Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

மம்பட்டியான் காட்டில் மக்கள் பணி...!ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

மம்பட்டியான் காட்டில் மக்கள் பணி...!ஓவியம்: ஹரன்

Published:Updated:

நம்மாழ்வார்

##~##

1979-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி தருமபுரி மலைக்குப் புறப்பட்டோம். ஸ்டான்லி முக்கட், லேண்ட் ரோவர் வண்டியில் எங்களை அழைத்துச் சென்றார். என்னுடன் ஆஸ்வால்டு குவிண்டால், திம்மயன் மேலும் இருவர் பயணித்தனர். ஆஸ்வால்டு ஒரு பொறியாளர். அவருக்கு நெருக்கமானவர்கள், அவரை 'ஆஸி’ என்று சுருக்கமாக அழைப்பார்கள். 'ஆஸி’க்கும் எனக்கும் அன்று ஏற்பட்ட நட்பு இன்றும் தொடர்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திம்மயன், முறை சாரா கல்விப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எப்பொழுதும் சிரித்துக் கொண்டும் சிரிக்க வைத்துக் கொண்டும் இருப்பார். கொஞ்ச நாட்களில் அவர் எங்களை விட்டுப் பிரிந்து சென்றார்.

நாங்கள் சென்ற இடத்தைப் பற்றி, இப்போது கொஞ்சம் விவரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...

தமிழ்நாட்டுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் இடைப்பட்டப் பகுதியில் ஓசூருக்கு தெற்கே இருக்கிறது தேன்கனிக்கோட்டை. பேருந்து நடத்துனர் முதல் பொதுமக்கள் வரை 'டெங்கினி கோட்டை' என்றே அழைப்பது வழக்கம். டெங்கினி கோட்டையிலிருந்து மேலும் 23 கி.மீ. தெற்கே பயணித்தால் 'அஞ்சட்டி’. அங்கிருந்து மேற்கே 23 கி.மீ. காட்டுக்குள் நடந்தால் 'மோட்ராகி’ கிராமத்தை அடையலாம். அதிலிருந்து தெற்கு நோக்கி 25 கி.மீ நடந்தால் ஒகனேக்கல் அருவி.

கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் காவிரி பாயுமிடம் 'புலிக்குன்று’. இந்த இடத்தை 'பில்லிக்குண்டு’ என்று அழைக்கிறார்கள். இது, மோட்ராகி கிராமத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

'மோட்ராகி’ கிராமத்தில் பெய்கின்ற மழை, பில்லிக்குண்டுவில் காவிரியுடன் கலக்கிறது. கரிக்காக இந்த பகுதியில் இருந்த காடுகளை வெட்டி அழித்துக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்து பெய்த மழையால் மேல்மண் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு ஓடையில் கரைந்துவிடும். இருக்கும் எருவை நிலத்தில் சேர்த்து, ஆனி மாதத்தில் உழுது ஆரியத்தை (கேழ்வரகு) விதைப்பார்கள்.

ஒரு பாகம் இடைவெளியில் அவரை (மொச்சை) விதைப்பார்கள். வளமில்லாத நிலத்தில் சோளம், கொள்ளு, ஆமணக்கு போன்றவை பயிரிடுவதுண்டு. கொல்லையின் ஓரத்தில் கடுகு, ஆமணக்கு போன்றவற்றை விதைத்து வைப்பார்கள்.

ஆண்டு முழுவதும் இவர்களது முக்கிய உணவு ஆரியக்களியும் அவரைக் குழம்புமே. மழை பெய்தால் நிலத்தை நம்பி ஊரில் தங்குவார்கள். மழை பொய்த்தால் மூட்டை முடிச்சுக்களுடன் பெங்களூரு பக்கம் போய் கட்டட வேலைகள், சாலை போடும் வேலைகளில் காலம் கழிப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பத்து முதல் ஐம்பது வீடுகள் வரை இருந்தன. வெள்ளையர்கள் ஆண்டபோது உள்நாட்டுப் படைப் பிரிவு இங்கே இருந்தது. ஆதலால் இந்த வட்டாரத்துக்கு 'நாட்டார்பாளையம்' என்று பெயர் சூட்டப்பட்டது.

தற்போது உள்ளே இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் 'நாட்ராபாளையம்’ என்றே அழைக்கிறார்கள். 16 ஊர்கள் சேர்ந்து நாட்ராபாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 'தளி’யில் இருக்கிறது. இடைப்பட்ட தூரம் 65 கி.மீ. அனைவருக்கும் புரியக்கூடிய மொழியில் சொல்ல வேண்டுமானால்... மலையூர் மம்பட்டியான் காவல்துறைக்கு ஆட்டம் காட்டி தலைமறைவு வாழ்க்கை நடத்தியது இந்தக் காட்டில்தான். எந்த ஊருக்குப் போனாலும் 'மலையூர்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

மம்பட்டியான்' சாகசங்கள் குறித்து கதை சொல்வார்கள்.

நாட்ராபாளையத்தின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றியக் குறிப்பேடுகளிலேயே அடக்கமாகி இருந்தது. அதைத் தவிர, மோட்ராகி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் இயக்குநர் ஃபிரான்சிஸ், மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்.

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கம்பவுண்டரான அவர் (மக்களால் டாக்டர் என்றே அழைக்கப்பட்டார்), மருத்துவ சேவை செய்து கொண்டே, வறுமைப்பட்ட மக்களுக்கு வட்டிக்குக் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.

இவர் பக்கத்திலுள்ள சேசுராசபுரம் என்ற ஊரில் கொஞ்ச காலம் மதக் கடமைகளை நிறைவேற்றி வந்தார். பெரிய சாமியாரோடு சண்டை முற்றியபோது வெளியே வந்து மோட்ராகி கிராம முன்னேற்றத் திட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவர் நிதி வேண்டி அணுகியபோது, ஆக்ஸ்ஃபேம் (ளிஜ்யீணீனீ) நிறுவனமும் அதன் கள இயக்குநர் ஸ்டான்லி முக்கட்டும் யோசித்தனர்.

முடிவில், 'கொஞ்சம் நீரை சேமிக்கவும், கைத்தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் முடிந்தால், அது உண்மையான வளர்ச்சித் திட்டமாக அமையும்' என்று நம்பினார்கள். அதனால் என்னையும் பொறியாளர் 'ஆஸி’யையும் அழைத்து வந்து, பணி செய்யப் போகும் பகுதியை அறிமுகப்படுத்தினார்கள்.

இயக்குநர் ஃபிரான்சிஸ் உடன் சில ஊர்களுக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். இரண்டு ஊர்களுக்கிடையில் 5 கி.மீ தொலைவு இருக்கும். மேடும் பள்ளமுமாக சீரமைக்கப்படாத பாதை, நடந்து செல்லும் மக்களுக்கு, அலுப்பூட்டுவதாக இருந்தது.

அந்த நேரத்தில் நாடு முழுவதும் ஒரு வதந்தி பரவியிருந்தது. அமெரிக்கா, 'ஸ்கைலாப்’ என்ற செயற்கைக் கோளை வான்வெளியில் சுற்றவிட்டிருந்தது. 'அது நொறுங்கி விழப்போகிறது. பூமி அழியப் போகிறது' என்ற வதந்தி செய்தித்தாள்களை நிரப்பியிருந்தது.

'மோட்ராகி’யில் இருந்தவர்கள் பூமியில் வாழ்க்கை முடியப் போகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஒரு நாள் அந்தப் பகுதியை காரில் சுற்றி வந்தபோது, ஊருக்கு வெளியே ஒரு காட்சியைக் கண்டோம். நடுவில் இருந்த சாராயப் பானையை சுற்றி அமர்ந்தபடி ஆண்கள் போதையேற்றிக் கொண்டிருந்தார்கள்.

பத்து ரூபாய் நோட்டின் வெள்ளைப் பகுதியில் துளையிட்டு நூலைப் போட்டு இரு காதிலும் கட்டியிருந்தார்கள். பூமி அழிவதற்குள் குடித்துத் தீர்த்து விடுவது என்ற முடிவுடன் அவர்கள் இருந்தார்கள். எங்களைப் பார்த்து ஒரு குடிகாரர், 'டேய், உலகமே அழியப் போகுது. எதுக்காக காருல ஏறி சுத்துறீங்க. எங்களோட வந்து சேந்துக்குங்க’ என்றார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

மோட்ராகி மக்களுடைய கலாசாரத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. மற்றபடி அம்மக்களை அச்சுறுத்தும் பெரியசக்தி சுள்ளி பொறுக்கப் போகும் பெண்களின் கையிலுள்ள அரிவாளைப் பிடுங்கிக் கொள்ளும் வன அதிகாரிகள்தாம்.

மோட்ராகி மக்கள் 'லிங்காயத்’ பிரிவைச் சேர்ந்த கன்னட மொழி பேசுபவர்கள். பள்ளிக்கூட ஆசிரியர் மாதம் ஒரு நாள் வந்து எல்லாப் பிள்ளைகளுக்கும் வருகைக் குறியிட்டு, நகரத்துக்குத் திரும்பி தன் மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்வார்.

'ஐ.டி.வி.பி.' (மிஞிக்ஷிறிமிஸீtமீரீக்ஷீணீtமீபீ க்ஷிவீறீறீணீரீமீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt றிக்ஷீஷீழீமீநீt) எனும் இயக்கமே  ஐந்து ஊர்களில் மாலை நேரத்தில் மாட்டுத் தொழுவத்தில் 'அ’னா, 'ஆ’வனா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

இத்தகைய அடிப்படை ஆய்வை முடித்துக் கொண்டு புறப்படும்போது, 'இங்கு வந்து தங்கி வேலை செய்யத் தயாரா?’ என்ற கேள்வியை ஸ்டான்லி முக்கட் எழுப்பினார். 'சொந்த ஊர்ப் பகுதிகளில் போய் பணி செய்வதுதான் எனது திட்டம். தற்காலிகமாக வேண்டுமானால், இரண்டாண்டுகள் பணி செய்யத் தயார்’ என்று சொன்னேன். மற்ற இருவரும் தலையசைத்தார்கள்.

ஒரு வாரம் சென்ற பிறகு ஸ்டான்லி முக்கட் எங்களை கர்நாடகப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அருள்தந்தை ஓடைகளின்  குறுக்கே பெரிய பாறாங்கற்களைப் புரட்டிப் போட்டு தண்ணீர் தேங்கி தேங்கி செல்வதற்கு வழி செய்திருந்தார். அதனால் ஓடையின் இருபுறமும் நிலத்தடி நீர் உயர்ந்திருந்தது. கிணறுகள் தோண்டி ஏற்றம் இறைத்து உழவர்கள் பயிர் வைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களுடைய பணியும் கிட்டத்தட்ட இது போன்றுதான் இருக்கப் போகிறதென்று முடிவு செய்து மோட்ராகிக்கு திரும்பினோம்.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism