Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

 நர்சரி மேலாண்மை!

##~##

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 14-ம் தேதி நிலக்கடலையில் பயிர் பாதுகாப்பு முறைகள்; 20-21 தேதிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பழப்பொருட்கள் தயாரிப்பு; 25-26 தேதிகளில் சோலார் பம்ப் செட் ; 27-28 தேதிகளில் வீரிய ரக காய்கறி மற்றும் நர்சரி மேலாண்மை; 28-ம் தேதி விஞ்ஞான முறையில் வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்புக்கு: தொலைபேசி: 044-27452371.

நாட்டுக் கோழிச் சந்தை!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 19-ம் தேதி  நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறை என்ற பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: தொலைபேசி: 0427-2410408.

தண்டோரா

புலிக்குளம் மாடு!

மதுரை பகுதியின் பாரம்பரிய மாடுகள் புலிக்குளம், மலை மாடுகள். இந்த இன மாடுகளைப் பாதுகாக்க மதுரை, பில்லர் சாலையில் உள்ள பில்லர் ஹாலில் ஜூன் 19-ம் தேதி கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள் கருத்துரை வழங்கவுள்ளனர்.  

முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஏற்பாடு: சேவா தொண்டு நிறுவனம், மதுரை மற்றும் உலக உணவு, வேளாண் நிறுவனம் (திகிளி). தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2380082.  

சிறுதானிய சாகுபடி!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 11-ம் தேதி மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய சாகுபடி; 13-ம் தேதி மஞ்சள் சாகுபடி நுட்பங்கள்; 18-ம் தேதி முயல் வளர்ப்பு; 21-ம் தேதி மீன்பண்ணைகளுக்குத் தீவன தயாரிப்பு; 25-ம் தேதி நாட்டுக் கோழிகளுக்குத் தீவன மேலாண்மை; 27-ம் தேதி சினைக்கு வராத மாடுகளுக்கான சிகிச்சை ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04286-266345.

லாபகரமான வெள்ளாடு!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 18\ம் தேதி லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு; பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004.தொலைபேசி: 0451-2460141

 தேனீ வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 14-ம் தேதி மீன் வளர்ப்பில் நீர், உணவு மேலாண்மை; 21-ம் தேதி தேனீ வளர்ப்பு; 27-ம் தேதி கறவைமாடு வளர்ப்பு; 28-ம் தேதி கடலை சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04577-264288

இயற்கைக் களப்பயிற்சி!

கரூர் மாவட்டம், கடவூர், வானகம் பண்ணையில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ஜூன் 17 முதல் 21 -ந் தேதிவரை இயற்கை வழி மற்றும் நிரந்தர வேளாண்மைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இயற்கை விவசாயத்தைக் களப்பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். தங்குமிடம், உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

முன்பதிவு முக்கியம்.
தொடர்புக்கு, செல்போன்: 94880-55546.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism