Published:Updated:

கண்ணை விற்று சித்திரம் வாங்காதீர் !

கண்ணை விற்று சித்திரம் வாங்காதீர் !

கண்ணை விற்று சித்திரம் வாங்காதீர் !

கண்ணை விற்று சித்திரம் வாங்காதீர் !

Published:Updated:

 அனைவருக்கும் பசுமை வணக்கம்!

##~##

''மரங்கள் வளர வளர... அவையெல்லாம் நமக்கு நன்னம்பிக்கையை... தன்னம்பிக்கையைத் தருகின்றன. ஒரு கட்டத்தில் நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. அத்தகைய மாற்றம் நிகழ்ந்தவுடன் பறவைகள், சிறுசிறு விலங்குகள் எல்லாம் திரும்ப எழுந்தோடி வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடக்கும்போது, இளைப்பாற நிழல் பெருகுகிறது. திடீரென்று புதியதொரு சமூகச் சூழலும் உருவாகிறது. இதெல்லாம் நிகழ்ந்தபிறகு, மரங்களை நடச்சொல்லி யாரும் மக்களை வற்புறுத்தத் தேவையிருக்காது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மரங்கள் வளர்ப்பு மூலம் கென்யா நாட்டில், மாபெரும் மாற்றத்தை உருவாக்கிக் காட்டிய போற்றுதலுக்கு உரிய கறுப்பினப் பெண்மணி வங்காரி மாதாய், தன் மக்களின் மனதில் தாய்மை உணர்வுடன் பதியம் போட்டிருக்கும் வார்த்தைகள் இவை. ஆப்பிரிக்க கண்டத்திலிருக்கும் கென்யா நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை துணையமைச்சராக இருந்து மறைந்தவர்.

இதோ... தற்போது இந்தியாவில் சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பு வகிப்பவரும் ஒரு பெண்மணிதான். தனிப்பொறுப்புடன் இணையமைச்சர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஜெயந்தி நடராஜன், ''நாட்டின் வளர்ச்சிக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் தடையாக இருக்காது'' என்று 'உலக சுற்றுச்சூழல்' தினத்தில் (ஜூன்-5) வாய் திறந்திருக்கிறார்.

நாட்டுக்கு வளர்ச்சி முக்கியம். ஆனால், எது வளர்ச்சி என்பதை பிரித்தறிவதில்தானே இங்கே பிரச்னையே!

பூமி உள்ளளவும் நிலைத்திருக்க வேண்டிய மலைகளை, இரும்புக்காக... இன்னபிற கனிமங்களுக்காக தகர்த்துக் கொண்டே இருப்பது; கடைசி உயிர் உள்ளளவும் காப்பாற்றப்பட வேண்டிய காடுகளை, கண்ட கண்ட தேவைகளுக்காக கபளீகரம் செய்து கொண்டே இருப்பது: ஆறுகள் உள்ளளவும் நிறைந்திருக்க வேண்டிய மணலை, அடிமட்டம் வரை சுரண்டி, செழிப்பான நிலங்களை பாலைவனங்களாக உருமாற்றிக் கொண்டே இருப்பது... இதெல்லாம்தான் இங்கே 'வளர்ச்சி' என்று வர்ணிக்கப்படுகிறது!

அம்மா ஜெயந்தி... வங்காரி மாதாய் அளவுக்கு இல்லையென்றாலும்... குறைந்தபட்சம் 'கண்ணை விற்று சித்திரம் வாங்க வேண்டாம்' என்பதையாவது உரியவர்களுக்கு தாய்மை உணர்வோடு அறிவுறுத்தலாமே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism