சந்தை

'இரவல் சீலையை நம்பி, இடுப்புக் கந்தையை எறிந்த கதை’யாக, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுதானியங்களை ஒதுக்கிவிட்டு... நோய்களுக்கு வரவேற்பு வைக்கும் உணவுகளைத்தான் பெரும்பாலும், நாம் சாப்பிட்டு வருகிறோம்.

உணவால் விளையும் அபாயத்தை உணர்ந்து வரும் பலரும், சிறுதானியங்களைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 'திருப்பூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட’த்தில், சிறுதானிய விற்பனை நடந்து வருகிறது.

அந்த விற்பனைக் கூடத்தை ஒரு வலம் வந்தோம். கொண்டு வந்திருந்த வெள்ளைச் சோளத்திலிருந்து கொஞ்சத்தை கையில் அள்ளி, நம்மிடம் காட்டிக் கொண்டிருந்தார், காமநாயக்கன்பாளையம் ஈஸ்வரன்.

''பத்து வருஷமா இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வந்துக்கிட்டு இருக்கேன். பருத்தி, சோளம், கொண்டைக் கடலையைக் கொண்டு வந்து விப்பேன். சீஸனுக்கு தகுந்த மாதிரி எல்லா தானியங்களையும் விவசாயிங்க இங்க கொண்டு வந்து விக்குறாங்க.

தமிழ்நாட்டுல பல மாவட்டங்கள்ல இருந்தும், கர்நாடகா, கேரளாவுல இருந்தும்கூட விவசாயிகள் வர்றாங்க. ஏகப்பட்ட வியாபாரிங்களும் வர்றாங்க. அதனால, உடனடியா விற்பனையாகி பணம் கிடைச்சுடுது.

இன்னிக்கு 50 மூட்டை சோளம் கொண்டு வந்தேன். குவிண்டால் 3 ஆயிரம் ரூபாய்னு பேசி வித்தாச்சு. அந்தக் காசுல தீவனத்துக்காக பத்து மூட்டை மக்காச்சோளம் வாங்கிட்டுப் போலாம்னு இருக்கேன்'' என்றார், ஈஸ்வரன்.

குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தினை மூட்டைகளில் இருந்து, அங்குசத்தில் குத்தி எடுக்கப்பட்ட தினையை, கையில் ஏந்திப் பார்த்துக் கொண்டிருந்த உடுமலைப்பேட்டை வியாபாரி ஈஸ்வரன், ''இன்னிக்கு சிறுதானியங்கள்ல தினைக்குத்தான் ரொம்ப கிராக்கி.

தமிழ்நாட்டுலதான் தினை விவசாயம் குறைஞ்சுட்டே வருது. ஆனா, மைசூர் பகுதியில தினை விளைச்சல் அதிகம். அதனால அந்த விவசாயிங்க தினை மூட்டைகளை விக்குறதுக்காக இங்க வர்றாங்க. நான் வாராவாரம் தினையை கொள்முதல் செஞ்சி பல இடங்களுக்கு அனுப்புறேன். குறிப்பா, குழந்தைகளுக்கான சத்து மாவு தயாரிப்புக்கு தினை அதிகமா தேவைப்படுது.

இன்னிய தேதியில குவிண்டால் ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஏலம் போச்சு. தேனி மாவட்டத்துல இருந்து கம்பும், கிருஷ்ணகிரியில இருந்து கேழ்வரகும் இங்க வருது.

கோடை காலமா இருக்கறதால கம்புக்கான தேவையும் அதிகமா இருக்கு. கம்புக்கு வருஷம் முழுக்க நல்ல விலை கிடைக்குது. இன்னிய தேதியில ஒரு குவிண்டால் கம்பு, ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய்னு விலை போகுது. ஒரு குவிண்டால் கேழ்வரகு ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்'' என்றார்.

''எங்க பகுதியில் மிளகாய் விவசாயம் பிரதானம். அதுவும் மானாவாரி பயிரா நூத்துக்கணக்கான ஏக்கர்ல சாகுபடி

பண்றோம். நாங்க மிளகாயைப் பச்சையா விக்காம, வத்தலாக்கித்தான் விப்போம்.

இந்த சந்தையில மத்த ஊர்களைவிட, அதிக வியாபாரிகள் வர்றதால நல்ல விலை கிடைக்குது. அதனாலதான் நான் தூரம் பார்க்காம இங்க கொண்டு வந்துருக்கேன். எங்க ஊர்ல இருந்து நிறைய பேர் இங்கதான் வருவோம்.

200 மூட்டை வத்தல் மிளகாயைக் கொண்டு வந்தேன். குவிண்டால் ஆறாயிரம் ரூபாய்னு விலை தீர்ந்துடுச்சு. இப்படி நியாயமான விலை கிடைக்கறதால,

7 வருஷமா ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இங்க வந்துட்டுருக்கேன்' என்கிறார், கோவில்பட்டி அடுத்துள்ள கடலையூரிலிருந்து வந்திருந்த சக்திவேல்.

ஒழுங்கு முறை வேளாண் விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் சண்முகம், ''இது, 1936-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் முதன்முதலில் துவக்கப்பட்ட விற்பனைக்கூடம் இதுதான். பருத்தி விற்பனையில் முன்னணி வகித்த பெருமை இதற்கு உண்டு. தொடர்ந்து, 98-ம் ஆண்டு முதல் இங்கு

சிறுதானியங்கள் மற்றும் பயறுவகை விற்பனையும் துவங்கப்பட்டது.

சோளம், கம்பு, ராகி, பாசிப்பயறு, நரிப்பயறு, துவரை, எள், மல்லி, உளுந்து, கொண்டைக்கடலை, வத்தல் மிளகாய் மற்றும் தேங்காய் உள்ளிட விளைபொருட்கள் விற்பனையாகின்றன.

ஒவ்வொரு வாரமும் சராசரியாக 100 டன் முதல் 150 டன் வரை விளைபொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஓபன் டெண்டர், மறைமுக ஏலம், நேரடி விற்பனை என மூன்று முறைகளில் இங்கு வியாபாரம் நடக்கிறது. இதில், எந்த முறையில் வியாபாரம் நடந்தாலும், விவசாயிகளிடம் இருந்து, ஒரு பைசா கூட கமிஷன் வாங்குவதில்லை.

வியாபாரிகளிடம் மட்டும் 1% விற்பனை வரி வாங்குகிறோம். கொண்டு வரும் விளைபொருட்களை விற்க விரும்பாமல், கூடுதல் விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள், குறிப்பிட்ட அளவு சரக்கை எங்கள் குடோனில் இருப்பு வைக்கலாம். அதற்கு 2 லட்ச ரூபாய் வரை பொருளீட்டுக் கடனும் கொடுக்கிறோம்'' என்றவர்,

''வெளிமாவட்டங்களில் இருந்து, இங்கு விளைபொருட்களை விற்கவோ, வாங்கவோ வருபவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வரத்து மற்றும் இருப்பு விவரங்களைத் தெரிந்து கொண்டு வருவது நல்லது'' என்கிற தகவலையும் தந்து விடை கொடுத்தார்.

தொடர்புக்கு: தொலைபேசி: 0421-2212141.(காலை 10 மணி முதல் 5 மணி வரை)