Published:Updated:

வேளாண் கல்லூரி வேதனை...

பறிபோன இடஒதுக்கீடு... பரிதவிக்கும் விவசாய வாரிசுகள்..! காசி.வேம்பையன் படங்கள்: தி. விஜய், வீ. நாகமணி

வேளாண் கல்லூரி வேதனை...

பறிபோன இடஒதுக்கீடு... பரிதவிக்கும் விவசாய வாரிசுகள்..! காசி.வேம்பையன் படங்கள்: தி. விஜய், வீ. நாகமணி

Published:Updated:

பிரச்னை

##~##

விவசாயிகளின் பிள்ளைகள், விவசாயத்துக்கு வருவதே அரிதாகிவிட்ட காலமிது. இந்தச் சூழலில், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு வேளாண் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு நிறுத்தப்பட்டிருப்பது... தங்கள் பிள்ளைகளை விவசாயப் படிப்பில் சேர்க்க ஆசைப்படும் விவசாயிகளை வேதனைப்பட வைத்துள்ளது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைப் பற்றி நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் பா.ச. மாசிலாமணி, ''விவசாயிகளின் வாரிசுகளுக்கு என்று மொத்தம் 40 இடங்கள் தமிழக அளவில் வேளாண் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக இருந்துவந்த இந்த நடைமுறை 2007-ம் ஆண்டு முதல் ரத்தாகிவிட்டது. இதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால், 'தொழில்துறைக்கான ஒதுக்கீடு' என்கிற அடிப்படையில், இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொழில் துறையினருக்கே வேளாண் கல்லூரியில் இட ஒதுக்கீடு வைத்திருக்கும்போது, விவசாயிகளின் பிள்ளைகளுக்கான இடஒதுக்கீட்டை ஏன் ரத்துச் செய்ய வேண்டும்?

எங்கள் பிள்ளைகளுக்கு விவசாயம் படிக்கிற வாய்ப்பு, இதனால் குறைந்துவிட்டது. தமிழக அரசு, இந்த இடஓதுக்கீட்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

வேளாண் கல்லூரி வேதனை...

''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் சேர்வதற்கு தேர்வு எழுத திட்டம் வைத்திருக்கும் பலரும், அதற்கு ஒரு ஏணியாக விவசாயக் கல்லூரிகளில் சேர்கிறார்கள். பொறியில் மற்றும் கலைக் கல்லூரிகளை ஒப்பிடும்போது இங்கே ஓய்வு அதிகம் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதனால், 'நெல் மரத்தில் காய்க்கிறதா, செடியில் காய்க்கிறதா?’ என்றே தெரியாத, விவசாயத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் விவசாயம் படிக்கின்றனர்.

வேளாண் கல்லூரி வேதனை...

சேற்றிலே உழன்று விவசாயம் பார்க்கும் விவசாயிகளின் பிள்ளைகள், இப்படிப்பைப் படித்தால்தால்தான், கஷ்ட, நஷ்டத்தை உணர்ந்து... புதுவிதமான தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் நல்ல முறையில் நடக்க வழிவகை செய்வார்கள். எனவே, இடஓதுக்கீட்டை கட்டாயம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்'' என்று தன் பங்குக்கு கோரிக்கை வைத்தார் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி.

இதுபற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமியிடம் பேசியபோது, ''அரசு விதிமுறைப்படி 69% இட ஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும். அதனால், விவசாயிகளின்

வேளாண் கல்லூரி வேதனை...

பிள்ளைகள், பயிர் விளைச்சல் போட்டியில் அதிகமான மகசூல் எடுத்த விவசாயிகளின் பிள்ளைகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஓதுக்கீடுகள் 2007-ம் ஆண்டே ரத்து செய்யப்பட்டு விட்டன. மீண்டும் இட ஒதுக்கீடு தருவது பற்றியெல்லாம் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' என்று சொன்னார்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய சிதம்பரம் தொகுதி, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன்,

''69% இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டுமே. மற்றபடி ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள்... என்று பலவிதங்களில் செய்யப்படும்  ஒதுக்கீடுகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அவை தற்போதும் நடைமுறையில்தான் இருக்கின்றன. அந்த அடிப்படையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை. இதைப்பற்றி சட்டமன்றத்தில் பேசி, விஷயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்'' என்று சொன்னார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றபோது, ''இது கடந்த ஆட்சிக் காலத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதை, 'மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று இதுவரை கோரிக்கை எதுவும் வரவில்லை. தற்போது, உங்கள் மூலமாக வந்திருக்கும் இந்தச் செய்தியையே ஒரு கோரிக்கையாக எடுத்துக் கொண்டு, முதல்வர் அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்'' என்று சொன்னார்.