கருவிகள்

வெற்றிக்கு வழி சொல்லும் விவேக தொடர்..!

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், 'விவசாயம் ஒன்றே வாழ்க்கை' என்று உள்ளூரிலேயே தங்கி இருக்கும் உழவர்களுக்கு, உற்றத் தோழனாகக் கைகொடுப்பது... கருவிகள்தான்! அத்தகையக் கருவிகள், அவற்றின் பயன்பாடு, அரசாங்கத்தின் மானியம் என அனைத்துத் தகவல்களும் இப்பகுதியில் உங்களுக்குக் கிடைக்கும்!

விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை சரி செய்வதே பண்ணைக் கருவிகள்தான். ஆனால், அந்தக் கருவிகளை வேலை முடிந்ததும் ஓரமாக வைத்து விடுகிறோம். அடுத்த போகத்துக்கு தேவைப்படும்போதுதான் அதைப் பற்றி நினைக்கிறோம்.

'இப்படிப்பட்ட வழக்கம் தவறானது' என்று சொல்லும் 'மாக்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், பண்ணைக் கருவிகளைப் பராமரிக்கும் விதம் பற்றி இங்கு விளக்குகிறார்.

''எந்தக் கருவியையும் ரொம்ப நாளைக்கு சும்மா போட்டு வைக்கக் கூடாது. மாசத்துக்கு ஒரு தடவையாவது எடுத்து 'ஆன்’ பண்ணி அஞ்சு, பத்து நிமிஷம் ஓடவிட்டு 'ஆஃப்’ பண்ணி வைக்கணும். அப்படியே போட்டு வெச்சா... தூசு படிஞ்சு கார்ப்ரேட்டர் அடைச்சுக்கும். இன்ஜின் ரிப்பேர் ஆயிடும். அதனால, காட்டன் துணி, பாலிதீன் தார்பாய்கள் போட்டு மூடி வைக்கணும்.

பவர் வீடர், கல்ட்டிவேட்டர், ஃபிரஷ் கட்டர் மாதிரியான கருவிகளை... மழை பெய்ஞ்சதுக்கு பிறகோ அல்லது நிலத்துல ஈரப்பதம் இருக்கிறப்பவோ ஓட்டுனா... பிளேடு சீக்கிரம் தேயாம ரொம்ப நாளைக்கு உழைக்கும். ரெண்டு ஸ்ட்ரோக் இன்ஜின்கள்ல 1 லிட்டர் பெட்ரோல்... கூடவே 50 மில்லி ஆயிலைச் சேர்த்துப் போட்டுத்தான் இயக்கணும். நாலு ஸ்ட்ரோக் இன்ஜின்கள்ல ஆயில் சேர்க்கத் தேவையில்லை.

கருவிகளை வாங்குறப்பவே கம்பெனிக்காரங்களே இந்த விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து, இயக்கியும் காட்டுவாங்க. டூல்ஸ் கிட்டும் கொடுப்பாங்க.

அவங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரி பராமரிச்சாலே பெரும்பாலான பிரச்னைகளைத் தவிர்த்துடலாம்'' என்ற சுவாமிநாதன், ஒவ்வொரு கருவிகளுக்கும் உரிய பிரத்யேகமான முறைகளைச் சொன்னார். அவர் தந்த ஆலோசனைகள் இதோ...

தீவனப்புல் அறுக்கும் கருவி (பிரஷ் கட்டர்): இதில் 'ஏர் ஃபில்ட்டர்' இருக்கிறது. இதை வாரத்துக்கு ஒரு முறையும், 'ஸ்பார்க் பிளக்’கை மாதத்துக்கு ஒரு முறையும் துடைத்து, சுத்தப்படுத்தி, வைக்க வேண்டும்.

கியர் பாக்ஸுக்கு கிரீஸ் விட்டு, வாரம் ஒரு முறை உராய்வுத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 45 நிமிடங்கள் வேலை கொடுத்தால்... 15 நிமிடங்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

மரம் அறுக்கும் கருவி (செயின் சாவ்): வாரம் ஒரு முறை ஆயில் விட்டு, சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால், செயின் அறுந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். 'ஸ்டார்ட்’ செய்த பிறகுதான், மரங்களின் மீது வைத்து அறுக்க ஆரம்பிக்க வேண்டும்.

தெளிப்பான் (ஸ்பிரேயர்): இதைப் பயன்படுத்திய பிறகு, தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி வைக்க வேண்டும். அப்போதுதான், ஃபில்ட்டரில் தங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். கைப்பிடிக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. தேவையான அழுத்தம் கொடுத்தாலே போதுமானது.

பூமி துளையிடும் கருவி (எர்த் ஆகர்): இதை 30 சதவிகிதம் ஈரம் இருக்கும் நிலங்களில்தான் இயக்க வேண்டும். வறண்ட நிலங்களில் துளை போட்டால், பிளேடு அதிகமாக தேய்மானம் அடையும். இன்ஜினிலும் கோளாறு வரும். பாறைகளில் துளையிட பயன்படுத்தவே கூடாது.

உழவு ஓட்டும் கருவி (கல்ட்டிவேட்டர்): கழனியில் சேடை ஓட்ட மற்றும் புழுதி ஓட்ட என இரண்டுக்குமே பயன்படுத்தலாம். சேடை ஓட்டிவிட்டு, வண்டியைத் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். உழவு ஓட்டிவிட்டு வெயிலில் நிறுத்தக்கூடாது.

6 மாதத்துக்கு வேலை இல்லை என்று தெரிந்தால்... பேட்டரியைக் கழற்றி மரப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்!

தொடர்புக்கு,
சுவாமிநாதன்,
செல்போன்: 92824-10041 /
91766-33121