வெற்றிக்கு வழி சொல்லும் விவேக தொடர்..!

கருவிகள்

ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், 'விவசாயம் ஒன்றே வாழ்க்கை' என்று உள்ளூரிலேயே தங்கி இருக்கும் உழவர்களுக்கு, உற்றத் தோழனாகக் கைகொடுப்பது... கருவிகள்தான்!

அத்தகையக் கருவிகள், அவற்றின் பயன்பாடு, அரசாங்கத்தின் மானியம் என அனைத்துத் தகவல்களும்

இப்பகுதியில் உங்களுக்குக் கிடைக்கும்!

நெல்லின் விலையோடு ஒப்பிடும்போது அரிசியின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பல விவசாயிகள் நெல்லை மதிப்புக்கூட்டி அரிசியாக மாற்றி விற்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அத்தகைய விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், குறைந்த செலவில் 'நெல் அவிக்கும் அண்டா' ஒன்றை வடிவமைத்துள்ளனர், மதுரை, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள்.

இக்கருவி பற்றி நம்மிடம் பேசிய மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் உதவிப் பேராசிரியர் பத்மநாதன்,

''கிராமப்புறங்களில் பெரிய அண்டாவில் நெல்லைக் கொட்டி, விறகுகளைப் பயன்படுத்தி அவிப்பார்கள். இதனால், நேரம் விரயமாவதோடு, விறகும் அதிகமாகத் தேவைப்படும். நெல்லும் சீராக வேகாது. இதனால், அரிசியின் தரம், நிறம் ஆகியவை குறையும்.

இதையெல்லாம் போக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான், 'நெல் அவிக்கும் அண்டா' (Paddy parboiling unit).

மூன்று அடி உயரமுள்ள இந்த அண்டா, மூடியுடன் கூடியது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இட்லி தட்டு போல சிறுசிறுத் துளைகளுடன் கூடிய தட்டுடன் இருக்கும். இதில் நீராவி சுற்றி வருமாறு பல கிளைகளுடன் கூடிய துளைகளுள்ள இரண்டடி அளவிலான குழாய் பொருத்தப்பட்டிருக்கும்.

நீரை ஊற்றி கொதிக்க வைக்கும்போது, நீராவி மூலமாக நெல் வேக வைக்கப்படுகிறது. குறைந்த நேரத்திலேயே சீராக நெல் வெந்து, குருணைகளில்லாத தரமான அரிசி கிடைக்கும். குறைந்த அளவு எரிபொருளே போதுமானது.

வீட்டிலுள்ள குப்பைகள், சிறு விறகுகளை வைத்தே எரித்து விடலாம். இந்த அளவுள்ள அண்டாவைப் பயன்படுத்தி, 100 கிலோ நெல்லை

45 முதல் 55 நிமிடங்களுக்குள் வேக வைத்து விடலாம்.

அரிசி மட்டுமில்லாமல், அவல், பொரி என்று மதிப்புக்கூட்டி விற்பவர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட அண்டா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருவியின் விலை 10 ஆயிரம் ரூபாய்'' என்றார்.

தொடர்புக்கு, பத்மநாதன், செல்போன்: 97888-20438

கருவி கிடைக்கும் இடம்: தலைவர், உணவு மற்றும் வேளாண் பதன்செய் பொறியியல்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422-6611272, 6611282.