Published:Updated:

எந்திரன்களே வருக..!

ஒரே நேரத்தில் 20 எலிகள்... அசத்தலாக ஒரு புதுப்பொறி!த.ஜெயகுமார், படங்கள்: த.ருபேந்தர்

எந்திரன்களே வருக..!

ஒரே நேரத்தில் 20 எலிகள்... அசத்தலாக ஒரு புதுப்பொறி!த.ஜெயகுமார், படங்கள்: த.ருபேந்தர்

Published:Updated:

கருவிகள் - 7                வெற்றிக்கு வழி சொல்லும் விவேக தொடர்..!

##~##

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், 'விவசாயம் ஒன்றே வாழ்க்கை' என்று உள்ளூரிலேயே தங்கி இருக்கும் உழவர்களுக்கு, உற்றத் தோழனாகக் கைகொடுப்பது... கருவிகள்தான்! அத்தகையக் கருவிகள், அவற்றின் பயன்பாடு, அரசாங்கத்தின் மானியம் என அனைத்துத் தகவல்களும் இப்பகுதியில் உங்களுக்குக் கிடைக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்திரன்களே வருக..!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்குளத்தூர் அருகே செயல்பட்டு வரும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் தொழில்நுட்பப்பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் சித்தார்த், விலை குறைவான சில கருவிகளைப் பற்றி இங்கே விளக்குகிறார்.

நிலக்கடலை ஓடு நீக்கும் கருவி!

பெயர் : டெக்கார்டிகேட்டர்
விலை :

எந்திரன்களே வருக..!

3,500

எந்திரன்களே வருக..!

வைகாசிப் பட்டம் நிலக்கடலை விதைப்பதற்கு ஏற்ற காலம். விதைக்கடலையை ஆட்கள் வைத்து உரிக்க அதிக செலவாகும். அதற்குப் பதிலாக இக்கருவியைப் பயன்படுத்தலாம். இரண்டு கிலோ விதைக்கடலையைக் கொட்டி, கருவியில் உள்ள கைப்பிடியைப் பிடித்து முன்னும், பின்னுமாக நகர்த்தினால், அடிப்பகுதியில் நசுங்கிய பொட்டும், விதையும் பிரிந்து கீழே விழும். அதை எடுத்து காற்றில் தூற்றினால் பொட்டும், விதையும் தனித்தனியாகப் பிரியும். இக்கருவிக்கு எரிபொருளோ, மின்சாரமோ தேவையில்லை.

எந்திரன்களே வருக..!

தென்னைமரம் ஏறும் கருவி!

விலை :

எந்திரன்களே வருக..!

2,750

கேரள மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவியைப் பயன்படுத்தி தென்னை, பனைமரங்களில் ஏற முடியும். இக்கருவி இரண்டு பகுதிகளாக இருக்கும். மேல் பகுதியில் உள்ள பிடிமானத்தைக் கையாலும், கீழ்பகுதியில் உள்ள பிடிமானத்தைக் காலாலும் இயக்க வேண்டும்.

எழுந்து நிற்கும்போது மேல் பிடிமானத்தையும், உட்காரும்போது, கீழ் பிடிமானத்தையும் தூக்கி மேலே வைக்க வேண்டும். இப்படியே மாற்றி மாற்றிச் செய்தால் மரம் ஏறி விடலாம். இக்கருவியைப் பயன்படுத்தி முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால், மிக சுலபமாக ஏற முடியும்.

விந்தை எலிப்பொறி!

விலை :

எந்திரன்களே வருக..!

500

நெல், காய்கறி, பழத்தோட்டங்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். விவசாயத்துக்கு பெரும் எதிரிகளான எலிகளைப் பிடிக்க பிரத்யேகமான கருவி இது. இதன் மூலம் ஒரே சமயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட எலிகளைப் பிடிக்க முடியும். தூக்கிச் செல்வதும் எளிது.

எந்திரன்களே வருக..!

பொறியின் இரண்டு பக்கமும் துவாரங்கள் இருக்கும். ஒரு துவாரத்தின் வழியாக எலிக்கான தீவனத்தை வைக்க வேண்டும். அதை சாப்பிட இன்னொரு துவாரத்தின் வழியாக பொறிக்குள் நுழையும் எலிகள் வெளி வர முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளும். வயலில் நான்கு மூலைகளிலும் இப்பொறிகளைத் தொடர்ச்சியாக வைத்தால், கணிசமான அளவில் எலிகளைப் பிடித்து விடலாம்.

புதிதாக வாங்கிய பொறியை எந்தத் தீனியையும் வைக்காமல், வயலில் நான்கு மூலைகளிலும் இரண்டு நாட்களுக்கு வைத்து விட வேண்டும். மூன்றாம் நாள் அதில் கருவாடு, சுட்ட தேங்காய், வடை இவற்றில் ஏதாவதொன்றை வைத்து விட்டால், எலிகள் மாட்டத் தொடங்கும்.

பொறிக்குள் எலிகள் சேர்ந்தவுடன் பொறியை தண்ணீருக்குள் அமிழ்த்தி 5 நிமிடம் பிடித்தால், எலிகள் மூச்சுத்திணறி இறந்து விடும். அவற்றைப் புதைத்துவிட்டு பொறியை சோப்பு போட்டுக் கழுவி மீண்டும் உபயோகப்படுத்தலாம். இதை, வீடுகள், கடைகளிலும் பயன்படுத்தலாம்.

எந்திரன்களே வருக..!

பெருநெல்லிக்காய் விதை நீக்கும் கருவி!

விலை :

எந்திரன்களே வருக..!

2,000

பெருநெல்லிக்காயிலிருந்து கொட்டையை நீக்க இது பயன்படும். எவர்சில்வர் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் எளிதில் துரு பிடிக்காது. ஓட்டையுடன் கூடிய அமைப்பில் நெல்லியை வைத்து கைப்பிடியை மேலே தூக்கினால், நெல்லியின் மத்தியில் உள்ள கொட்டை மட்டும் தனியே வந்துவிடும்.

பெருநெல்லியை மதிப்புக்கூட்டும் தொழில் செய்பவர்களுக்கு உபயோகமான கருவி இது. இதற்கு மின்சாரம், எரிபொருள் தேவையில்லை.

தொடர்புக்கு: சித்தார்த்: 044-27452371 / 94432-11602

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism