Published:Updated:

பறிபோன பாசன உரிமை... பாலைவனமாகும் கோபி!

குமுறும் கொடிவேரி விவசாயிகள்... ஜி.பழனிச்சாமி படங்கள்: க. ரமேஷ்

பிரீமியம் ஸ்டோரி

 பிரச்னை

##~##

தமிழகத்தில் பெருமளவு நெல் விளையும் பகுதிகளில் ஒன்றாக இருப்பது... ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிப்பாளையம். அதற்குக் காரணம் அப்பகுதி விவசாயத்துக்கு நீராதாரங்களாக இருக்கும் கொடிவேரி மற்றும் காளிங்கராயன் தடுப்பணைகள்தான். ஆனால், சமீபத்தில் வெளிவந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் இருந்து கேரளா தண்ணீர் கேட்பதால்... குமுற ஆரம்பித்துள்ளனர் கொடிவேரி அணைக்கட்டு பாசன விவசாயிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பவானி நதிநீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி, ''பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்கள் மூலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக முப்போகமும் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், 'பவானி ஆற்றில் இருந்து 6 டி.எம்.சி தண்ணீரை கேரளாவுக்குக் கொடுக்க வேண்டும்’ என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, எங்களது வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இத்தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால்... கொடிவேரி அணைப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர், காளிங்கராயன் அணைப் பாசன பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முப்போக சாகுபடி பாதிக்கப்படும். பத்து மாதங்கள் தொடர்ந்து கிடைத்து வந்த பாசன நீர், வெறும் 65 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதை வைத்து புஞ்சைப்பயிர் கூட வைக்க முடியாது.

பறிபோன பாசன உரிமை... பாலைவனமாகும் கோபி!

டெல்டா பகுதியில் பாசனத்துக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகாவிடம் கேட்டுப் போராடிப் பெற முடியாத தமிழக அரசு, பவானி மற்றும் அமராவதி போன்ற கிளை நதிகளிடம் பிடுங்கி தரப்போகிறது. எனவே எங்களின் பாசன உரிமையை மீட்பதற்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் 'தண்ணீர் வேட்பாளர்’ என ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவோம்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார்

கேரளாவுக்கு தண்ணீரை தாரை வார்த்துவிட்டால், இப்பகுதி முழுக்க பாலைவனமாகி விடும் என்றபடி, கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், மற்றும் ஈரோடு வட்டங்களைச் சேர்ந்த சுமார் 42 ஆயிரம் விவசாயிகள், சமீபத்தில் ஊர்வலமாகச் சென்று பாசன உரிமையை மீட்டுத்தரக் கோரி,

பறிபோன பாசன உரிமை... பாலைவனமாகும் கோபி!

கோட்டாட்சியரிடம் மனுவும் கொடுத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு