Published:Updated:

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

Published:Updated:
##~##

''பால் கறக்கற மாடுங்க, இனிமையான இசையைக் கேட்டா, ஆரோக்கியமா வளரும். சுணக்கம் இல்லாம பால் உற்பத்தி நடக்கும்னு ஆராய்ச்சி மூலமா உறுதிப்படுத்தியிருக்கோம். அதனால, பால்பண்ணையில எப்பவும் மெல்லிய இசை ஒலிச்சிக்கிட்டு இருக்கும்படி செய்யுங்க'னு விஞ்ஞானிங்க ஆலோசனை சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இந்த விஷயத்தை பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே உறுதிப்படுத்திக்கிட்டுதான்... 'ஆடுற மாட்டை, ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்’னு நம்மாளுங்க சொல்லி வெச்சுருக்காங்க.

வீட்டுல புல்லாங்குழல் ஊதற கண்ணன் படம் இருந்தா... கொஞ்சம் உத்துப் பாருங்க. புல்லாங்குழல் இசையை ரசிச்சபடி, மாடுங்க மேயும்... சில மாடுங்க குடம் நிறைய பால் கொடுத்துட்டு இருக்கும். ஒரு அற்புதமான நுட்பத்தைத்தான் அந்த படத்துல வரைஞ்சுருப்பாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுசா மாடு வாங்கப் போறவங்க கவனத்துக்கு... கறவை மாடுங்களைப் பொறுத்தவரை பொதுவா ரெண்டாவது ஈத்துல (கன்று) இருந்துதான் பால் உற்பத்தி நல்லா இருக்கும். அதனால, ரெண்டு வயசுல இருக்கிற மாடா பாத்து, வாங்குறதுதான் நல்லது. மாடுங்களோட கறவைத் திறன் ஏழாம் வருஷத்துல இருந்து, படிப்படியா குறையும்கிறதையும் மனசுல வெச்சுக்கோங்க.

ன்னு போட்டதுமே மாட்டோட சீம்பாலை கன்னுக்குட்டிக்குக் கொடுக்கணும். இந்த சீம்பால்லதான், கன்னுக்குட்டி ஆரோக்கியமா வளர்றதுக்குத் தேவையான உயிர்ச்சத்துங்க அதிகமா இருக்குது. ஆனா, கன்னுக்குட்டிக்கு கொஞ்சமா சீம்பாலைக் கொடுத்துட்டு, மீதிப்பாலை வெல்லம், ஏலக்காய் போட்டு காய்ச்சி, கட்டி, கட்டியா 'ஸ்வாஹா’ பண்ணிடறாங்க பலரும். பாவம் கன்னுக்குட்டிங்க... நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாம அவதிப்படுதுங்க!

மண்புழு மன்னாரு !

ன்னு போட்டு, ரெண்டு மாசம் கழிச்சுத்தான் பால் உற்பத்தி அதிகரிக்கும். ஆனா, இந்த விஷயம் தெரியாம ஒரு வாரத்துலயே பால் உற்பத்தி அதிகரிக்கலைனு விதம்விதமான தீவனத்தை மாடுகளுக்கு பலரும் திணிக்கறாங்க. இதனால, மாட்டுக்கு, ஜீரணக் கோளாறு வரைக்கும் போயி, வேற வேற பிரச்னைகள்தான் வந்து சேரும். வழக்கத்தைவிட பாலும் குறைவாதான் கொடுக்கும். அதனால, ரெண்டு மாசம் வரையிலும் பொறுமையா இருங்க!

'நேரம் கிடைக்கிறப்பல்லாம் பால் கறக்க நெனைக்கறது ரொம்ப தப்பு. பால் கறவைங்கிறது, மாட்டோட உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயம். காலையில 5 மணிக்கு பால் கறக்கறத பழக்கப்படுத்தியிருந்தா... அதையே தொடருங்க. அஞ்சு, பத்து நிமிஷம் கூடவோ, குறையவோ செய்யலாம். ஆனா, ஒரு நாளைக்கு 5 மணி, இன்னொரு நாளைக்கு 7 மணினு மாத்தி மாத்தி கறந்தா, பால் சுரப்பு பாதிக்கப்படும்.

பால் கறக்கிற ஆளுக்கும், மாட்டுக்கும் உணர்வு ரீதியா ஒரு பிடிப்பு இருக்கும். அதனால, ஒரே ஆளே தொடர்ந்து, பால் கறக்கறது நல்லது. தவிர்க்க முடியாத நேரத்துல வேணும்னா... யாரவது மாத்தி கறக்கலாம். தெனமும் வேற வேற ஆளோட கை மடியில பட்டா, மாடுங்க பயந்துபோய் பாலை அடக்கி வெச்சுடும். அதனால எச்சரிக்கையா இருங்க!

ன்னுக்குட்டிங்க, மாட்டை நக்கிக்கிட்டே இருக்கும். 'அட, எவ்வளவு பாசம் பாரு'னு அந்தக் காட்சியை ரசிப்போம். இதுக்குக் காரணம் பாசம் மட்டுமில்ல... உப்புச் சுவை வேணும்ங்கிறதுக்காகவும்தான்! இந்தப் பழக்கம் அதிகரிச்சா, நக்கும்போது வாயில சிக்குற மாட்டோ முடிங்க ஒண்ணு சேர்ந்து கன்னுகுட்டி வயித்துக்குள்ள போய் கடமுடா பண்ணிடும். இதைத் தவிர்க்க, பால் கறந்து முடிச்சதுமே கன்னுக்குட்டியோட நாக்குல உப்பைத் தடவி வைங்க!

மாட்டுப் பண்ணைங்களுக்கு 'சிமென்ட் அட்டை ஷீட்' (ஆஸ்பெஸ்டாஸ்) போடறதுதான் பெரும்பாலும் வழக்கமா இருக்கு. இந்த அட்டை, சூட்டை இழுத்து, பண்ணைக்குள்ள தள்ளிக்கிட்டே இருக்கும். சூடு தாங்கமா, மாடுங்க அவதிப்படும். இதனால பால் உற்பத்தியும் குறையும்.

கூரை மேல, பனை ஓலை, தென்னை ஓலைனு எதையாவது பரப்பி வெச்சா... வெயில் காலத்துல சூடு உள்ள போகாம இருக்கும். முடிஞ்சா சாயந்திர வேளைகள்ல ஓலை மேல தண்ணிகூட தெளிச்சிவிடலாம். சும்மா குளுகுளுனு இருக்கும். இந்த ஓலைங்க இருந்தா... குளிர்காலத்துல சும்மா, கதகதப்பா இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism