Published:Updated:

'எலி வளை'யில் கவனம் வையுங்கள் !

'எலி வளை'யில் கவனம் வையுங்கள் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'தரிசு நிலங்களை சீர்திருத்த 7 கோடியே 20 லட்சம் ரூபாய்; நடவு முறை துவரை சாகுபடி திட்டத்தை விரிவுபடுத்த 55 கோடியே 60 லட்சம் ரூபாய்; கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்க 275 கோடியே 20 லட்சம் ரூபாய்....'

-'விவசாய வளர்ச்சி திட்டங்கள்' என்கிற பெயரில் இப்படி அதிரடி திட்டங்களை, அடிக்கடி அறிவித்தபடியே இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

'விவசாயத்துறையை எப்படியாவது முன்னேற்ற வேண்டும்' என்கிற முனைப்பில் அவர் செயல்படுவது வரவேற்க தக்க விஷயமே! ஆனால், இப்படி அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம், நூறு சதவிகிதம் விவசாயிகளிடம் சென்று சேர்கின்றனவா என்பதை அவர் நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்!

அரசாங்க திட்டங்கள் அனைத்துமே... நடைமுறையில்... 'ஐஸ் கட்டி' கதையாகத்தானே இருக்கின்றன! அதாவது, ஒரு விவசாயிக்கு நூறு ரூபாய் சென்று சேரவேண்டும் என்று அரசு திட்டமிட்டால்... அரசியல்வாதிகளுக்கு ஒரு பங்கு; வேளாண்துறைக்கு ஒரு பங்கு; வருவாய்த்துறைக்கு ஒரு பங்கு... என்று அனைத்தும் பிரிக்கப்பட்ட பிறகு, மிச்சம் மீதிதானே விவசாயிக்கு சென்று சேர்கிறது!

இப்படியெல்லாம் 'பங்கு' போடுவதுதான் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாடிக்கையாக இருக்கிறது. அதனால்தான் இதுநாள் வரை தீட்டப்பட்ட விவசாய திட்டங்கள் அனைத்துமே போதுமான பலனைத் தராமல், பொய்த்துக் கொண்டிருக்கின்றன.

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியது முக்கியம். ஆனால், பாய்ச்சப்படும் நீரெல்லாம் 'எலி வளை'கள் வழியாக வேறு எங்கோ பாய்ந்தோடிக் கொண்டிருப்பதைக் கவனிக்காமல் பாய்ச்சிக் கொண்டிருந்தால்... யாருக்கு லாபம்?!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு