Published:Updated:

நீங்கள் கேட்டவை

படங்கள்: ப்ரீத்தி கார்த்தி, வீ. சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

புறா பாண்டி

##~##

''மருதாணிச் செடியை உயிர்வேலியாக வளர்க்க விரும்புகிறேன். அதற்கென்று தனி மருதாணி ரகம் உண்டா? இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்தால் லாபம் கிடைக்குமா?''

சி. ரெங்கராஜன், பெரகம்பி.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியில் மருதாணி சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜகோபால் பதில் சொல்கிறார்.

''மருதாணி அனைத்து வகை நிலங்களிலும் நன்றாக வளரும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு ஏற்றப் பயிர். விதை மற்றும் குச்சி (போத்து) மூலமாக நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். நன்கு வளர்ந்த மருதாணிச் செடியில் பென்சில் அளவு உள்ள  குச்சிகளை 9 அங்குல நீளத்துக்கு வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

தொழுவுரம், மண் ஆகியவற்றை நாற்று தயாரிக்கும் பாலிதீன் பைகளில் நிரப்பி... அதில் மருதாணிக் குச்சிகளை நட்டு, நிழலில் வைத்து தண்ணீர் ஊற்றி வர வேண்டும். மூன்று மாதங்கள் வளர்ந்த பிறகு, வயலில் நடவு செய்யலாம். மருதாணியில் முள்ரகம், முள்ளில்லா ரகம் என இரு ரகங்கள் உண்டு.

நீங்கள் கேட்டவை

முள் ரகம் உயிர்வேலிக்கு ஏற்றது. தனிப்பயிர் சாகுபடிக்கு முள்ளில்லா ரகம் ஏற்றது. நடவு செய்த 6-ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என... இருபது

நீங்கள் கேட்டவை

வருடங்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஓர் அறுவடைக்கு ஒரு டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். செலவுகள் போக, ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 80 ஆயிரம் ரூபாய் லாபம் வரை கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

அழகு சாதனப்பொருட்கள், இயற்கைச் சாயம், மருந்துப் பொருட்கள்... எனப் பலவற்றுக்கும் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுகிறது. அதனால், விற்பனைக்கு பிரச்னை இல்லை. இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மருதாணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. புதிய ரகங்களும் அங்கு கிடைக்கின்றன.''

தொடர்புக்கு,  செல்போன்: 98421-75940

''தென்னந்தோப்பில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டால், விளைச்சல் பாதிக்குமா?''

கே. முகமது அலி ஜின்னா, தட்டான்குளம்.

திருச்சியில், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தியாகராஜன் பதில் சொல்கிறார்.

''ஆடு வளர்ப்புக்கு, தென்னந்தோப்பு தாராளமாக ஏற்றது. இதனால் விளைச்சல் துளிகூட பாதிக்காது. ஆடுகளின் சிறுநீரும், புழுக்கையும் மிகச்சிறந்த உரங்கள். என்னுடைய தென்னந்தோப்பில் ஆடுகளை பட்டி அடைத்து வளர்க்க ஆரம்பித்த பிறகு, நிலத்தின் மண் வளம் கூடியதோடு, தேங்காய்களின் தரமும் நன்றாக இருந்தது.

நீங்கள் கேட்டவை

தென்னை மரங்களில் நோய்கள்கூட தாக்கவில்லை. தென்னந்தோப்பில் ஆடுகளை வளர்க்க நினைத்தால்... ஆடுகளுக்கு எப்போதும் பசுந்தீவனங்கள் அங்கே இருக்கும்படி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். நிழலில் வளரும் தன்மை கொண்ட பசுந்தீவனங்களையும், ஆடுகள் கடித்தாலும், மீண்டும் வளரக்கூடிய தன்மை கொண்ட தீவனங்களையும் வளர்ப்பது நல்லது.

முயல் மசால், வேலி மசால்... போன்றவை இந்த இரண்டு குணங்களையும் கொண்டுள்ளன. ஆடுகள் தோப்பில் மேய்ச்சலில் இருக்கும்போது... தென்னை மட்டைகள், ஆடுகளின் மீது விழுந்தால், உயிர்ச் சேதம் ஏற்படும். அதனால், காய்ந்த மட்டைகள், பாலைகளை அவ்வப்போது கவனித்து அகற்றி வர வேண்டும்.'

தொடர்புக்கு, செல்போன்: 94432-10795.

 ''திண்டுக்கல் பகுதியில் மோர் மிளகாய் தயாரிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை எப்படி தயாரிப்பது?''

உ. காஜாமைதீன், எட்டையபுரம்.

திண்டுக்கல் மாவடம், போளியமனூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேலன் பதில் சொல்கிறார்.

''சுமார் 30 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் வரை மோர் மிளகாய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

சுவையான, மருத்துவகுணம் கொண்ட மோர் மிளகாய் தயாரிக்க... திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திராவில் இருந்தும் பச்சை மிளகாய் வாங்குகிறோம். 80 கிலோ மிளகாயை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மிளகாயிலும் கோணி ஊசியால் குத்தி ஒரு துளையிட வேண்டும். இதன் வழியாகத்தான் மோரானது மிளகாய்க்குள் இறங்கும்.

நீங்கள் கேட்டவை

துளையிட்ட பிறகு, மொத்த மிளகாய்களையும் ஒரு தொட்டியில் கொட்டி...

நீங்கள் கேட்டவை

12 லிட்டர் தயிர், 5 கிலோ உப்பு, 50 லிட்டர் சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை ஊற்றிக் கலக்கி, 24 மணி நேரம் ஊறவிட வேண்டும்.

பிறகு, மிளகாயை அள்ளி காலை 7 முதல் மாலை 4 மணி வரை என... மூன்று நாட்களுக்கு வெயிலில் உலர்த்த வேண்டும். பிறகு, காய்ந்த வற்றலை மூட்டை கட்டி விற்பனை செய்யலாம்.

இது சாதாரணமாக மூன்று மாதங்கள் வரை கெடாது. குளிர்பதனக் கிடங்கில் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.

நாங்கள் தயாரிக்கும் மோர் மிளகாய், இந்தியாவில் பல நகரங்களுக்கு அனுப்பப்படுவதோடு, சிங்கப்பூர், மலேசியா.... போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 94875-33991.

 ''பட்டுப்புழு வளர்க்க விரும்புகிறேன். மானியம் பெற யாரைத் தொடர்பு கொள்வது?''

டி. மனோகரன், வேலூர்.

''தமிழ்நாடு அரசின் ஊரகத் தொழில்துறையின் கீழ், பட்டு வளர்ச்சித்துறை செயல்பட்டுவருகிறது. சேலம் நகரில் இந்தத் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. மானியம் மற்றும் பட்டு வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப விவரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2296831, 2296832.

நீங்கள் கேட்டவை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு