Published:Updated:

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

Published:Updated:

 ஓவியம்: ஹரன்

##~##

ஏட்டறிவெல்லாம் இல்லாத காலத்துல இருந்து, நம்மகூட பாடநூலா தொடர்ந்து வர்றது... பட்டறிவுள்ள முன்னோருங்க சொல்லி வெச்ச சங்கதிங்கதான். அனுபவ அறிவால அவங்க சொல்லி வெச்ச அந்த அற்புத சங்கதிகளைத்தான்... 'பழமொழி'ங்கற பேருல இன்னிக்கு பேசிட்டிருக்கோம். இந்த விஷயங்கள் எல்லாம், காலாகாலத்துக்கும் நம்ம மனசுல நிக்கணும்கறதுக்காகத்தான்... 'பன்ச் டயலாக்' மாதிரி எதுகை, மோனையோட சொல்லி வெச்சுருக்காங்க. ஆனா, அதுல பல பழமொழிகளோட உண்மையான பொருள் புரியாத அளவுக்கு, அதெல்லாம் சிதைஞ்சு போனதுதான் சோகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’னு யாரையாவது திட்டும்போது சொல்லுவோம். இதோட உண்மையான அர்த்தமே வேற. 'கழு’ங்கிறது ஒருவகையான கோரைப்புல். அதுல தைக்கப்படும் பாயில கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகள அந்தப் பாயில படுக்கப் போட்டா, பூச்சிகள் அண்டாது. இந்தப் பழமொழியை 'கழு தைக்கும்போது தெரியும் கற்பூர வாசம்?’னு சொல்லணும். அதை விட்டுப்புட்டு, கடுமையா உழைக்கற கழுதையை கேவலப் படுத்திட்டிருக்கோம்.

மண்புழு மன்னாரு !

'ஆனைக்கு... பூனைக்கு’!

யாராவது, தனக்கு உதவி செய்யலனா.. 'ஆனைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கு ஒரு காலம் வரும்’னு வெறுப்புல சொல்லுவாங்க. உண்மையில, 'ஆநெய்க்கு ஒரு காலம் வந்தா, பூநெய்க்கு ஒரு காலம் வரும்'னுதான் இதைச் சொல்லணும். அதாவது, 40 வயசு வரைக்கும் ஆநெய், அதாங்க... பசுவோட நெய்யை உணவுல தாராளமா சேர்த்துக்கலாம். 40 வயசுக்கு மேல, பூநெய்னு சொல்ற தேனைச் சாப்பிடணும். இவ்வளவு கருத்தான விஷயம் எப்படி மாறிபோய் கிடக்குது பாருங்க.

ஈனாத மாட்டை எருவாக்கு!

'ஈனாத மாட்டை எருவாக்கணும்’னு சொல்லுவாங்க. இதை மேலோட்டமா பார்த்தா, 'கன்னு போடாத மாட்டை, கசாப்பு கடைக்கு அனுப்பு'னு சொல்ற மாதிரி இருக்கும். ஆனா, உண்மையான பொருள்... 'ஈனாத மாட்டை எருவுக்கு பேணு’ங்கிறதுதான். மாட்டை பாலுக்காக மட்டுமில்லாம, எருவுக்காவும் வளர்க்கணுங்கிறதுதான் இந்தப் பழமொழி நமக்குச் சொல்ல வர்ற நிசமான சங்கதி!

கன்னு போட்டதிலிருந்து எட்டு மாசம் வரைக்கும் பால் உற்பத்தி நல்லா இருக்கும். அதுக்கப்புறம் படிப்படியா பால் உற்பத்தி குறைஞ்சுக்கிட்டே வரும். ஏன்னா, கன்னு போட்ட ரெண்டு மாசத்துல மாடுங்க பருவத்துக்கு வந்துடும். எட்டு மாசத்துல கருவுல இருக்கிற சிசுவுக்கு சத்து தேவை. அதனால இயற்கையாவே பால் உற்பத்தி குறைஞ்சுடும். உடனே, அப்போதிலிருந்து பால் கறக்கறதை நிறுத்திடணும். எட்டு மாச சினைக்கு பிறகும், பால் கறந்தா, அது மாட்டுக்கும் நல்லதில்ல, உள்ள இருக்கிற வருங்கால கன்னுக்குட்டிக்கும் நல்லதில்ல!

இப்படி பழமொழிகள் அத்தனையிலயும் ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிஞ்சு கிடக்கு. அதையெல்லாம், தெளிவா புரிஞ்சுகிட்டா... செலவில்லாம, ஏகப்பட்ட நுட்பங்களை நாம தெரிஞ்சுகிட்டு, பயன்படுத்தி பலனடையலாம்!

புறவழிச் சாலைகளுக்கு (பைபாஸ் ரோடு) நடுவுல அரளிச் செடிகளா வெச்சுருக்கறத பார்த்திருப்பீங்க. 'ஊர், உலகத்துல ஏராளமான செடிங்க இருக்கறப்ப, இந்த அரளியை மட்டும் வெச்சுருக்காங்களே?'னு சிலருக்கும் தோணும். மத்தச் செடிகளைவிட, இந்த அரளிச் செடி, கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகமா உறிஞ்சுடுதாம். அதாவது, வாகனங்கள்ல இருந்து வர்ற கரிப்புகையை உறிஞ்சுக்கும். அதனால, சாலைகள் ஓரமா வீடுகள் கட்டி வசிக்கறவங்க, தொழிற்சாலைகள் நிறைஞ்ச பகுதிகள்ல வசிக்கறவங்கள்லாம்கூட, வீட்டைச் சுத்தி இந்த அரளிச் செடிகள வளர்க்கலாம். இதனால, வீட்டுக்குள்ள கரிப் புகையோட தாக்கம் குறையும்!

கோயில்கள்ல... பயன்படுத்தற பாத்திரங்கள், கோபுர கலசம்னு பலதும் செம்புல செய்ததான் இருக்கும். குறிப்பா பெருமாள் கோயில்ல தீர்த்தம் கொடுக்கும்போது கவனிச்சுப் பாருங்க. கோயில்ல, தங்கம், வெள்ளினு சகலவிதமான பாத்திரப் பண்டம் இருந்தாலும்... துளசியும், தண்ணியும் கலந்த தீர்த்தத்தைக் கொடுக்கறதுக்கு, செம்புப் பாத்திரத்தைத்தான் பயன்படுத்துவாங்க. இதுல முக்கியமான நுட்பம் இருக்கு. செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சிருந்தா, அதுல இருக்கற கெட்டது செய்யற நுண்ணுயிரிங்க தன்னால நீங்கிடும். அதனாலதான், வீட்டுலகூட செம்புப் பாத்திரத்துல தண்ணிய சேமிச்சு வெச்சு பயன்படுத்துற பழக்கம் காலகாலமா நம்மகிட்ட இருந்துச்சு. செம்புப் பாத்திரங்கள் ஒரு சொத்தாவும் இருக்கும். ஆனா, இப்போ, 'வாட்டர் ஃபில்டர்'னு ஒரு வஸ்துக்கு தண்ணியை சுத்தம் பண்றதுக்காக ஆயிரக்கணக்குல செலவழிக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism