Published:Updated:

நாள் முழுக்க உழைக்கலாம்... நலமுடன் வாழலாம்...

இது, சிறுதானியக் கொடை! காசி. வேம்பையன் படங்கள்: பா. கந்தகுமார்

நாள் முழுக்க உழைக்கலாம்... நலமுடன் வாழலாம்...

இது, சிறுதானியக் கொடை! காசி. வேம்பையன் படங்கள்: பா. கந்தகுமார்

Published:Updated:

பாரம்பரியம்

##~##

'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்’ என்கிற பழமொழியை மெய்ப்பித்துக் கொண்டி ருக்கின்றன, 'ஃபாஸ்ட் ஃபுட்’ கலாசார உணவுகள். நாகரிகம் என்கிற பெயரில், பாட்டன் காலத்து உடல் உறுதியையும், சுறுசுறுப்பை யும் காணாமல் செய்து விட்டன, இந்த எமகாதக உணவுகள்! இவற்றையே நம்மவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்திருப் பதால்... நகர்ப்புறங்களில் மட்டுமே மருத்துவமனைகள் இருந்த நிலைமாறி, தற்போது கிராமங்களிலும் வீதிக்கு வீதி மருத்துவ மனைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தகையச் சூழலில்... 'சாமை, தினை, கேழ்வரகு, கம்பு... என சிறுதானியங்கள் நமது உணவிலிருந்து விலக விலக... நோய்கள் நெருங்க ஆரம்பித்து விட்டன. பாரம் பரிய உணவு வகைகளான சிறுதானிய உணவுகளை சாப்பிடுபவர்கள் எப்போ தும் ஆரோக்கியத்துடன் தான் வாழ்கிறார்கள். அதற்கு, நாங்களே சாட்சி'' என்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த கல்பனா.

வெயிலைத் தணிக்கும் இயற்கைக் குடையாக விரிந்து நின்ற மாமரத்தின் அடியில், தன் கணவர் முத்துக்குமரனோடு சேர்ந்து, தினைப்பொங்கல் செய்து கொண்டே பேச ஆரம்பித்தார், கல்பனா.

நாள் முழுக்க உழைக்கலாம்... நலமுடன் வாழலாம்...
நாள் முழுக்க உழைக்கலாம்... நலமுடன் வாழலாம்...

''நாங்க, திருப்பூர்ல பனியன் கம்பெனி நடத்தினோம். அதுல நஷ்டமாயிட்டதால சொந்த ஊருக்கு திரும்பி, எங்களோட 6 ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். ஆரம்பத்துல, ரசாயன விவசாயம்தான். நண்பர்கள் மூலமா இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு மாறிட்டோம்.

இதுல, ரசாயன விவசாயத்தைவிட லாபம் அதிகமாகக் கிடைக்கிறதோட, இதுல விளையுற அரிசி, பருப்பெல்லாம் சுவையாவும் இருக்கு. இயற்கை விவசாயத்துல இறங்கின பிறகு, சிறுதானியங்கள், அதோட பயன்களையும் தெரிஞ்சுக்கிட்டு, அதையெல்லாம் பயன்படுத்தி உணவுகளை சமைக்கவும் கத்துக்கிட்ட பிறகு, மைதா, சேமியா, நூடுல்ஸ் இந்த மாதிரி வேண்டாத விஷயங்களை நாங்க தொடறதே இல்லை.

நாள் முழுக்க உழைக்கலாம்... நலமுடன் வாழலாம்...

வாரத்துல மூணு நாள் எங்க வீட்டுல சிறுதானிய சமையல்தான். இதைச் சாப்பிட்டா, நாள் முழுக்க சோர்வு இல்லாம, வயல்ல வேலை பார்க்க முடியுது. உடலுக்கு தெம்பும், சுறுசுறுப்பும் நல்லா கிடைக்குது. என்னோட மூணு வயசு பையனுக்கு அரிசி சாப்பாட்டை ஊட்டுனா ஓடியே போயிடுவான். ஆனா, சிறுதானிய சாப்பாட்டை விரும்பி சாப்பிடுறான். உடம்புக்கு முடியாம இருந்த என்னோட அப்பாவும், சிறுதானிய உணவுகளை சாப்பிட ஆரம்பிச்ச பிறகு... தெம்பாயிட்டார். எங்க வீட்டுல அடிக்கடி தினைப்பொங்கல் செஞ்சு சாப்பிடறோம். இதைச் சாப்பிடுறவங்களுக்கு ரத்தவிருத்தி அதிகமாகும்'' என்று சிறுதானிய உணவுகளின் பெருமை பேசிய கல்பனா, சமையல் குறிப்புகள் சிலவற்றையும் வழங்கினார்.

 தொடர்புக்கு,
முத்துக்குமரன் (கல்பனாவின் கணவர்),
செல்போன்: 94430-62264.

 தினை இனிப்புப் பொங்கல்!

தேவையானவை: தினை அரிசி-200 கிராம், பாசிப்பருப்பு-, 100 கிராம், நெய்-4 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை-தலா 25 கிராம், ஏலக்காய்-3, வெல்லம் அல்லது பனைவெல்லம்-250 கிராம்.

தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு பங்கு தினை அரிசிக்கு, நாலு பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் கலந்து, நன்றாக வேக வைக்க வேண்டும். முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது பனை வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த தினைச் சோறில் கலந்து, வறுத்த முந்திரி, திராட்சையுடன் ஏலக்காயை இடித்துப் போட்டு கிளறினால், பொங்கல் தயார்.

குறிப்பு: கடைகளில் தினை அரிசி என்று கேட்டு வாங்க வேண்டும். தினை என்று வாங்கினால், அது தோலோடு இருக்கும். அதை நீக்குவது கடினமான வேலையாக இருக்கும். தினை அரிசி காதி கிராஃப்ட் உள்ளிட்ட கடைகளில் கிடைக்கும்.

தினை பாயசம்!

பாசிப்பருப்பு- 50 கிராம்,  தினை- 100 கிராம், நெய்- 2 தேக்கரண்டி முந்திரி, திராட்சை- 25 கிராம், வெல்லம்- 150 கிராம், பால்-200 மில்லி, தேங்காய் துருவல்-கால் மூடி.

பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, 1 பங்குக்கு 5 பங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, வேக வைத்த கஞ்சியில் ஊற்றவேண்டும். இறுதியாக, பால், தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை இட்டுக் கிளறி லேசாகக் கொதிக்கவிட்டால், பாயசம் தயார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism