பிரீமியம் ஸ்டோரி

பசுமைக் குழு

இலவசப் பயிற்சிகள்

முயல் வளர்ப்பு!

##~##
நாமக்கல்,
  வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 14-ம் தேதி சிக்லிட் அலங்கரா மீன் வளர்ப்பு; 19-ம் தேதி  மண்புழு உரம் உற்பத்தி; 21-ம் தேதி மரவள்ளியில் நவீன சாகுபடி நுட்பங்கள்; 26-ம் தேதி முயல் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345.

வான்கோழி!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 19\ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தண்டோரா

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.

தொலைபேசி: 0451-2460141.

 கால்நடைகளுக்கு மூலிகை!

மார்ச் 14-ம் தேதி, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவக் கருத்தரங்கு நடைபெறும். இடம்: சாது சாமிகள் திருமடம், பழனி, திண்டுக்கல் மாவட்டம். சித்த மருத்துவர்கள், பாரம்பரிய கால்நடை மருத்துவர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98435-92039.

தீவன நுட்பம்!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 20-ம் தேதி கறவை மாடு வளர்ப்பில், தீவனச் செலவைக் குறைக்கும் வழிமுறைகள் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636001.  தொலைபேசி: 0427-2410408.

விற்பனை வாய்ப்பு!

மார்ச் 16-ம் தேதி  ஈரோடு பழையப் பாளையம், ரோட்டரி சி.டி. ஹாலில் வேளாண் விளைப்பொருட்களின் விற்பனைக்கான மாற்று வழிமுறைகள் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.  நிகழ்ச்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். துறை சார்ந்த வல்லுநர்களும் கருத்துரை வழங்கவுள்ளனர்.

ஏற்பாடு: சேம்பர் ஆப் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் கமிட்டி, ஈரோடு மற்றும் கிரியேட்.

தொடர்புக்கு, செல்போன்: 94434-31320, 94433-20954.

பதப்படுத்தலாம் வாங்க!

சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியின் போது, மதிய உணவு, தங்கும் வசதி வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27680214/8.

சிறுதானிய உனவு

மதுரை மனையியல் கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் 18-19 தேதிகளில் சிறுதானியங்களின் மூலம்  பிஸ்கட், ரொட்டி, முறுக்கு... போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மனையியல் விரிவாக்கத்துறை,

மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625104.

செல்போன்: 94422-19710, 97871-50703.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு