருக்கிறது.

'பாலையில் ஒரு பசுஞ்சோலை’ என ஐ.நா சபையின் 'உலக தொழிலாளர் நிறுவனம்' புகழாரம் சூட்டியிருக்கிறது. அத்தகைய 'பச்ச மனுஷன்' பற்றி, 77-ம் ஆண்டிலிருந்து 88-ம் ஆண்டு வரை தமிழக அரசின் வேளாண் உயர்மட்டக் குழுவில் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கும் 'தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்க' தலைவர், வையாபுரி, சில நினைவுகளை இங்கே பதிவு செய்கிறார்!

''விவசாய சங்கங்கள் மேலோங்க ஆரம்பித்த 70-ம் ஆண்டு வாக்கில் அவருடன் சேர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவர் ஒரு ஜமீன்தாராக இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் எல்லோருடனும் சமமாகப் பழகுவார். மனிதர்களை நேசித்ததைப் போலவே, மண்ணையும் நேசித்து, இயற்கை விவசாயத்தையும் பல்லுயிர் பெருக்கத்தையும் நிலைநிறுத்தினார்.

'இதில் கள்ளி கூட முளைக்காது' என்று பலராலும் வெறுப்போடு பார்க்கப்பட்ட நிலத்தில்தான் பலவிதமான மரங்கள், மலர்கள், அரியவகைச் செடிகள் என பசுஞ்சோலையை உருவாக்கினார் அந்த பசுமை வித்தைக்காரர்.

முத்துமல்லா...

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, தீர்க்கதரிசியாக தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் மரங்களுக்கு பானைகளை வைத்து, எளிமையான சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தி, தண்ணீரின் தேவையைப் புரிய வைத்தவர்.

இவரின் சாதனைகளுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 'வேளாண்மைச் செம்மல்’ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது'' என்ற வையாபுரி,

''முத்துமல்லா, சிறந்த விவசாயிகளை உருவாக்குவதற்காக தன் பெயரில் அறக்கட்டளையை நிறுவி, ஆண்டுக்கு ஒரு முறை கருத்தரங்கம் நடத்தி, விருது கொடுத்து கௌரவித்து வந்தார். இத்தகைய பசுமைத் தொண்டுகளும், அவரின் புகழும் எந்தக் காலத்திலும் மறையாது!'' என்றார் நிறைவாக!

நிஜம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு